வணக்கம்,

இத்துடன் விக்சனரி மற்றும் ஏனைய சந்தர்பங்களில் விவாதித்ததின் விளைவாய் கிடைத்த
குனு/ லினக்ஸ் சார் பதங்களுக்கு நிகரான  தமிழ் சொற்களின் பட்டியலை  தொகுத்து
வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

இணைப்பு: http://www.ubuntu-tam.org/downloads/hacker_agarathi_alpha.ods
கடந்த  ஒரு வருடத்துக்கும் மேலாக கிடைத்த அனுபவத்தில்,  தமிழாக்கத்தில்
முதன்மையாகக் களையப் பட வேண்டியதாக  கருதுவது, ஒரே ஆங்கிலச் சொல்லுக்கு
வெவ்வேறு தமிழ் சொற்கள் பயன்படுத்தப் படுவது.

இதனை  களைய  கே. பணிச்சூழல் உள்ளிட்ட ஏனைய பிற கட்டற்ற மென்பொருள் தமிழாக்க
முயற்சிகளுக்கும் துணைபுரிய வேண்டி இப்பட்டியலின் சோதனை வெளியீட்டினை  "Hacker
அகராதி" எனும் பெயரிட்டுத் தருகின்றோம்.

இலக்கு  -  இருநூறு சொற்கள்...

முழுமையான முதற் பதிப்பு வெளியிட, உதாரணத்தோடு  கூடிய  வாக்கியங்களும் தர
உத்தேசம்.

இதிலுள்ள குறைகள், நீக்க வேண்டியவைகள், விடுபட்டவைகள் போன்றவற்றை  வரும்
நாட்களில் தருமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.

--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க