On Thu, 2009-03-12 at 12:03 +0530, M.Mauran | மு.மயூரன் wrote:

> 1. கருத்தரங்கின் நிகழ்ச்சிநிரல் தயாரிக்கப்படும் நிலையில், ஏற்கனவே
> உபுண்டு குழுமத்தால நடாத்தப்பட்ட கருத்தரங்குகளின் நிகழ்ச்சி
> நிரல்க்ளுக்கான தொடுப்புக்களை தந்துதவினால் விடுபட்டவற்றை
> சேர்த்துக்கொள்ள முடியும்.
>

முந்தை கருத்தரங்குகள் அமைந்த விதத்தை இங்கே பொதுவாகத் தருகிறேன்,

இவற்றிற்கென்று தனித்தன்மை வாய்ந்த தன்மயமாக்கப்பட்ட வட்டு தயாரிக்கப்பட்டது.
இது குறித்து தங்களது மூன்றாவது கேள்விக்கு விடையளிக்கும் போது
விளக்குகிறேன்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் இணைய வசதி இருப்பது நல்லது என்றும்
குறைந்தபட்சம் பங்குபெறுவோர் எண்ணிக்கையில் சரிபாதி கணினிகளாவது இருப்பது
நல்லது எனவும் தெரிவித்திருந்தோம். மேலும் வருகை புரிவோர் மடிக்கணினி
வைத்திருந்தால் கொண்டு வர வலியுறுத்துமாறும் கேட்டுக் கொண்டோம்.

திரைவிளக்கத்தோடு கூடியதாய் உபுண்டு நிறுவுதற்கான வழிமுறைகளுடன்
நிகழ்ச்சிகளைத் தொடங்குவது வழக்கம். தமிழ் இடைமுகப்பிலேயே நிறுவுவதையும்
நடத்திக் காட்டுவது வழக்கம்.

விண்டோஸ் பயன்படுத்துவோரே பெரும்பாலும் கலந்து கொள்வர் என்று அனுமானித்து
இரு இயங்கு தளத்தையும் ஒருசேர நிறுவுதற்கான வழிமுறைகள் செய்து
காட்டப்பட்டன. மற்ற முறைகள் தவிர்க்கப்பட்டன.

தானாக இடம் கொணர்ந்து உபுண்டுவே நிறுவித் தரும் முறை - பகிர்வை முன்னமே
ஒதுக்கி boot, root, swap பகிர்வுகள் ஆகியன செய்து நிறுவும் முறை என இரு
முறைகள் விளக்கப்படும்.

உபுண்டு நிறுவப்பட்டுகொண்டிருக்கப்படும் இடைப்பட்ட காலத்தில் உபுண்டுவின்
வரலாறு டெபியன் அறிமுகம் போன்றவை சொல்லப்படும்.

முதல் அமர்வு இத்தைகையதாய் செல்ல அடுத்த அமர்வில் பொதுவாக விண்டோஸில்
மக்கள் புரியும் செயல்களும் அவற்றைச் செய்ய உபுண்டுவில் கிடைக்கும்
பயன்பாடுகளும் செய்முறையாக விளக்கிக் காட்டப்படும்.

பயர்பாக்ஸ் - எகிகா - பிட்கின் - ஐஆர்சி - எவல்யூஷன் - ஓபன் ஆபீஸ் -
பிரேசெரோ - எவின்ஸ் - கிம்ப் - டோடம் - விஎல்சி - ரிதம்பாக்ஸ் - ஆர்கைவ்
மேனேஜர் முதலியன..

இதற்கென்றே எம்பி3 கோப்புகள், திரைப்பட விசிடிக்கள் போன்றவை எடுத்துச்
செல்வதுண்டு.

உபுண்டுவில் தமிழ் வசதிகள் செய்து கொள்ளும் வழி சொல்லப்படும் - இங்கேயும்
தொடக்கத்திலேயே அதிக குழப்பங்களைத் தவிர்க்க xkbயோடு நிறுத்திக்
கொள்வதுண்டு.

யாரேனும் பின்னர் போனடிக் - தமிழ்99 பற்றி கேட்கும் போது ஸிம் (SCIM
- சேதுண்ணா சரிதானே ;-)) பற்றி சொல்வதுண்டு. அதே போல் கேடியீ குநோம்
பற்றியும் சொல்லாது குநோமையே அறிமுகம் செய்து வைத்து விடுவதுண்டு.

மூன்றாவது அமர்வில் பொதிகள் பற்றிய அறிமுகம் - களஞ்சியங்கள் - சினாப்டிக்
பற்றிய அறிமுகங்கள் செய்முறை விளக்கங்களோடு தருவதுண்டு. டெபியன்
பொதிகள் . deb கோப்புகள் பற்றி சொல்லி,

Application --> Add/ Remove
System --> Administration --> Synaptic Package Manager
தனிப்பட்ட பொதிகள் நிறுவ
Gdebi

ஆகியன பற்றி சொல்லி கலந்து கொள்வோரது தன்மையைப் பொறுத்து இவற்றையே முனைய
வழிகளில் கையாளும் முறைகளையும் தெரிவிப்பதுண்டு. அதே போல் மூல நிரல்களைக்
கொண்டு நிறுவும் முறையும் அவசியம் ஏற்படின் விளக்குவதுண்டு.

களஞ்சியங்களை விளக்கும் போது அவற்றைக் கொண்டு கட்டற்ற மென்பொருள்
கோட்பாட்டினை விளக்கி - உரிமங்கள் போன்றவற்றையும் விளக்கமாக எடுத்துரைத்து
கட்டற்ற மென்பொருள் புத்தகத்தையும் அறிமுகம் செய்வதுண்டு.

கடைசி அமர்வில் கோப்பு முறைமை - சில அடிப்படை நிர்வாகப் பணிகள் - வைன்
அறிமுகம் - அதுகொண்டு டேலி உள்ளிட்ட மென்பொருள்கள் நிறுவிப் பயன்படுத்திக்
காட்டுவது - முனைய அறிமுகம் முதலியவற்றைக் செய்து காட்டி நிறைவு செய்வோம்
கொள்வோம்.

செய்முறையோடு கூடியதாய் திகழும் போது - பிரதியொரு அமர்வும் ஒன்றரை மணி
நேரம் நீடிக்கும். ஆக ஆறு மணி நேரம்.

தொடர்வேன்..

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க