2009/12/31 Yogesh <yogeshg1...@gmail.com>: > > > 30 டிசம்பர், 2009 8:17 pm அன்று, கா. சேது | කා. සේතු | K. Sethu > <skh...@gmail.com> எழுதியது: >> >> தற்போதைக்குத் தாங்கள் அவ்விரு விசைமாற்றிகளுக்கான கோப்புக்களை gedit >> அல்லது kate போன்ற உரைதிருத்தியில் திறந்து அடிப்படை அகர - உயிர்மெய் >> மற்றும் உயிர் எழுத்துக்கள் என்பனவற்றிற்காக map செய்யப்படும் ஆங்கில >> விசைகள் அல்லது விசைத்தொடர்களை அறியலாம். > > சேது, > மிக்க நன்றி. நான் LaTeX இல் கோப்புகளை உருவாக்க பழகி வருகிறேன். வழக்கமாக > gedit இல் லேடெக்ஸ் - க்கான script ( தமிழாக்கம் தெரியவில்லை. மன்னிக்கவும் ) > களை எழுதி அவற்றை சேமித்து pdf ஆக மாற்றி பயன்படுத்துகிறேன். gedit இல் தமிழில் > எழுதினால் லேடெக்ஸ் இல் அது சரிவர தெரியுமா? யாராவது அவ்வாறு முயற்சி > செய்ததுண்டா? > -- > நன்றி, > யோகேஷ். >
நான் உரையொன்றை pdf ஆக்க வேண்டுமாயின் ஓபன் ஆபிசு - ரைட்டர் பயன்படுத்துகிறேன். உரையில் தமிழ் உள்ளடக்கப்பட்டிருப்பினும் pdf இனுள் எழுத்து உருவாக்கம் சரியாகவே அமைகின்றது. Tex, LaTeX போன்றவைகள் பற்றி நான் இதுவரை கற்றதில்லை. தற்போது நான் பயன்படுத்தும் உபுண்டு 9.10 இல் text, texlive, latex, latexmk தொடர்பான பல பொதிகளை நிறுவி வைத்திருக்கிறேன். அவை போதிய நேரம் கிடைத்தால் அவற்றைபற்றி கற்க வேண்டும் என நோக்கத்துடன். தாங்கள் LaTeX பயன்படுத்துவதற்குக் காரணம் என்ன ? Open Office - Writer பயன்படுத்துவதில்லையா ? //gedit இல் தமிழில் எழுதினால் லேடெக்ஸ் இல் அது சரிவர தெரியுமா?// அதல் "லேடெக்சில்" என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்? Texmaker என்ற வரைகலை இடைமுகப்புடனான செயலியில் எனில் அதில் உள்ளிடும் தமிழ் உரை உருவாக்கங்கள் சரியாகவேத் தெரிகின்றன. மாறாக தாங்கள் ஒரு முனையத்தில் Latex ஆணையுடன் tex கோப்பை இயக்குவது பற்றிக் குறிப்பிடுகிறீர்களா?. அப்படியாயின் gnome மற்றும் xfce முனையங்களில் தமிழ் எழுத்துக்கள் வாசிக்க இயலாதவாறு எழுத்து உருவாக்கம் அற்றுத்தான் தெரியும். ஆனால் kde இனாரல் வழங்கப்படும் Konsole என்ற முனையத்தில் ஓரளவு வாசிக்கலாம். அதில் மெய்களில் புள்ளி மற்றும் ஊகார உயிர்மெய்களில் சுழி ஆகியன தோற்றமாகமல் வரும் வழுக்கள்தான் உள்ளன. ஏனைய ஒருங்குறி சிக்கல் எழுத்துக்கள் உருவாக்கங்கள் சரியாகவேத் தோன்றுகின்றன. தங்கள் பதிலில் LaTeX பயன்படுத்த வேண்டியிருப்பதற்கான காரணமும் தாங்கள் எவ்வாறு அவற்றைப் பயன்படுத்துகிறீர்கள் என்பன பற்றியும் அறியத் தாருங்கள். எனது கற்கைக்கு உதவும். நன்றி. ~சேது -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam