வணக்கம்,

உபுண்டு இன்டிரிபிட் ஐபக்ஸ் திருப்பூர் ஐடி அசோசொயேஷன் சார்பில் நேற்றைய
தினம் வெளியடப்பட்டது. நேற்றைய தினம் (22-11-08) அதன் உறுப்பினர்களுக்கு
உபுண்டு இயங்குதளத்தின் அடிப்படைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

உபுண்டுவில் எவ்வாறு ஒரு பயனர் தமிழ் வசதிகள் துவங்கி பல்லூடக வசதிகள்,
பொதிகள் நிறுவுவது, விண்டோஸ் இயங்கு தளத்தில் பிரபலமாகப்
பயன்படுத்தப்படும் பயன்பாடுகளுக்கு மாற்றாக கிடைக்கும் மென்பொருள்கள்
போன்றவை விரிவாக விளக்கப்பட்டன. டேலி போட்டோஷாப் போன்ற பயன்பாடுகளை
உபுண்டுவில் வைன் மூரம் இயங்குவதை பார்த்து கலந்து கொண்டோர் ஆச்சரியம்
கொண்டனர்.

கணினிகளை உபுண்டு கொண்டு அசோசியேஷன் உறுப்பினர்கள் விற்பனை செய்தால்
அங்ஙனம் வாங்குவோருக்கு அசோசியேஷன் சார்பில் மாதத்தில் ஒரு நாள் தொழில்
சார்ந்த பயிற்சி கொடுக்கலாம் என்ற யோசனை உபுண்டு தமிழ் குழுமம் சார்பில்
முன்வைக்கப்பட்டது.

நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தித் தந்த ஈரோடு ஐடி அசோசியேஷனுக்கு
மனமார்ந்த நன்றிகள். அசோசியேஷனின் தலைவர் திரு. இரவிச்சந்திரன், திரு.
பாபு, திரு. செந்தில், திரு. தியாகு உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

நிகழ்ச்சியினை இராமதாசும், சிவாவும் (கம்பன் பொறியியல் கல்லூரி மாணவர்)
இணைந்து நடத்தினர். கட்டற்ற மடல் வழங்கி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு
விடயங்களுக்கும் நமது பணிகள் விரிய வேண்டும் போன்ற பாடங்களும்
இந்நிகழ்வில் கிடைக்கப்பெற்றது.

---
ஆமாச்சு
_______________________________________________
To unsubscribe, email [EMAIL PROTECTED] with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
  • [Ilugc] உபுண்டு திர... ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M

Reply via email to