2009/3/27 M.Mauran | மு.மயூரன் <mmau...@gmail.com>:
> இவ்வழங்கல் தொடர்பான வலைப்பதிவு:
>
> http://tamilgnu.blogspot.com/2009/03/trincomalee-gnulinux-live-cd.html
>
> -மு. மயூரன்
>
> mauran.blogspot.com | noolaham.net | tamilgnu.blogspot.com
>

நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைய எனது வாழ்த்துக்கள்.

தொலை பேசியில் நாம் இன்று கதைத்தவாறு துல்லியம் கூட்டும் autohint
தொடுப்பு மற்றும் sans, serif, mono களின் தமிழ் எழுத்து வடிவங்களுக்கு
முன்னிருப்புகளை மாற்றீடுதல் பற்றிய முறைமைகளைப் பற்றி தாங்கள்
நிகழ்ச்சியின் பின் கொழும்பு வந்த பின் அவதானிக்கலாம்.

மயூரன் மற்றும் எல்லா நண்டபர்களுக்கும்:

முன்னர் தமிழ் இடைமுகப்பில் (அதாவது LANG=ta_IN) பயர்பாக்ஸ்
பயன்படுத்துகையில் லோகித் தமிழ் எழுத்துருவினால் ஏற்படும் நாம் "படருதல்
வழு" எனக்குறிப்பிட்டு வந்த
(http://ubuntuforums.org/showthread.php?t=889079) வழு, பயர்பாக்சின்
பிற்கால மேம்பாட்டால்  களையப்படுகிறது.

இந்திரிபெட் இறுவட்டை நிகழ்வட்டமர்விற்கு இயக்கினால் அதில்
உள்ளடக்கப்பட்டடுள்ளது Firefox 3.0.3. தமிழ் இடைமுகப்பில், அதன் வழியாக ,
காட்டாக http://www.unicode.org/review/  வலைத்தளத்தைப் பார்ப்பின்
இப்போதும் படருதல் வழு காணலாம்.

ஆனால் தற்போதைய Firefox 3.0.7 க்கு மேம்படுத்தின் அவ்வழு தோன்றுவது இல்லை. :>)

முன்னர் வழுவிற்கான காரணி பயர்பாக்ஸ் பயன்படுத்தும் xulrunner-1.9 என்பதை
சோதனைகள் வழியாக அறிந்தேன். Firefox 3.0.3 யை மேம்படுத்தாவிடினும்
முன்னைய xulrunner-1.9 (1.9.0.3+...) யை மட்டும் தற்போதைய xulrunner-1.9
(1.9.0.7+nobinonly-0ubuntu0.8.10.1) க்கு மேம்படுத்தினாலும் வழு
வருவதில்லை என்பது புலனாகியது.

ஹார்டியிலும் மேற்காட்டியவாறே.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க