2010/1/3 Mohan R <mohan...@gmail.com>:
> ஆமாச்சு|amachu wrote:
>> கொஞ்சம் நாள் முன்னாடி FUEL நிகழ்ச்சி
>> நடந்தது. அது சமயம் திரட்டப்பட்ட சொல்
>> பரிந்துரைகள் https://fedorahosted.org/fuel/wiki/fuel-tamil பக்கத்தில்
>> இருக்கு.
>
> அருமையான முண்ணோடி திட்டம். பிடிஎப் கோப்பை பதிவிறக்கி கொண்டேன். இதில், நான்
> மொழிபெயர்க்க முடியாமல் தினறிய அடிக்கடி வரக்கூடிய Daemon, Process, Configure,
> Menu, Menu Item, Window Manager போன்ற வார்த்தைகளுக்கு மொழிபெயர்புகளை 
> சேர்த்தால்
> நன்றாக இருக்கும்.
>

Daemon - தேவைப்படும் பொழுதுகளில் மட்டும் இயக்கத்துக்கு வருவதும்
தேவையற்ற வேளைகளில் பின்னனியில் உறங்கிக் கொண்டிருக்கும் server
(வழங்கி) தானே daemon. மயூரன் இதற்கு "மாயாவி" எனத் தமிழாக்கம் செய்யலாமே
என ஒரு தடவை கருத்தேற்றம் செய்திருந்தார். ஆயினும் எல்லாருக்கும்
விளங்கக்கூடிய வேறு சொற்கள் ஆக்க இயலுமாயின் முயல்வது நன்றே.

Process - இராம.கி. அவர்கள் "செலுத்தம்" என தமிழில் எழுதுகிறார் (கூகிள்
தேடலுக்கு : 
http://www.google.lk/search?hl=en&client=firefox-a&rls=org.mozilla%3Aen-US%3Aofficial&hs=wWU&q=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D+site%3Ahttp%3A%2F%2Fvalavu.blogspot.com&btnG=Search&meta=&aq=f&oq=
)

செலுத்தம் அழகிய சொல்லே. ஆனால் இலகுவில் பலருக்குப் புரியுமா என்பது
கேள்விக்குறியே. தமிழ் விக்சனரியில் உள்ள  "வினைமுறை", "விளைமுறை"
மற்றும் "நிகழ்முறை" என்பனவற்றில் ஒன்று எளிமையானதாகவும்
போதுமைநானதாகவும் இருக்கும் எனக் கருதுகிறேன்.

Configure - இக்குழுமத்தில்தான் அதற்கு "அமைவடிவாக்கல்" என தமிழாக்கம்
அறந்தேன் 3-வருடங்கள் முன். அதையே நான் பயன்படுத்துகிறேன்.

Menu - பட்டியல் ?

Menu Item - பட்டியல் உறுப்பு ?

Window Manager - சாரள நிருவாகி ?  சாரள மானகைச் செயலி ?

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க