What a punch response.. Gr8..... I like this.

"சாதனைக்காக இசை என்பதை நான் பெரிசா கருதுவதில்லை"...

Cheers,
Siraj


On 7/25/08, Kalimuthu <[EMAIL PROTECTED]> wrote:

>    1. When will you work with singer Nagoor Hanifa?
>
> Am waiting for that opportunity.
>
> 2. Fav. songs in your composition?
>
> 1. Putham Puthu Bhoomi Vendum
> 2. Ella Pugazhum oruvan oruvanukke
> 3. Newyork Nagaram
>
> 3. I want to be your friend, throughout my life. What am I supposed to do?
>
> If you are a good son to your mother;  good husband to your wife; good
> father to your children, then you are my friend too..... :)
>
> 4. Can you compose a song in 24 seconds?
>
> Dr. Vithur....... RMI (Rahmaniac Multilingual Interface)
>
>
>
>   30.07.08         சினிமா
>
> இசைப்புயலே! தங்கள் இசையில் இசைமுரசு நாகூர் ஹனீபாவுக்கு பாட வாய்ப்புக்
> கொடுப்பீர்களா?
>
> கா. தமிழ்ச்செல்வன், கோயம்புத்தூர்.
>
> அந்த வாய்ப்பை எதிர்பார்த்து நானும் காத்துக்கொண்டிருக்கிறேன்.
>
> உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு இசை வடிவம் தருவீர்களா?
>
> சு. ராம்பிரபு, மதுரை.
>
> திருக்குறள் இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு போய்ச் சேரணும்னு ஒரு புது
> முயற்சியில் ஈடுபட்டிருக்கோம். அதாவது  பாடகர் ப்ளாசே அவரோடு சேர்ந்து
> கர்நாடிக் ஸ்டைலில் தமிழிலேயே பாடி அதை இங்கிலீஸ் ராப்பில் கொண்டுவரப்போகிறோம்.
> விரைவில் அதைக் கேட்கலாம். இந்த ஆல்பத்தைத் தயாரிப்பது மட்டுமே நான்.
>
> தங்கள் இசையில் தங்கள் மனதை மிகவும் கவர்ந்த தமிழ்ப்பாடல்கள் எது?
>
> குணசேகரன், புவனகிரி.
>
> புத்தம் புது பூமி வேண்டும் - `திருடா திருடா'
>
> எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே - அழகியதமிழ்மகன்.
>
> நியூயார்க் நகரம்... `ஜில்லுனு ஒரு காதல்'
>
> உங்களின் நண்பனாக நான் ஆக வேண்டும். என் ஆயுள்மழையின் கடைசித்துளி சொட்டும்
> வரை உங்களின் தோழனாக இருக்க வேண்டும்
>
> என்பது இந்த இருபத்து மூன்று வயது இளைஞனின் ஒரு வாழ்நாள் கனவு! என் கனவு
> நிறைவேறுமா இசைப்புயலே?
>
> புரட்சிநம்பி, அரும்பாக்கம்.
>
> உன் தாய்க்கு நல்ல மகனாக இரு. உன் மனைவிக்கு நல்ல கணவனாக இரு. உன் குழந்தைக்கு
> நல்ல தகப்பனாக இரு. இந்த தேசத்துக்கு நல்ல பக்தனாக இரு. இப்படியெல்லாம்
> இருந்தால் நீ எப்போதும் என் தோழன்தான்.
>
> அந்தக் காலத்தில் வந்த `ஸவுண்ட் ஆஃப் மியூஸிக்' படத்தை எவ்வளவு முறை பார்த்து
> இருப்பீர்கள்?
>
> வாசுதேவன், சேலம்.
>
> இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம்.
> ஆனால் இப்போது ஸ்கூலிலேயே அந்த சாங்ஸ் எல்லாம் சொல்லித்தர ஆரம்பிச்சிட்டாங்க.
>
> சோம்பலை இசையால் முறிக்க இயலுமா?
>
> விஜயலட்சுமி, பொழிச்சலூர்.
>
