Can someone translate this to English? Dr. Vithur?

Usual questions....

Why are music albums not so popular here?
Foreigners' perception about Indians...
Concerts in Foreign countries...
What's music and it's origin?
KMMC's goal...


வெளிநாட்டில் புகழ்பெறுகின்ற அளவுக்கு தமிழ்நாட்டில் இசை ஆல்பங்கள் புகழ்
பெறாததற்குக் காரணம் என்ன?

எம். மோகன், பாகாயம்.

வெளிநாட்டில் எல்லா இசையையும் பிரித்திருக்கிறார்கள். சினிமா இசை எது,
கிளாசிகல் இசை எது என்று. ஒவ்வென்றுக்கும் ஒரு மார்க்கெட்டை
உருவாக்கியிருக்காங்க. அதைப் போல் இங்கே டிஸ்ட்ரிபியூஷன் நெட்வொர்க் வெளிநாடு
அளவுக்கு இல்லை. ஆல்பத்தை விரும்புறவங்கஇங்கேயும் நிறையப்பேர் இருக்காங்க.
இல்லாமல் இல்லை. கொஞ்சம் சிரத்தையுடன் பண்ணினால் இன்னும் சிறப்பா இருக்கும்.
சினிமா பாடல்களுக்கு மெனக்கெடற மாதிரி ஆல்பத்துக்கும் மெனக்கெட்டால்
கேக்குறவங்களுக்கும் பிடிக்கும், விற்பனையும் நல்லாருக்கும். எல்லாமே மக்கள்
விரும்பற மாதிரி இருக்கணும் என்பதும் முக்கியம். இப்போது வரும்  ஆல்பங்கள்
மக்களை திருப்திப்படுத்தற மாதிரி இல்லை என்பதால் புகழ் பெறலேன்னு நினைக்கிறேன்.

வெளிநாட்டில் இந்தியர்களை எப்படி மதிக்கிறார்கள்?

மு. ஆனந்தன், கிருஷ்ணகிரி.

இதில் சில வகைகள் இருக்கு. ஒரு வகையினர் இந்திய கலாச்சாரத்தைப் பற்றித்
தெரிஞ்சவங்க. இவங்க இந்தியர்களை ரொம்பவும் மதிக்கிறாங்க. மூன்றாம் உலகநாடு என்ற
வகையில் படிப்படியா பொருளாதாரத்திலும், இன்னும் பிற வளர்ச்சிகளிலும் இந்தியா
முன்னேறி வருவது அவர்களுக்குத் தெரிகிறது. இவர்களிடம் இந்தியா என்றாலே
முகத்தில் ஒரு புன்னகை வருவதைப் பார்த்தேன். முன்பு இருந்ததைக் காட்டிலும்
வெளிநாட்டில் இந்தியா பற்றிய எண்ணங்கள் கொஞ்சம் மாறியிருக்கு. ஆனால் இது
போதாது. இன்னும் சிறப்பா அவங்க நினைக்கணும்.

வெளிநாட்டில் மேடைக் கச்சேரியை எப்படி ரசிக்கிறார்கள்?

இரா. நல்லகண்ணு,  பாளையங்கோட்டை.

முதன்முதலில் யு.எஸ். டூர் போகும்போது பெரிய குழப்பம் இருந்தது. அங்கு
பார்த்தீங்கன்னா பாதி தமிழ், பாதி தெலுங்கு, அப்புறம் கொஞ்சம் மலையாளம்,
கன்னடம், பஞ்சாபி, ஹிந்தி, பாகிஸ்தானி, பங்களாதேஷ் அப்படி இப்படின்னு நிறைய
விதமான மக்கள் இருக்காங்க. முன்பு கச்சேரி பண்ணப் போகும்போதெல்லாம் பெரிசா குறை
சொல்லுவாங்க. எப்படின்னா, தமிழ்ப் பாட்டு நிறைய பாடிட்டாங்க, ஹிந்திப் பாட்டு
நிறைய பாடிட்டாங்கன்னு. ஆனால் இப்ப அப்படி இல்லை. இசையை மட்டுமே ரசிக்கிறாங்க.
அதற்குள் தங்கள் மொழியை திணிப்பதில்லை. எந்த மொழியானாலும், பிடிச்சிருந்தா அது
வேணும்னு கேக்குறாங்க. இது ஒரு நல்ல மாற்றம்.

மனதை மயக்குவது இசையா? மனதைப் பறிப்பது இசையா? மனதைப் பக்குவப்படுத்துவது
இசையா?

கார்த்திகேயன், லவாய்பட்டி.

இசைக்கு மயக்கவும் தெரியும்.மனதைப் பறிக்கவும் தெரியும். பக்குவப்படுத்தவும்
தெரியும். இசைக்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

இசை ஆல்பம் வெளியிடுவதாக நிறையப் பேர் கூறுகிறார்களே, இதனால் என்ன பிரயோஜனம்?

ரேவதிப்ரியன், ஈரோடு.

இசை ஆல்பம் வெளியிடுவது ஒன்றும் தவறு இல்லை. ஆனால், அது அவருடைய எண்ணங்களின்
வெளிப்பாடாக இருக்கணும்.  காசு பண்ணணும், புகழ் கிடைக்கணும்கிறதுலாம்
முக்கியம்தான். ஆனால் அதையும் மீறி, புதுசா ஏதாவது சொன்னால்தான் மக்கள் அதை
ஏற்றுக் கொள்வார்கள். அப்படியிருந்தால் நிச்சயம் வெற்றிபெறும்.

உங்களது இசைக் கல்லூரியின் லட்சியமாக எதைச் சொல்வீர்கள், இசைத் தலைவா?

டி. சுரேஷ், விருகம்பாக்கம்.

என்னைப் பொறுத்தவரை இசை தனித் தொழிலாக மாறணும். அப்புறம் நம் நாட்டு இசைக்
கலைஞர்களால் எதையும் செய்யமுடியும் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். இசையின்
உச்சத்தைத் தொட வேண்டும்.   அது வரும் வரை பயிற்சி கொடுக்கணும். இந்துஸ்தானி
மியூசிக் இருக்கு. கர்நாடிக் மியூசிக் இருக்கு. இவைகளில்  சாதித்து விட்டால்
நிச்சயம் சர்வதேச அளவில் நாம் புகழ் பெற முடியும். இசைக் கல்லூரியில் சேரும்
எல்லோரையும் அதற்கு தயார்படுத்துவதுதான் என் நோக்கம். அடுத்த நூற்றாண்டுக்கான
மாறிவரும் தொழில்நுட்பத்தைப் பற்றியும் அவங்க தெரிஞ்சுக்கணும். இசைக் கருவிகளை
வாசித்தால் மட்டும் போதாது. பணமும் சம்பாதிக்கணும். புகழும் பெறணும். அதேசமயம்
இசையில் தரமும் இருக்கணும்.

இசையின் மூலம் எது?

ஏ. நிஜாமுத்தீன், திருச்சி.

அமைதி..

வாழ்க்கையோடு போராடி நல்ல நிலைக்கு வருபவர்களைப் பார்த்தால் என்ன தோன்றும்?

விக்கிரமாதித்தன், ஜோடர்பாளையம்.

போராடி கிடைக்கும் வாழ்க்கையில் ஒரு உணர்வு இருக்கும். முயற்சி செய்து
போராடும்போது அதில் தன்னம்பிக்கை தெரியும். உழைப்பிற்கு  கிடைத்த வெற்றி
வாழ்நாள் முழுக்க நம்மோடு இருக்கும். ஏன் என்னையே எடுத்துக்கொள்ளுங்கள்.
போராடியதால்தான் ஒரு நல்ல இடத்தைப் பிடிக்க முடிந்தது.

 தொகுப்பு : சந்துரு
படங்கள் : சித்ராமணி


-- 
Sent from my very old 386 machine.

Reply via email to