On Sat, 2009-12-12 at 06:56 +0530, கா. சேது | කා. සේතු | K. Sethu wrote:
> > இவ்வருட ubuntu-tam குழும மடல்களைப் பார்க்கையில் அங்கு அநேகமாக > அறிவிப்புக்கள் மட்டும் பதிக்கப்படுகின்றன எனத் தெரிகிறது. > ஆம். அங்கே அதிக கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படும் காலம் விரைவில் மலரும் என எதிர்பார்ப்போம். > எனது கருத்தேற்றங்கள் : > > i) ubuntu-tam - தொழில்னுட்ப உரையாடல்கள் மற்றும் பயனர்கள் > வினா-மறுமொழிகள் ஆகியனவற்றிற்கு > > ii) ubuntu-l10n-tam - அதன் தலைப்பில் உள்ளவாறு தமிழாக்கம் தொடர்பான > உரையாடல்களுக்கு > இவ்வகையிலேயே தற்போதும் அமைந்துள்ளது. மேலும் நாம் மேற்கொள்ள முனைந்துள்ள திட்டங்களுக்கு லாஞ்சுபேடில் இருக்கும் திட்டங்களிலேயே மடலாடற் குழுக்களும் இடம்பெற்றுவிடுகின்றன. > iii) மேலும் பொதுவான அறிவிப்புகளுக்கு என தனி > குழுமம் lists.ubuntu.com இல் அமைக்க இயலுமாயின் அறிவுப்புகளுக்கு அது. > இயலாவிடில் தற்போது போல அறிவிப்புகளை மேல் இரண்டிலும் பதியாலம். தற்போதைக்கு மேற்கூறிய இரு மடலாடற் குழுக்களிலும் சேர்த்து பதிந்து கொள்ளலாம். தொடர்ச்சியாக பொறுப்பாற்றக் கூடியோர் வருகிறபோதும் மடல்கள் அதிகம் சேரத் தொடங்கும் கால கட்டங்களில் இதைப் பற்றிய முடிவு மேற்கொள்ளலாம். -- ஆமாச்சு -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam