[உபுண்டு_தமிழ்] விடியலை நோக்க ி வேலூர்...

2008-12-22 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
வணக்கம்

வேலூர் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் சார்பாக அதன் உறுப்பினர்களுக்கும் கலந்து
கொள்ள விருப்பம் தெரிவித்த பொதுமக்களுக்காகவும் 22-12-2008 ஞாயிற்றுக்கிழமை
உபுண்டு அறிமுக நிகழ்ச்சி ஓட்டல் ஆவனா இன் தனில் நடைபெற்றது. வேலூர், ஆரணி என
அம்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து நாற்பதிற்கும் மேற்பட்ட கணினி
விற்பனையாளர்கள், தொழில் சார்ந்த தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குவோர் என
பலதரப்பு மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

கலந்து கொண்டோருக்கு பல்வேறு வழிகளில் உபுண்டு நிறுவும் முறைகள், பொதிகள்
நிறுவும் முறை  பராமரிப்பு, தமிழ் வசதிகள் செய்து கொள்ளும் முறை, இணைய வசதிகள்
செய்து கொள்ளும் வழிகள், பல்லூடக வசதிகள், விண்டோஸ் பயன்பாடுகளை வைன் கொண்டு
நிறுவும் முறை போன்றவை விளக்கப்பட்டு செய்தும் காட்டப்பட்டன. கட்டற்ற
மென்பொருள் கோட்பாடும் அதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.

டேலி மென்பொருள் வைன் மூலம் இயக்கப்பட்டு காட்டப்பட்ட அதே நேரத்தில் டேலி
விற்பனையில் ஈடுபட்டுள்ளோர், அதனைப் பயன்படுத்துவோர், முதற்படியாக டேலி
நிறுவனத்தை, உபுண்டுவில் நிறுவத்தக்க .deb கோப்பினை வழங்க நிர்பந்திக்குமாறு,
உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டனர்(1). நிரந்தரத்
தீர்வாக டேலிக்கு மாற்றான கட்டற்ற மென்பொருள் உருவாக்கம் பரிசீலிக்கப்பட்டு
வருவதாகவும் விரைவில் மாற்று கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியினை உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பாக இராமதாசும் சிவாவும்
(திருவண்ணாமலை கம்பன் பொறியியல் கல்லூரி மாணவர்) நடத்திக் கொடுத்தனர்.
நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தி நடத்திக் கொடுத்த வேலூர் தகவல் தொழில்நுட்ப
அமைப்பின் சாய்ராம் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும்
உபுண்டு தமிழ் குழுமத்தின் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
காட்சிப் பதிவுகள் விரைவில் பகிர்ந்து கொள்ளப்படும்.

(1) உபுண்டு உள்ளிட்ட கட்டற்ற இயங்கு தளங்கள் பயன்படுத்தும் அனைவரும் இதே
கோரிக்கையை supp...@tallysolutions.com முகவரிக்கு மடல் மூலம் வைத்து,
அந்நிறுவனத்தை நிர்பந்திக்குமாறு உபுண்டு தமிழ் குழுமம் கேட்டுக் கொள்கிறது.

-- 

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]விடியலை நோக்கி வேலூர்...

2008-12-22 திரி ம. ஸ்ரீ ராம தாஸ் |Sri Ramadoss M
2008/12/22 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M ama...@ubuntu.com

 வணக்கம்

 வேலூர் தகவல் தொழில்நுட்ப அமைப்பின் சார்பாக அதன் உறுப்பினர்களுக்கும் கலந்து
 கொள்ள விருப்பம் தெரிவித்த பொதுமக்களுக்காகவும் 22-12-2008 ஞாயிற்றுக்கிழமை
 உபுண்டு அறிமுக நிகழ்ச்சி ஓட்டல் ஆவனா இன் தனில் நடைபெற்றது.



21-12-2008 என்றிருக்க வேண்டும்.

-- 
ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam