On Mon, 2009-12-14 at 12:54 +0530, Yogesh wrote: > எனக்கு தமிழ் ஓரளவிற்கு எழுதத்தெரியும் .. உபுண்டு லினக்ஸ் ஐ தான் > பயன்படுத்துகிறேன் .. ஆதலால் சிறு சிறு திருத்தங்களையும் ஒரு சில > வழிகாட்டிகளையும் (guide / how-tos) என்னால் தர இயலும். எவ்வகையான உதவி > மிகவும் தேவைப்படுகிறது என்று சொல்லமுடியுமா? அதற்கு ஏற்றாற்போல் என்னால் > உதவி புரிய முடியுமா என்று பார்கிறேன்..
தங்களுக்கு விக்கியில் எழுதும் பழக்கம் இருக்கிறதா? தாங்கள் தொடர்ச்சியாக இணைய வசதி கிட்டக்கூடிய நிலையில் இருக்கிறீர்களா? இல்லைன்னா கவலை வேண்டாம் ;-) நாம் அதற்கேற்றாற் போல திட்டமிடணும், அதுக்குத் தான். நாம் முன்னர் கூட்டு முயற்சியில் கையேடு இயற்று முற்பட்ட போது இவையே பங்களிப்போரிடையே நிலவிய முக்கியமான இடராக இருந்தன. பங்களிப்புகள் பற்றிய வினாக்களையும் விவாதங்களையும் நாம் http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam மடலாடற் குழுவில் மேற்கொள்ளுதல் நல்லது. இம்மடலாடற் குழுவை உபுண்டு பயன்பாடு தொடர்புடைய சந்தேகங்களுக்கும் விளக்கங்களுக்கும் பயன்படுத்தலாம். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam