லினக்சில் தமிழ் தட்டச்சு செய்வதற்கு உரிய நிரல்களை  தரமுடியுமா?
முயற்சித்து பார்க்கலாம்?


2009/10/25 கா. சேது | කා. සේතු | K. Sethu <skh...@gmail.com>

>
> 2009/10/24 ramadasan <ama...@ubuntu.com>
>
>>  பயனரின் பார்வையில் புத்தகம் பற்றி விவாதிக்கப்பட்டது.  விரைந்து முடிக்க
>> வலியுறுத்தப்பட்டது. கார்மிக் கோலா புதிய வெளியீடாகையால் அதற்கேற்றாற் போல்
>> மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
>>
>>
> ஆறு மாத்திதற்கு ஒரு முறை என புதிய வெளியீடு வரும் வழக்கம் இத்தகையப்
> புத்தகமொன்றின்  ஆக்கத்தை கடினமாக்குகிறது எனக் கருதுகிறேன்.
>
> ஆண்டு தோரும் ஏப்பிரலில் வரும் yy.04 வெளியீட்டில்தான் yy.10 வெளியீட்டில் விட
> கூடுதல் மாற்றங்கள் உள்ளட்டக்கப்படும் வழக்கம் உள்ளதாக முன்னர் யாரோ
> குறிப்பிட்டிருந்ததை எங்கோ ஒரு வலைபக்கத்தில்  பார்த்திருக்கிறேன். ஆனால்
> உள்ளிடல் முறைமைகளில் முன்னிருப்பு நிலை மாற்றம் (scim குப் பதில் ibus),
> grub->  grub2 மேம்பாடு, Add Remove Programs க்குப் பதில் Ubuntu Software
> Centre என பல மாற்றங்களை அவதானிக்கையில் 8.10 க்கும் 9.04 க்கும் இடையே உள்ள
> மாற்றங்கள் விட 9.04 க்கும் 9.10 க்கும் இடையேதான் மாற்றங்கல் கூடுதலாக
> உள்ளதாகவே எனக்குப் புலப்படுகிறது.
>
> காட்டாக கொவாலாவில் முன்னர் போலல்லாது m17n விசைபலகைகள் எல்லாம் இறுவட்டிலே
> வருவதுடன் நிறுவலின் போதே சேர்க்கப்பட்டுவிடுகின்றன. ஆனால் scim தொடர்பான
> பொதிகள் உபுண்டுவின் main வழங்கியிலிருந்து பெற்று நிறுவ வேண்டியுள்ளது.
>
> ibus வழி m17n இயக்கம் இலகுவாகவே இருப்பினும்  மேலும் மாறக்கூடிய உள்ளீடு
> தொடர் ஒன்று உள்ளிட்டு முடியும் வரை ஒரு கறுமையான highlight (backlight)
> இருப்பது தொந்தரவானது. (ஸிம் இயக்குகையில் scim-tables விசைப்பலகைகள்
> சிலவற்றில் அவ்வாறு முற்காலங்களில் கண்டிருக்கிறேன்). மேலும் scim-tables
> களுக்கான 3 விசைப்பலகைகள் இன்னமும் ibus-tables க்கு கொணரப்படவில்லை போலும்.
> அவற்றில் இன்ஸ்கிரிப்ட் மற்றும் ஃபொனடிக் (ஷப்தலிபி) ஆகியன m17n இலும் ஏற்கனவே
> உள்ளனவைகளே. ஆனால் இரெமிங்கடன் பயன்படுத்துவோருக்கு scim அவசியமாகிறது.
>
> எனவே ibus தற்போதைக்கு scim இன் இடத்தை எடுக்கப்போவதில்லை. ஆனால் வரும்
> வருடங்களில் scim மேம்பாடுகளும் பயன்பாடும் வெகுவாகத் தேயலாம். தற்போது துரித
> தொடர் வளர்ச்சி பெற்று வரும் ibus மற்றும் மெதுவாகவே வளரும் imbus ஆகியனவற்றில்
> ஒன்று பெறும்பான்மை விருப்பப் பயன்பாடு ஆகலாம்.
>
> அடுத்த வருட ஏப்பிரலில் வரவுள்ள 10.04 லூசிட் (அல்லது லுசிட்) லின்க்ஷ் (Lucid
> Lynx) [ http://fridge.ubuntu.com/node/1914 ] நீண்டகால (LTS - 3-years)
> துணையுடன் வரவுள்ளது.
>
> எனவே தற்போது உள்ள பயனர் பார்வைக்கான ஆக்கங்களை 9.10 வெளிவந்து 3
> மாதங்களுக்குள் ஒரு முற்பதிப்பாக மட்டும் வெளியிட்டு பலர் கருத்துகள் அறிந்து
> அதன் பின் 2010 june -july காலத்தில் லூசிட்டில் உள்ள மாற்றங்கள் பார்த்த பின்
> 3 வருடங்களுக்கு தாக்குபிடிக்கக் கூடிய இறுதியாக்கம் வெளியிடலம் எனக்
> குறிக்கோள் கொளலாமே ?
>
> ~சேது
>
>
>
>
>> காஞ்சியிலும் சேலத்திலும் நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் பற்றி பகிர்ந்து 
>> கொள்ளப்பட்டது.
>>
>> தமிழ் எழுத்துப் பிழைத் திருத்திக்காக ஒரு இலட்சம் சொற்கள் தமிழ் லெக்சிகனில் 
>> இருந்து எடுத்து சேர்க்கப்பட்டுள்ளது. இது பெடோரா 12 இல் ஹன்ஸ்பெல்லில் 
>> தெரியவரும்.
>>
>> இன்டிக் ஆன்ஸ்கிரின் கீ போர்டுக்கான டெபியன் பொதி உருவாக்கப்பட்டுள்ளது.
>>
>> xkb விசைப் பலகைக்கு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. xkb tamil unicode 
>> விசைப்பலகைக்கு எண்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
>>
>> OCR & தமிழ் நாட்காட்டி திட்டங்களில் பங்களிக்க மாணவர்கள் முன்வந்துள்ளனர்.
>>
>> உபுண்டு தமிழ்க் குழுமம் பல்வேறு இடங்களில் நடத்திய நிகழ்ச்சிகளின் வாயிலாகவும் 
>> வட்டுக்களைப் பகிர்ந்து கொண்டதன் மூலமாகவும் திரட்டிய நிதியைக் கொண்டு பொதுவான 
>> அறக்கட்டளை உருவாக்கப்படும்.
>> *அறக்கட்டளையின் நோக்கங்கள்:*
>>
>> பகிர்ந்தும் எப்பொருட்டும் பயன்படுத்தத் தக்கதாக, படைக்கப்படும் 
>> மென்பொருள்களைக் கிடைக்கச் செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளுதல்.
>>
>> அத்தகைய மென்பொருள்களின் உருவாக்கத்திற்கும் பயன்பாட்டுப் பெருக்கத்திற்குமான 
>> செயல்களில் ஈடுபடுதல்.
>>
>> --------------
>>
>> நாளை ஞாயிற்றுக் கிழமை மாலை மூன்று மணிக்கு irc.freenode.net வழங்கியின் 
>> #ubuntu-tam அரங்கில் விவாதம் நடைபெறும்.
>>
>> கலந்து கொள்ள http://webchat.freenode.net/ பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.
>>
>> --
>>
>> ஆமாச்சு
>>
>>
>>
>>
>> --
>> Ubuntu-l10n-tam mailing list
>> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>>
>>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
M.S.Murali (B+ve)
99430-94945
----------------------------
www.visualmediaa.com
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க