Re: [உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

2012-07-19 திரி ஆமாச்சு

On Wednesday 11 July 2012 12:51 PM, A. Alauvdheen wrote:


*இணையத்தில் வெளிவருமா??*


இல்லை.

எதிர்காலத்திற்கு திட்டமிடலாம்.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


[உபுண்டு_தமிழ்]உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டம்

2012-07-10 திரி ஆமாச்சு

வணக்கம்,

டெபியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட உபுண்டு இயக்குதளம் இன்று கட்டற்ற 
இயக்குதளங்களுள் முன்னோடியாகத் திகழ்வதை நாம் அறிவோம். அதன் நீண்ட கால ஆதரவு 
அடிப்படையிலான வெளியீடு 12.04 அண்மையில் நிகழ்ந்தது.


அதன் குணங்களை எடுத்துரைக்கும் வண்ணமும் கட்டற்ற மென்மக் கோட்பாட்டை பறைசாற்றும் முகமாகவும் 
சென்னை எம். ஐ. டி மாணவர்களுடன் இணைந்து உபுண்டு 12.04 வெளியீட்டுக் கொண்டாட்டத்திற்கு 
ஏற்பாடு செய்துள்ளோம்.


 * இடம்: எம். ஐ. டி, குரோம்பேட்டை, சென்னை
 * தேதி: 21/07/2012 நேரம்: மாலை 1 மணி முதல் 4 வரை
 * நிரல்:
 o கட்டற்ற மென்மக் கோட்பாடு பற்றிய அறிமுகவுரை
 o உபுண்டு 12.04 தரும் வசதிகள் பற்றிய விளக்கவுரை
 o உபுண்டு நிறுவும் வழிமுறைகள் செய்முறை விளக்கம்

 * சிறப்பம்சங்கள்
 o நிகழ்வின் ஒரு பகுதியாக மடிணிகள் கொண்டு வந்து உபுண்டு நிறுவிக் கொள்ள 
ஏற்பாடு.
 o உபுண்டு சிடி - டிவிடி வேண்டுவோருக்கு முறையே ரூ. 20/-  ரூ 30/-
   விலைக்கு அவற்றைப் பதிந்து வழங்க ஏற்பாடு.
 o iso இமேஜாக தத்தமது USB டிஸ்குகளை கொண்டு வந்து ஆர்வமுடையோர் இலவசமாகவும்
   பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு.

வாருங்கள் உபுண்டுவோடு ஓர் உன்னத மாலைப் பொழுதிற்கு!

ஏற்பாடு: இந்தியன் லினக்ஸ் பயனர் குழு, சென்னை - உபுண்டு தமிழ்க் குழுமம் - எம் ஐ டி 
கணினிச் சங்க தன்னார்வலர்கள்.


--

ஆமாச்சு

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam