2008/12/18 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <ama...@ubuntu.com>

> 2008/12/17 balachandar muruganantham <mbchan...@gmail.com>:
> > பயர்பாக்ஸ்க்கான தமிழ் சொல் திருத்தி திட்டம் ஏற்கனவே இருக்கிறது.
> >
> > இங்கே சுட்டவும் -> http://code.google.com/p/tamilspellchecker/
> >
> > நீட்சி தொடுப்பு https://addons.mozilla.org/en-US/firefox/addon/8902
> பாலா,
>
> தாங்கள் சொற் பட்டியலைத் தாண்டி இதனை மேம்படுத்த என்ன திட்டம்
> வைத்திருக்கிறீர்கள் என்று அறியலாமா? சொற் பட்டியல் முதற்படி. தொடர்ந்து
> விகுதி சேரும் போது பிழை சொல்லாது இருப்பது குறித்து (காதல் - காதலால் -
> காதலில் - காதல்கொண்டு ..), சந்திப் பிழை, இலக்கணப் பிழைகள் (அவன்
> நடந்தாள், நாய் கத்தியது...) என இது விரிவடைய வேண்டுமே!



சொற் பட்டியலைத் தாண்டி, இன்னும் எந்த ஏற்பாடும் நடக்கவில்லை. தமிழ்
விக்கிப்பீடியாவிலிருந்து சொற்பட்டியலை சேர்க்கும் முயற்சி நடைபெறுகிறது. இது
சோதனை தருவாயில் உள்ளது.

சந்திப்பிழைகள், இலக்கணப்பிழைகள் செய்ய அதிக நேரம் செலவாகும். அதனை
செயல்படுத்த, நேரம் கிடைக்கும் பொழுது நான் தமிழ் இலக்கணம் பயின்று
வருகிறேன்.சந்திப்பிழைகள், இலக்கண்ப்பிழைகள் கண்டுப்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
அதற்கு நிறைய பங்களிப்பாளர்கள் தேவை.

சொல் திருத்தியின் கூகிள் குழுமத்தில் சேர ஆர்வமுள்ள அனைவரையும் அழைக்கிறேன்.
தொடுப்பு: http://groups.google.com/group/spellchecker

அங்கே, தமி்ழ் நன்றாக தெரிந்தவர்கள், மென்பொருள் பொறியாளர்கள் இருக்கின்றனர்.
நீங்கள் அங்கே சேர்ந்தால், என்ன செய்யலாம் என்று நாம் அனைவரும் ஒன்று கூடி
முடிவெடுத்து வேலைகளை பிரித்து தொடங்கலாம்.

மேலும் பயர்பாக்ஸ்க்கான சொல் திருத்தி திட்டம் பயர்பாக்ஸ் தொழில்நுட்பம் கீழ்
இயங்குகிறது. வார்த்தைகள் சேர்த்தால் போது. அதிக வார்த்தைகள் சேர்ப்பது என்பது
எளிது. இது நிரந்திர தீர்வு அல்ல என்பதை நான் அறிவேன்.
ஆனால் இது ஒரு தற்காலிகமான தீர்வு.

- balachandar muruganantham
உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை - http://ulagam.net
எனது தமிழ் பக்கங்கள் - http://www.balachandar.net/pakkangal
Beyond Work - http://beyondwork.wordpress.com/
"சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே மற்றின்பம் வேண்டு பவர். " - குறள் எண் :
173
_______________________________________________
To unsubscribe, email ilugc-requ...@ae.iitm.ac.in with 
"unsubscribe <password> <address>"
in the subject or body of the message.  
http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc

Reply via email to