உங்கள் பணியினை தொடர்ந்து செய்திட வாழ்த்துக்கள் !!!

15 அக்டோபர், 2009 10:00 pm அன்று, M.Mauran <mmau...@gmail.com> எழுதியது:

> இந்தச்செய்தியைக் கேட்கும் போது ஏற்படுகிற மகிழ்ச்சிக்கு அளவில்லை.
>
> பெரிய பணி ஒன்றினைச் செய்துவருகிறீர்கள். முதற்கண் பாராட்டுக்களும்
> வாழ்த்துக்களும்.
>
>
> கணினிகளில் மென்பொருட்களின் இடைமுகப்பையும் தமிழில் பயன்படுத்த
> முயற்சிக்கிறீர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி.
>
> உருவாக்குகின்ற பாடத்திட்டத்தை பொதுவான இடமொன்றில் பகிர்ந்துகொண்டால்
> ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பரந்தளவில் உள்வாங்கிக்கொள்ள முடியும். கூடவே
> அப்பாடத்திட்டத்தினை உலகெங்குமுள்ள மற்றவர்களும் பயன்படுத்திப் பலனடைய
> முடியும்.
>
>
>> இவ்வேளையில், உபுந்து தமிழாக்கப் பணியை துரிதப்படுத்துவதற்காக
>> எங்களிடத்திலிருந்து ஏதாவது உதவி வேண்டுமெனில் தயைகூர்ந்து கேளுங்கள். ஒருவேளை
>> நீங்கள் மலேசியா வர விரும்பினால்கூட தயங்கமின்றி கேற்கவும்; வரவேற்க
>> காத்திருக்கின்றோம்!
>>
>
> என்னைப்பொறுத்தவரை தமிழாக்கப்பட்ட இயங்குதளத்தைப் பயன்படுத்தி 500 மாணவர்கள்
> கணினியைப் பயன்படுத்தும், கற்கும் நிலையை ஏற்படுத்தியதே
> தமிழாக்கப்பணிக்குச்செய்த மிகப்பெரிய பங்களிப்புத்தான்.
>
> தமிழ் இடைமுகப்பைப்பயன்படுத்தும் போது ஏற்படும் சிக்கல்கள், எவற்றை மேம்படுத்த
> வேண்டியிருக்கிறது என்ற அவதானங்கள், வழுத்திருத்தங்களை பகிர்ந்துகொள்வதும்
> உதவும்.
>
> இதனடுத்த கட்டமாக மொழிபெயர்ப்பில் நேரடியாக ஈடுபட மாணவர்களுக்குக்
> கற்றுக்கொடுக்கலாம்.
>
> கூடவே தமிழ் விக்கிபீடியா, மதுரைத்திட்டம், நூலகம் திட்டம் போன்ற இணையத் தமிழ்
> வளங்களை பயன்படுத்தவும் மாணவர்களை ஊக்குவித்தால் நன்றாக இருக்கும்.
>
>
> தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
>
>
> தோழமையுடன்,
>
> மு. மயூரன்
>
>
>
>
>>
>> இம்மடலை என்றோ எழுதியிருக்க வேண்டும்; மற்ற திட்டங்களில் அதிகமாக ஈடுபட்டதால்
>> இப்பக்கம் வர இயலவில்லை.
>>
>> அன்புடன்,
>> வே. இளஞ்செழியன்
>> கோலாலம்பூர்
>>
>> --
>> Ubuntu-l10n-tam mailing list
>> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>>
>>
>
> --
> Ubuntu-l10n-tam mailing list
> Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam
>
>


-- 
அன்புடன்
அருண்
------------------------------
http://ubuntu-tam.org
http://lists.ubuntu.com/ubuntu-l10n-tam
http://lists.ubuntu.com/ubuntu-tam
------------------------------
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க