வணக்கம்,

குனு லினக்ஸ் இயங்கு தளங்களில் அன்றாடம் அதிகம் காண நேரிடும் சொற்களுக்கான
தமிழாக்கப் பரிந்துரைகள் நிகழ்ச்சி டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சென்னை
தரமணியில் அமைந்துள்ள CDAC வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் முதல்
நாளன்று தமிழ் இணையப் பல்கலைக் கழக டைரக்டர் திரு. நக்கீரன் கலந்துகொண்டு
உடன் விவாதித்து தமது பரிந்துரைகளை வழங்கிய வண்ணம் இருந்தார். அந்நாளில்
காஞ்சி லினக்ஸ் பயனர் குழுவின் உறுப்பினர்களும் உடன்
இருந்தனர். BOSS இயங்குதளத்தின் சார்பில் சுதாகர், உபுண்டு தமிழ்க் குழும
தொடர்பாளர் அருண் ஆகியோரும் உடன் இருந்தனர்.

#fedora-tamil இணையரங்கத்தின் மூலமாகவும் தி வாசுதேவன் உள்ளிட்ட பலர் வந்து
கலந்து கொண்டு தங்களது பரிந்துரைகளை வழங்கிய வண்ணம் இருந்தனர். கோவை
குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி பேரா. முத்துகுமார் ஆறுமுகமும்
நிகழச்சியில் கலந்து கொண்டு தமது பரிந்திரைகளை வழங்கினார். முதல் நாளன்று
நடைபெற்றது போலவே இரண்டாம் நாளைய நிகழச்சிகளும் அமைந்திருந்தன.

நிகழ்ச்சியின் இணையரங்கப் பதிவு, நிகழ்ச்சியின் நிறைவாகத் தொகுக்கப்பட்ட
சொற்களின் பட்டியல்
முதலியவற்றை https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil பக்கத்தில்
இருந்து இறக்கிக் கொள்ளலாம். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை
செய்திருந்த CDAC சென்னைக்கும், திரு ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கும் மனமார்ந்த
நன்றிகள். நிகழச்சியின் ஒருங்கிணைப்பு பணிகளை ம ஸ்ரீ ராமதாசும், பெலிக்ஸும்
கவனித்துக் கொண்டனர். நிகழ்வின் நிறைவாக மேற்கொள்ளப்படவேண்டியதாய் முடிவு
செய்யப்பட்டப விஷயங்கள் வருமாறு.

1) அகராதியாக பயன்படுத்தக் கூடிய ஒரு பயக்பாட்டினை உருவாக்க வேண்டும்.

2) மொழிபெயர்க்க வேண்டு முன்வருவோருக்கு இச்சொற்கள் உறுதுணை புரிந்தாலும்
இவற்றை பயன்பாடுகளில் பொருத்திப் பார்த்து சோதிக்க வேண்டும்.

3) பெடோரா உபுண்டு BOSS ஆகிய இயங்குதளங்களில் இவற்றைப் பொருத்திப் பார்த்து
சீர் செய்யும் பணியை மாதமொரு முறை நடத்தலாம்.

4) இச்சொற் பட்டியலை பிரதான மொழிபெயர்ப்பு திட்டங்களிலும் கிடைக்கச் செய்ய
வேண்டிய முயற்சிகளை எடுக்க வேண்டும்.
 

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க