http://www.kaniyam.com/release-19/
வணக்கம். ‘கணியம்‘ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வாசகர் அனைவருக்கும் சில மகிழ்ச்சியான செய்திகள். சென்ற சில மாதங்களுக்கு முன், நாம் திட்டமிட்ட ‘கட்டற்ற தமிழ் மின்னூல்கள்‘ http://FreeTamilEbooks.com தனது முதல் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுதும் ‘க்னு லினக்ஸ் நிறுவல் விழா‘ கொண்டாடப்படுகிறது. விவரங்கள் உள்ளே. MySQL க்கு புத்தகம் எழுதிய நித்யா அவர்கள் ‘எளிய தமிழில் GNU/Linux’ ன் முதல் பாகத்தை வெளியிட்டுள்ளார். இங்கே பதிவிறக்கம் செய்யலாம். http://www.kaniyam.com/gnu-linux-book-in-tamil-part1 மேலும், இந்தியா முழுதும் இந்த மாதம் ‘பைதான் மொழி மாதம்‘ என கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பைதான் பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்படுகின்றன. உங்கள் ஊரிலும் நடத்த எங்களுக்கு எழுதவும். http://in.pycon.org/2013/python-month இந்த இதழை சிறப்பாக வடிவமைத்த ‘ஆளுங்க‘ அருண் அவர்களுக்கு நன்றிகள். கணியம் இதழின் படைப்புகள் அனைத்தும், கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகின்றன. இதன் மூலம், நீங்கள் o~யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். ~o~ திருத்தி எழுதி வெளியிடலாம். ~o~ வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூல கட்டுரை, ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும். நன்றி. ஸ்ரீனி ஆசிரியர், கணியம் edi...@kaniyam.com பொருளடக்கம் எளிய தமிழில் GNU / Linux – மின்நூல் க்னு / லினக்ஸ் நிறுவல் விழா 2013 (GNU/Linux Install Fest 2013) லுபன்டு - ஒரு பார்வை கட்டற்ற மென்பொருளும் அறிவியலும் – பகுதி III ஒரு சமூகமாக சோதித்தல் : நீங்கள் உபுண்டுவிற்கு உதவுவது எப்படி? காலிபர் (Calibre) – மின் நூலகம் எளிய தமிழில் WordPress – 3 ஹெ.டி.எம். எல்- 5 பட விளக்கம் எளிய செய்முறையில் C/C++ – பாகம் 8 எளிய GNU/Linux commands துருவங்கள் உபுண்டுவின் 4 பொழுது போக்கு விளையாட்டுகள் 4 Digits - என்னைக் (எண்ணை) கண்டுபிடிங்க!! லினக்ஸ் கட்டளைகள் – தமிழ் விளக்கம் நீங்களும் பங்களிக்கலாமே கட்டற்ற மென்ம தொழிற் பயிலர் தேவை ஓபன் சோர்ஸ் தொடர்பான பணிகளில் ஈடுபடும் நிறுவனங்கள் கணியம் வெளியீட்டு விவரம் -- Regards, T.Shrinivasan My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com Get CollabNet Subversion Edge : http://www.collab.net/svnedge -- Ubuntu-l10n-tam mailing list Ubuntu-l10n-tam@lists.ubuntu.com https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam