வணக்கம்,

வருடா வருடம் செப்டம்பர் திங்கள் மூன்றாவது சனிக்கிழமை மென்விடுதலை நாளாக
கட்டற்ற மென்பொருள்[1] ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அது சமயம்
உலகம் நெடுகிலும் உள்ள குனு/ லினக்ஸ் பயனர் குழுக்கள் தத்தமது இடங்களில்
மென்விடுதலைக் குறித்த விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்த பல்வேறு
நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம்.

அதே போல் சென்னை மாநகரத்தில் மென்விடுதலை நாள் கொண்டாட்டங்கள் சென்னை குனு/
லினக்ஸ் பயனர் குழுவால், பிர்லா கோளரங்கத்தில் நடைபெற ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன. காலை 9.30 மணிக்கு தொடங்க உள்ள மென்விடுதலை நாள்
விழாவில், விளக்க உரைகளுக்கும் அரங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கலந்து கொண்டு பயனடைய அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 

மென்பொருளை பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் கீழ்க்காணும் சுதந்தரங்கள்
அளிக்கப்படுவதை, அரசியல் ரீதியாக உறுதி செய்யவைக்க ஒன்றுபடுவோமாக!
  
      * எப்பொருட்டும் நிரலினை இயக்கக் கூடிய சுதந்தரம். (முதலாவது
        சுதந்தரம்). 
      * நிரல் பணியாற்றும் விதத்தைக் கற்று தமது தேவைக்கேற்றாற் போல்
        ஆக்கிக் கொள்ளக் கூடியச் சுதந்தரம். (இரண்டாவது சுதந்தரம்).
        முதற்கண் நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப்
        பட்டிருத்தல் வேண்டும். 
      * பிறரும் பயனுற வேண்டி படி யெடுத்து விநியோகிப்பதற்கான சுதந்தரம்.
        (மூன்றாவது சுதந்தரம் ) 
      * ஒட்டுமொத்த சமூகமும் பயனுற வேண்டி, நிரலினை மேம்படுத்தி, செய்த
        மாற்றங்களைப் பொது மக்களுக்கு வெளியிடுவதற்கான சுதந்தரம். முதற்கண்
        நிரலின் மூலத்தினை அணுகக் கூடிய உரிமம் இதற்கு கொடுக்கப்
        பட்டிருத்தல் வேண்டும். (நான்காவது சுதந்தரம்)  

[1] - http://www.gnu.org/philosophy/free-sw.ta.html

--

ஆமாச்சு


-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க