சென்னை அக்டோபர் 20, "கற்றலுக்கான கட்டற்ற மென்பொருள்கள்" எனும்
கருப்பொருள் கொண்ட பள்ளி மாணவர்களுக்கான கட்டற்ற மென்பொருள் அறிமுகப்
பயிற்சி, சென்னை அறிவியல் நகரத்தில் நடைபெற்றது. சென்னையிலுள்ள பத்து
பள்ளிகளைச் சார்ந்த அறுபது மாணவர்கள் இந்நிகழ்ச்சியால் பயனடைந்தனர். காலை
முப்பது மாணவர்கள் மாலை முப்பது மாணவர்கள் என பயிற்சியின் பாங்கு
அமைந்திருந்தது.

கலந்து கொண்ட மாணவர்களுக்கு கட்டற்ற மென்பொருள் பற்றிய அறிமுகம்,
வேதியியல், இயற்பியல் கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் கற்பதற்குத் துணை
புரியும் கட்டற்ற மென்பொருள்கள் சில விளக்கப்பட்டு, அவற்றை அவர்களே செய்து
பார்ப்பதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட்டது. கணினி வழி தமிழ் அறிமுகமும்
தட்டச்சுப் பயிற்சியும் வழங்கப்பட்டது. மாணவர்களோடு பள்ளி ஆசிரியர்களும்
நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்நிகழ்ச்சியினை தமிழ்நாடு வானவியல் கூட்டமைப்பின் தலைவர்
பேராசிரியர் பி. தேவதாஸ் தொடங்கிவைத்தார். அறிவியல் நகரத்தின் துணைத்தலைவர்
முனைவர் பி. ஐயம்பெருமாள் தொடக்கவுரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியினை
மாணவர்களுக்காக இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னையின் பாரதி
சுப்பிரமணியம், ஸ்ரீ ராமதாஸ், தங்கமணி அருண் ஆகியோர் நடத்தினர். 

பி.கு: 

நிகழ்ச்சியினை நடத்திட வேண்டி பள்ளிகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை
மேற்கொண்டு உதவிய அறிவியல் நகரத்தின் அலுவலர் ஹேமா, 

நிகழ்ச்சிக்கு மடிக்கணினிகள் தேவைப்பட்ட போது தங்களது மடிக்கணினியை
தந்துதவிய இந்திய லினக்ஸ் பயனர் குழு, சென்னையின் சௌமியா கிருஷ்ணன்,
இராஜேஷ், 

கலந்து கொண்ட பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட உபுண்டு இயங்குதளம் உள்ளிட்ட
ஆவணங்கள் தயாரிப்பிற்கான வளங்களை வழங்கிய கட்டற்ற திறந்த மூல மென்பொருள்
வளத்திற்கான தேசிய மையம், 

நிகழ்ச்சி குறித்த தங்கள் அலோசனைகளை வழங்கிய இந்திய லினக்ஸ் பயனர் குழு,
சென்னையின் பி. இராமன், தியாகு

ஆகியோருக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நிகழ்ச்சியினை நடத்திட வேண்டி அணுகிய போது அனுமதி தந்து ஊக்கமளித்து உதவிய
அறிவியல் நகரத்தின் செயற்குழுவின், தலைவர் பேராசிரியர் எம். ஆனந்தகிருஷ்ணன்
அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

காட்சிப் பதிவுகளுடன் வாசிக்க: http://kanimozhi.org.in/kanimozhi/?p=301

--

ஆமாச்சு

Attachment: signature.asc
Description: This is a digitally signed message part

-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க