> முடியும்னு நினைக்கிறேன். நான் ஒருதடவை தொடர்ந்து இடைவிடாமல் ஒர்க்
> பண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் ஒருவித மனச்சோர்வும், சோம்பலும் ஏற்பட்டபோது
> ரேடியோவில் சும்மா ஏதோ ஒரு பட்டனை தட்ட, முஷ்ரத் பதே அலிகானின் கவாலி பாடல்கள்
> அதில் ஒலித்தது. இவர் யாருன்னா உலகப் புகழ்பெற்ற பாகிஸ்தானிய கவாலிப் பாடகர்.
> அவரோட குரலும், பாடும் ஸ்டைலும் அதன் வரிகளையும் கேட்டபோது, என்னையும் அறியாமல்
> புத்துணர்ச்சியும், உற்சாகமும் ஏற்பட்டது.
>
> மவுனம் எப்போது வெற்றியைத் தரும்?
>
> அலமேலு, ஈரோடு.
>
> உன்னால் நல்லதைப் பேச முடியலேங்கிறபோது அமைதியாய் இரு. அப்படி அமைதியாய்
> இருக்கும்போது நிறைய வம்புதும்புகள் தவிர்க்கப்படும். எண்ணங்கள் சிதறாமல்
> இருக்கும். சாதனைகள் புரியலாம். எனவே மவுனமாக இருக்கும்போதுதான் மவுனம்
> வெற்றியைத் தரும்.
>
> தமிழ்த்திரையுலகம், ஹிந்தித் திரையுலகம், ஹாலிவுட் திரையுலகம்  உங்கள்
> பார்வையில் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?
>
> சுரேஷ். விருகம்பாக்கம்.
>
> ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கு. Nothing Succeeds Like Success. எது
> வெற்றியடைகிறதோ அதைப் பின்பற்றுவதற்கு நிறையப் பேர் இருக்குறாங்க. அதேபோல்
> எதில் அதிக பணம் கிடைக்குமோ அதற்கு வாலண்டியர்ஸ் அதிகம் வருவாங்க. ஹாலிவுட்
> எடுத்துக்கொண்டால் அவர்கள் உலகம் பூராவும் வெற்றிகரமா இருக்காங்க. அதனாலதான்
> ஒரிஜினாலிட்டியை கண்ட்ரோல் பண்ணவும் ஒரு பெரிய படத்தை எடுத்து உலகம் பூரா
> ரசிக்க வைக்கவும் அவர்களால் முடிகிறது. இப்போ நம்ம இந்திய சினிமாவிலும்
> அப்படிப்பட்ட ஒரு போக்கு அமைஞ்சிருக்கு. இது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
>
> ஒரு படத்தை 24 மணி நேரத்தில் எடுத்து வெளியிட்டார்கள். அதுபோல் உங்களால் 24
> நொடியில் ஒரு பாடலுக்கு இசையமைக்க முடியுமா? சாதனை படைக்க அவ்வாறு உங்களுக்கு
> ஆசை உள்ளதா?
>
> என். சிவகுமார், சென்னை 28.
>
> முடியுமா? முடியாதா? என்பது பிரச்னை இல்லை. முதலில் அந்தப் பாடல் உங்களுக்குப்
> பிடிக்க வேண்டும். ஒரு நிமிஷத்தில் பத்து டியூன்கள் போடலாம். நான் முன்பு
> மியூசிக் பண்ண ஆரம்பித்தபோது, எவ்வளவு ஃபாஸ்ட்டா பண்ணினேன்னு மக்கள் கேட்பதைக்
> காட்டிலும் அந்தப் பாடல் எந்த அளவுக்கு அவங்களுக்குப் பிடிச்சிருக்கு. நல்லா
> இருக்குன்னு ஃபீல் பண்ணணும்னு மட்டுமே நினைச்சேன். குழந்தை பத்து மாதம்
> கழித்துப் பிறக்கும்போது அது சுகப் பிரசவம். குழந்தை ஆறு மாதத்தில்
> பிறக்கும்போது அது குறைப்பிரசவம். இன்குபேட்டரில் வைத்து அதைக் காப்பாத்த
> வேண்டியிருக்குமில்லையா? (சிரிக்கிறார்). அப்படி வேகமா இசையமைத்த  ஒரு சில நல்ல
> பாடல்கள் வெற்றி பெற்றிருக்கலாம். என்னைப் பொறுத்தவரை அது ஃப்ளூக்கில் கிடைச்ச
> வெற்றிதான். சாதனைக்காக இசை என்பதை நான் பெரிசா கருதுவதில்லை.
>
>
> --
> .
>
> 
>

Reply via email to