நாம் விரும்பிப் பயன்படுத்தும் இயங்கு தளங்களாக கட்டற்ற இயங்கு தளங்கள் திகழத் தொடங்கி விட்டன. பெடோரா, டெபியன், ரெட்ஹாட், பாஸ், ஜென்டூ, உபுண்டு என இவை பல வடிவங்களில் கிடைத்து நாம் விரும்பியதை தேர்வு செய்து பயன்படுத்தும் சுதந்திரத்தை நமக்கு அளிக்கின்றன. இவை என்னுடயை மொழியில் கிடைக்க வேண்டும் என்பது தாய்மொழிப்பற்றுடைய எவரும் கொள்ளக் கூடிய விருப்பமாகும்.
இதனையே நோக்கமாகக் கருதி பல்வேறு மொழிப்பெயர்ப்பு குழுக்களும் பணியாற்றி வருகின்றன. அவற்றின் மூலம் பங்களிப்போருக்கும் புதிதாய் மொழிப்பெயர்க்க வருவோருக்கும் அடிக்கடி எழும் கேள்வி ஒரு சொல்லுக்கு நிகரானத் தமிழ்ச் சொல் என்ன என்பதே. ஒரே பொருளைக் கொண்ட பலச் சொற்கள் இருக்கலாம் என்ற போதும் அவை ஒரே பணிச் சூழலில் வெவ்வேறு பகுதிகளில் பிரதிபலிப்பது இயங்குதளத்தை பயன்படுத்துவோருக்கு அனாவசியச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இவற்றை போக்கும் ஒரு முயற்சியாக பெடோரா சமூகம், நாம் குனு லினக்ஸ் பணிச் சூழல்களை அன்றாடம் பயன்படுத்துகிற போது அதிகம் காண நேரிடும் சொற்களையும் சொற்றொடர்களையும் தொகுத்து அவற்றுக்கு நிகரான பிறமொழிச் சொல்லாக்க முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இவை பெடோரா குழுமத்திற்கே அன்றி அனைத்து கட்டற்ற மென்பொருள்களின் மொழிபெயர்ப்பு முயற்சிகளுக்கும் பயனளிக்கக் கூடியவை. இத்திட்டத்தை பெடோரா குழுமத்தார் Frequently Used Entries For Localisation (FUEL)[1] என்று அழைக்கிறார்கள். இப்பதங்களுக்கான தமிழாக்கப் பரிந்துரைகள் கோரும் நிகழ்ச்சி டிசம்பர் மாதம் பன்னிரெண்டாம் தேதியும் பதிமூன்றாம் தேதியும் சென்னை தரமணியில் அமைந்துள்ள CDAC அலுவல வளாகத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டு தங்களது பரிந்துரைகளை அளிக்க விருப்பமுடையோர் எமது amachu at au-kbc dot org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். நேரடியாக கலந்து கொள்ள இயலாதோரும் பங்கு கொள்ள ஏதுவாக இணைய வழியிலும் சமகாலத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். அத்தகையோர் நிகழ்ச்சி நடைபெறும் நாட்களில் IRC மூலம் கலந்து கொள்ளலாம். irc.freenode.net வழங்கியின் #fedora-tamil அரங்கின் மூலம் தங்களது பரிந்துரைகளை வழங்கலாம். இந்நிகழச்சியின் ஏற்பாட்டுக் காரியங்களிலும் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுடையோர் எம்மை தொடர்பு கொள்ளவும். இரண்டு நாட்களிலும் அமர்வுகள் காலை பத்து மணிக்குத் தொடங்கி மாலை ஐந்து மணி வரை நடைபெறும். பரிந்துரைகள் வேண்டப்படும் சொற்கள் http://svn.fedorahosted.org/svn/fuel/fuel-tamil/fuel_tamil.ods கோப்பில் கிடைக்கப் பெறுகின்றன. ----------- நிகழ்ச்சி நிரல் ----------------- நோக்கம்: குனு வினக்ஸ் பணிச் சூழல்களில் அன்றாடம் அதிகம் பயன்படுத்த நேரிடும் பதங்களுக்கு நிகரான தமிழ்ச் சொல்லாக்கம் தேதி: 12/12/2009 & 13/12/2009 இடம்: 1) CDAC சென்னை, தரமணி 2) #fedora-tamil at irc.freenode.net நேரம்: காலை 10 மணி தொடங்கி மாலை 5 மணி வரை ----------------------------- [1] - https://fedorahosted.org/fuel/ & https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam