வணக்கம்
* உபுண்டு 12.04 வெளியீட்டு கொண்டாட்டம் ஒன்று நடத்த வேண்டும். ILUGC யிலும் இது
குறித்து விவாதங்கள் போகின்றன. இணைந்து செய்யப்பார்க்கலாம். சிங்கை இலங்கை உள்ளிட்ட பிற
இடங்களிலும் கொண்டாடலாம். அங்கிருப்போர் தெரியப்படுத்துங்கள்.
* இதுவரை லாஞ்சுபேட் குழுவில் இணைய/ இணைக்க எந்த வித எதிர்பார்ப்புகளும் சாம்
வைத்ததில்லை. இனி அவ்வாறு அல்லாது இணைவோர் உபுண்டு தமிழ்க் குழுமத்தின் வாயிலாக என்ன
மேற்கொள்ள விழைகின்றனர் என்பதை விவரிக்க வேண்டும். பிற்பாடு மாதாந்திர ஐ ஆர் சி
உரையாடலில் கலந்து கொண்டு அவற்றை மேற்கொள்ள விழையும் வழிமுறைகளை மற்றோருக்கு அறியத்
தர வேண்டும். தொடர்ச்சியான சிறிய அளவிலான பங்களிப்பேனும் தருவது நல்லது. இப்போதைக்கு
இருப்போரது நிலையில் மாற்றங்கள் ஏதும் இல்லை.
* மொழிபெயர்ப்பு - ஆவணமாக்கம் போன்றவை முக்கியம். இதெற்கென ஒரு குழு வேண்டும்.
* இவற்றை தாண்டி - வீடியோ ஆடியோ டுடோரியல்கள் செய்ய வேண்டும். - இதெற்கெனவும் குழு
வேண்டும்.
* நம்மில் சிலர் உபுண்டு உருவாக்குநர் ஆக முன்வர வேண்டும். உபுண்டு உருவாக்குநர் ஆகிக்
காட்டுவதோடு அடுத்த எல் டி எஸ் வரும் போது தமிழ் வழியில் பயிற்னு உபுண்டு உருவாக்குநர்
ஆன இரண்டு மூன்று பேரையாவது நாம் உருவாக்கிக் காட்ட வேண்டும். இதற்கு வேண்டியயன வற்றை
கொணர யாவரக்குமான அறக்கட்டளையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
* என்னென்ன பயன்பாடுகள் தேவைப்படுகின்றன என்பதை பட்டியலிட்டு அவற்றை உருவாக்க
செயற்திட்டம் வகுத்து செய்ய வேண்டும். அவை உருவாக்கப்பட்டு உபுண்டு ரெபாசிட்டரியில்
இடம்பெறும் அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும். நிரவாக்க குழு ஒன்று அமைக்க வேண்டும்.
வேண்டிய வளங்களைத் திரட்ட யாவர்க்கும் அறக்கட்டளையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
* வழுக்கள் தெரிவிப்பது - வழுக்கள் களைவதற்கு நம்மில் ஒரு குழு வேண்டும்.
இவையனைத்தும் தமிழில் ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
மேற்கூறியவை பொதுவாக உபுண்டு தமிழ்க் குழிமத்திற்காக நான் முன்வைக்கும் செயற்திட்டங்கள்.
இவை ஒவ்வொன்றிற்கும் தனித்தனி செயற்திட்டங்கள் தேவை. உங்களில் யாரார் இவற்றை எடுத்துக்
கொள்ள முன்வருகிறீர்கள் என்று தெரிவியுங்கள். மேற்கொண்டு எடுத்துச் செல்லலாம்.
--
ஆமாச்சு
--
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam