Q :- இசைப்புயலே! தங்கள் இசையில் இசைமுரசு நாகூர் ஹனீபாவுக்கு பாட வாய்ப்புக்
கொடுப்பீர்களா?
கா. தமிழ்ச்செல்வன், கோயம்புத்தூர்.

Music storm ! Would you give a chance to Music Stalwart Nagor Hanifa ?

அந்த வாய்ப்பை எதிர்பார்த்து நானும் காத்துக்கொண்டிருக்கிறேன்.

I am also awaiting the same opportunity

உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு இசை வடிவம் தருவீர்களா?
சு. ராம்பிரபு, மதுரை.

Would you give a Music Form to the World Renowned Thirukkural ?
திருக்குறள் இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு போய்ச் சேரணும்னு ஒரு புது
முயற்சியில் ஈடுபட்டிருக்கோம். அதாவது  பாடகர் ப்ளாசே அவரோடு சேர்ந்து
கர்நாடிக் ஸ்டைலில் தமிழிலேயே பாடி அதை இங்கிலீஸ் ராப்பில் கொண்டுவரப்போகிறோம்.
விரைவில் அதைக் கேட்கலாம். இந்த ஆல்பத்தைத் தயாரிப்பது மட்டுமே நான்.

We are no engaged in a new effort of making Thirukkural reach the young
masses. By joining hands with Singer Blazee, in Carnatic style, to sing in
in Tamil, and also get it released in English as a Rap. You can soon get a
chance to listen to it. I am involved only in producing it.

தங்கள் இசையில் தங்கள் மனதை மிகவும் கவர்ந்த தமிழ்ப்பாடல்கள் எது?
குணசேகரன், புவனகிரி.
Which are the songs of yours, which have been your favourites ?

புத்தம் புது பூமி வேண்டும் - `திருடா திருடா'
எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே - அழகியதமிழ்மகன்.
நியூயார்க் நகரம்... `ஜில்லுனு ஒரு காதல்'

Putham Pudhu Bhoomi Vendum - Thiruda Thiruda
Ella Pughzaum Oruvan Oruvaneke - Azhagiya Tamizh Magan
New York Nagaram - Jillenu oru Kadhal

உங்களின் நண்பனாக நான் ஆக வேண்டும். என் ஆயுள்மழையின் கடைசித்துளி சொட்டும் வரை
உங்களின் தோழனாக இருக்க வேண்டும்
என்பது இந்த இருபத்து மூன்று வயது இளைஞனின் ஒரு வாழ்நாள் கனவு! என் கனவு
நிறைவேறுமா இசைப்புயலே?
புரட்சிநம்பி, அரும்பாக்கம்.
I want to be your friend. Till the last beat of my soul, I want to be your
companion. This is the desire of this 23 year old youth, and this has been
my life cherished dream!. Will this dream get satisfied ?

Be a good son to your mom. Be a good husband to your wife. Be a good parent
to your children. Be a good patriot to this nation. If you follow all these,
you would be my friend always.
உன் தாய்க்கு நல்ல மகனாக இரு. உன் மனைவிக்கு நல்ல கணவனாக இரு. உன் குழந்தைக்கு
நல்ல தகப்பனாக இரு. இந்த தேசத்துக்கு நல்ல பக்தனாக இரு. இப்படியெல்லாம்
இருந்தால் நீ எப்போதும் என் தோழன்தான்.

In those times, when  the film , " Sound of Music " got released, how many
times, did you watch it ?
அந்தக் காலத்தில் வந்த `ஸவுண்ட் ஆஃப் மியூஸிக்' படத்தை எவ்வளவு முறை பார்த்து
இருப்பீர்கள்?
வாசுதேவன், சேலம்.
இரண்டு மூன்று முறை பார்த்திருக்கிறேன். என் வாழ்க்கையில் மறக்க முடியாத படம்.
ஆனால் இப்போது ஸ்கூலிலேயே அந்த சாங்ஸ் எல்லாம் சொல்லித்தர ஆரம்பிச்சிட்டாங்க.

I have seen it twice. Its an unforgettable movie in my life. But, they have
started to teach those songs in schools nowadays.

சோம்பலை இசையால் முறிக்க இயலுமா?
விஜயலட்சுமி, பொழிச்சலூர்.

Can lazyness be driven out of music ?

முடியும்னு நினைக்கிறேன். நான் ஒருதடவை தொடர்ந்து இடைவிடாமல் ஒர்க்
பண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் ஒருவித மனச்சோர்வும், சோம்பலும் ஏற்பட்டபோது
ரேடியோவில் சும்மா ஏதோ ஒரு பட்டனை தட்ட, முஷ்ரத் பதே அலிகானின் கவாலி பாடல்கள்
அதில் ஒலித்தது. இவர் யாருன்னா உலகப் புகழ்பெற்ற பாகிஸ்தானிய கவாலிப் பாடகர்.
அவரோட குரலும், பாடும் ஸ்டைலும் அதன் வரிகளையும் கேட்டபோது, என்னையும் அறியாமல்
புத்துணர்ச்சியும், உற்சாகமும் ஏற்பட்டது.

I think it can . Once, when I was working without any break, I faced a sort
of depression and lazyness in the mind. I just happened to tap the radio,
and could listen to Mushrat Pathe ali Khan 's Qawwali songs. He is world
renowned Pakistani Qawwali Singer. I without my own notice was refreshed,
rejuvenated, after listening to his voice, singing style and the lyrics of
the songs.
மவுனம் எப்போது வெற்றியைத் தரும்?
அலமேலு, ஈரோடு.

When will Silence give reward ?
உன்னால் நல்லதைப் பேச முடியலேங்கிறபோது அமைதியாய் இரு. அப்படி அமைதியாய்
இருக்கும்போது நிறைய வம்புதும்புகள் தவிர்க்கப்படும். எண்ணங்கள் சிதறாமல்
இருக்கும். சாதனைகள் புரியலாம். எனவே மவுனமாக இருக்கும்போதுதான் மவுனம்
வெற்றியைத் தரும்.

When you are unable to speak anything good, be silent. When you maintain
silence, you would be abe to avoid a lot of fights, and mishaps. The
thoughts wont get diverted. You can achieve a lot . Hence, when you maintain
silence, that silence would give you victory.

தமிழ்த்திரையுலகம், ஹிந்தித் திரையுலகம், ஹாலிவுட் திரையுலகம்  உங்கள்
பார்வையில் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?
சுரேஷ். விருகம்பாக்கம்.

Whats the difference that you see between Tollywood, Bollywood and Hollywood
?

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கு. Nothing Succeeds Like Success. எது
வெற்றியடைகிறதோ அதைப் பின்பற்றுவதற்கு நிறையப் பேர் இருக்குறாங்க. அதேபோல்
எதில் அதிக பணம் கிடைக்குமோ அதற்கு வாலண்டியர்ஸ் அதிகம் வருவாங்க. ஹாலிவுட்
எடுத்துக்கொண்டால் அவர்கள் உலகம் பூராவும் வெற்றிகரமா இருக்காங்க. அதனாலதான்
ஒரிஜினாலிட்டியை கண்ட்ரோல் பண்ணவும் ஒரு பெரிய படத்தை எடுத்து உலகம் பூரா
ரசிக்க வைக்கவும் அவர்களால் முடிகிறது. இப்போ நம்ம இந்திய சினிமாவிலும்
அப்படிப்பட்ட ஒரு போக்கு அமைஞ்சிருக்கு. இது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.

There is a proverb in English. Nothing suceeds like Success. Whichever route
wins, there are a lot of people to follow the same.  In the similar fashion,
wherever a lot of money can be earned, there would be a lot of volunteers
for the same. If you take the case of Hollywood, they are succesful all over
the globe. And that is why, to control originality they take big film, and
make the entire world go crazy about it. Nowadays, even Indian cinema is
getting transformed to such a trend, which is quite an encouraging one. This
is entertaining.

ஒரு படத்தை 24 மணி நேரத்தில் எடுத்து வெளியிட்டார்கள். அதுபோல் உங்களால் 24
நொடியில் ஒரு பாடலுக்கு இசையமைக்க முடியுமா? சாதனை படைக்க அவ்வாறு உங்களுக்கு
ஆசை உள்ளதா?
என். சிவகுமார், சென்னை 28.

There was a film, which was shooted and released in 24 hours. In a similar
way, is it possible for you to compose a music within 24 minutes ?. for
creating a record, do you have a desire to do it ?

Its not the problem of whether I can or not ?. But, First of all, you must
like the song. 10 tunes can be composed within a minute. Initially, when I
started doing music, instead of people asking me how fast you could compose
music, I used to fell, to what extent woudl they love my music and enjoy my
music. If the baby takes birth after 10 months, Its a good delivery. If the
baby takes birth within 6 months, its a short delivery. The baby has to be
safeguarded by keeping it in an incubator ( He laughs here ) . So, hurriedly
composed such songs may be have become a hit. According to me, its a victory
out of chance. I dont consider music for an achievement as anything great.


முடியுமா? முடியாதா? என்பது பிரச்னை இல்லை. முதலில் அந்தப் பாடல் உங்களுக்குப்
பிடிக்க வேண்டும். ஒரு நிமிஷத்தில் பத்து டியூன்கள் போடலாம். நான் முன்பு
மியூசிக் பண்ண ஆரம்பித்தபோது, எவ்வளவு ஃபாஸ்ட்டா பண்ணினேன்னு மக்கள் கேட்பதைக்
காட்டிலும் அந்தப் பாடல் எந்த அளவுக்கு அவங்களுக்குப் பிடிச்சிருக்கு. நல்லா
இருக்குன்னு ஃபீல் பண்ணணும்னு மட்டுமே நினைச்சேன். குழந்தை பத்து மாதம்
கழித்துப் பிறக்கும்போது அது சுகப் பிரசவம். குழந்தை ஆறு மாதத்தில்
பிறக்கும்போது அது குறைப்பிரசவம். இன்குபேட்டரில் வைத்து அதைக் காப்பாத்த
வேண்டியிருக்குமில்லையா? (சிரிக்கிறார்). அப்படி வேகமா இசையமைத்த  ஒரு சில நல்ல
பாடல்கள் வெற்றி பெற்றிருக்கலாம். என்னைப் பொறுத்தவரை அது ஃப்ளூக்கில் கிடைச்ச
வெற்றிதான். சாதனைக்காக இசை என்பதை நான் பெரிசா கருதுவதில்லை.

-- 
regards,
Vithur

ARR -- The Sweet Cube always

Reply via email to