கண்காட்சியில் கலந்துக்கொண்டு கட்டற்ற மென்பொருள் பற்றி கருத்துகளை தருமபுரி மக்களுக்கு எடுத்துரைக்க சென்னையிலிருந்து வந்தமைக்கு ஆமாச்சு , செல்வமுரளி மற்றும் நாகராஜ் ஆகியோருக்கு உபுண்டு குழுமத்தின் சார்பாக நன்றியினை தெறிவத்துக்கொள்கிறேன்
மேலும் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே பார்க்கவும் http://picasaweb.google.com/thangam.arunx/UbuntuStallEducationAndInformationTechnologyExhibitionDharmapuri 31 மே, 2010 7:25 am அன்று, ஆமாச்சு <ama...@ubuntu.com> எழுதியது: > வணக்கம், > > தருமபுரி, மக்கள் வாழ்வுரிமை அறக்கட்டளை சார்பில் "கல்வியும் தகவல் > தொழில்நுட்பமும்" என்கிற தலைப்பில் நேற்றைய தினம் கண்காட்சியும் கருத்தரங்கமும் > நடைபெற்றது[1]. இதில் உபுண்டு தமிழ்க் குழுமம், யாவர்க்குமான மென்பொருள் > அறக்கட்டளை சார்பில் கலந்து கொண்டு கண்காட்சிக்கு வருகை புரிந்த மக்களுக்கு > கட்டற்ற > மென்பொருள் பற்றிய கோட்பாட்டு ரீதியான விளக்கங்களையும் உபுண்டு இயங்குதளம் > பற்றிய சிறப்புகளையும் எடுத்தியம்பினோம். > > தங்கமணி அருண், ஆமாச்சு, நாகராஜ், செல்வமுரளி ஆகியோர் கண்காட்சியில் கடைவைத்து > வருகை புரிந்து வேண்டியோருக்கு விளக்கங்களை அளித்தும் கட்டற்ற மென்பொருள் > புத்தகம் உபுண்டு டிவிடி உள்ளிட்டவற்றை அளித்தவண்ணமும் இருந்தனர். > செல்வமுரளிக்கும் தங்கமணி அருணுக்கும் தருமபுரியாகிய தகடூர் சொந்த ஊர். > இந்திகழ்ச்சி > கடந்த 03/02/2008[2] அன்று தொடங்கி வைக்கப்பட்ட தீர்த்தமலை தகவல் தொழில் நுட்ப > பயிற்சி மையத்தின் ஒரு தொடரச்சியாகும். அவ்விடத்தே விரைவில் > கட்டற்ற மென்பொருள் பயிற்சிகளும் தொடங்கவிருக்கின்றன. > > நிகழ்ச்சிக்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் டில்லி பாபு தலைமை வகிக்க, இற்திய > ஜளநாயக வாலிபர் சங்க, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொறுப்பாளர்கள் > பலர் கலந்து கொண்டு வழி நடத்தினர். தருமபுரி பகுதி வாழ் மாணவர்களுக்கு > அப்பகுதியில் இருக்க கூடிய கல்வி வேலை வாய்ப்புகள், வங்கிகளில் > கிடைக்கூடிய கல்விக் கடன் போன்ற பல்வேறு ஐயங்களுக்கு விளக்கங்கள் > அளிக்கப்பட்டன. > > நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்திய தோழர்களுக்கும், சென்னை ஸ்கொயர் நெட்வொர்க் > ஸொல்யூசன்ஸ் பாலாஜிக்கும், அரூர் சட்டமன்ற உறுப்பினர் டில்லிபாபுவிற்கும் > எங்களது > நன்றிகளை உரித்தாக்குகிறோம். > > [1] - http://www.dinamalar.com/News_Detail.asp?Id=9102 > [2] - http://comments.gmane.org/gmane.org.user-groups.linux.ilugc/50313 > > -- > > ஆமாச்சு > > -- > Ubuntu-l10n-tam mailing list > Ubuntu-l10n-tam@lists.ubuntu.com > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam > -- அன்புடன் அருண் ------------------------------ http://ubuntu-tam.org http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam http://lists.ubuntu.com/ubuntu-tam ------------------------------
-- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam