On Thu, 2009-10-15 at 20:55 +0800, Elanjelian Venugopal wrote:
> வணக்கம்.
> 
> இங்கு மலேசியாவிலுள்ள 2 தமிழ்ப்பள்ளிகளில் உபுந்து இயங்குதளத்தைப்
> பயன்படுத்தும் இரண்டு கணினிக்கூடங்களை அமைத்துக்கொண்டிருப்பதாக சில
> மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தேன். இரண்டு கூடங்களும் இப்போது
> பயன்பாட்டிலுள்ளன. மூதல் கூடம் மே மாதத்திலும், இரண்டாவது ஜூலை
> மாதத்திலும் செய்து முடிக்கப்பட்டன. ஏறத்தாழ 500 மாணவர்கள் இதன்வழி
> பயன்பெற்று வருகின்றனர். (உடனிணைக்கப்பட்டுள்ள படங்களைக் காண்க.) வாரம்
> ஒரு மணி நேரத்திற்கு கணினியைப் பயன்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு
> வழங்கப்படுகின்றது.

மகிழ்ச்சியான செய்தி.

> 
> இக்கூடங்கள் தமிழைத் தொடர்பு மொழியாகக் கொண்டுள்ளன. மென்பொருள்களும்
> ஓரளவிற்கு தமிழிலேயே உள்ளதால், பாடங்களைத் தமிழில் நடத்துவது சிக்கலாக
> இல்லை. தற்போது, நான்கு படிநிலைகளிலான தகவல் நுட்பியல் பாட திட்டமொன்றை
> ஆசிரியர் குழு ஒன்று மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. இவ்வாண்டு
> இறுதிக்குள் முதல் இரண்டு படிநிலைகளை முடித்து விடுவார்கள் என்று
> எதிர்பார்க்கின்றேன்.
> 

மிக்க மகிழ்ச்சி. கேரள அரசின் i...@school திட்டத்தில் இருக்கும்
நல்லம்சங்களையும் கருதவும். http://itschool.gov.in/ 

தாங்கள் பின்பற்றும் வழிமுறைகளையும் ஆவணப்படுத்திகால் இங்கேயும் மற்ற
தமிழ்ப் பிரதேசங்களிலும் தொடங்க முன்னுதாரணமாகத் திகழும்.

> இவ்விரண்டு கூடங்களும் சிறப்பாக நடப்பதால், இன்னும் 8 கணினிக்கூடங்களை
> அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். உள்ளூர் வானொலி நிலையமொன்று 3
> கணினிக்கூடங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே போல் சிலாங்கூர் மாநில
> அரசும் இவ்வாண்டு இறுதிக்குள் 3 கணினிக்கூடங்களை அமைத்துத் தருவதாக
> உறுதிமொழி அளித்துள்ளனர். எனது அமைப்பின்வழி மீதம் 2 கூடங்கள் அடுத்த
> ஆண்டு மேம்படுத்தப்படும்.
> இக்கணினிக்கூடங்களினால் ஆண்டுக்கு 4,000க்கும் மேற்பட்ட ஆரம்பக்கள்ளி
> மாணவர்கள் பயன்பெறுவர்.
> 

மிக்க மகிழ்ச்சி.

> இத்திட்டம் இந்த அளவிற்கு வந்ததற்கு நீங்கள் அனைவரும் இதுவரை மறைமுகமாக
> அளித்து வந்த உதவியும் காரணம். நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த
> முயற்சியால்தான் இன்று தமிழை அடிப்படை மொழியாகப் பயன்படுத்தும்
> கணினிக்கூடங்களை எங்களால் அமைக்க முடிகின்றது. உங்கள் அனைவரது அரும்பணி
> என்றும் தொடர வேண்டுகிறோம்.
> 

அவசியம் தொடரும். பயன்படுத்துவோர் பெருக வேண்டும் என்பதே அனைவரது ஆவலும்.

> இவ்வேளையில், உபுந்து தமிழாக்கப் பணியை துரிதப்படுத்துவதற்காக
> எங்களிடத்திலிருந்து ஏதாவது உதவி வேண்டுமெனில் தயைகூர்ந்து கேளுங்கள்.
> ஒருவேளை நீங்கள் மலேசியா வர விரும்பினால்கூட தயங்கமின்றி கேற்கவும்;
> வரவேற்க காத்திருக்கின்றோம்!
> 

ஆகா! 

கண்டிப்பாக பங்களிப்புகள் தேவைப்படுகின்றன. தர மேம்பாட்டில். குநோம்
சூழல்தானே பயன்படுத்தறீங்க?

நாடோடியை பார்த்து இப்படி வரவேற்பு ஆசை காட்டலாமா? ;-)

--

ஆமாச்சு

Attachment: signature.asc
Description: This is a digitally signed message part

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க