வணக்கம், முதலில் என்னை மண்னியுங்கள், தமிழில் அதிக அலவில் தவறுகள் செய்பவன் நானாகத்தான் இருப்பேன். இது எனது முதல் தமிழ் மின்அஞ்சல்.
நன் டெபியன் + எக்ஸ்எப்சிஈ இயங்குதலத்தை பயன்படுத்தி வருகின்றேன், எக்ஸ்எப்சியின் எளிமையும், வேகமும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. ஆகவே, அதனை தமிழாக்க விரும்புகிறேன். முதல் முயற்ச்சியாக, இரண்டு PO கோப்புகளை மொழிபெயர்த்துள்ளேன், http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/libxfcegui4-xfce-4.6.po http://github.com/mohan43u/Xfce_l10n_ta/blob/master/xfce-utils-xfce-4.6.po இதற்க்கு கீழ்கானும் வலையகத்தையும், http://www.tamildict.com மற்றும் அண்ணா பல்களைகழகமும், வளர்தமிழ் மன்றமும் உருவாக்கியுள்ள http://www.scribd.com/doc/2421484/Tamil-Technical-Computer-Dictionary கோப்பையும் பயன்படுத்தி இருந்தேன். இக்குழுவிற்கு என் வேண்டுகோள் என்னவென்றால், என் மொழிபெயர்ப்பில் பிழையிருந்தால் திருத்தவும். மேலும் தமிழ் மொழிபெயர்ப்புக்கு தேவையான முலங்களை சுட்டிக்காட்டவும். தற்போது மற்ற பனிச்சூழல்களை(கேடிஈ, ஜினோம்) மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும் மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து உதவியை எதிர்பார்க்கின்றேன். நன்றி, மோகன் .ரா -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam