03 பிப்ரவரி 08, தீர்த்தமலை. தருமபுரி மாவட்டம். மக்கள் வாழ்வுரிமை
அறக்கட்டளை, அரூர் சார்பில் தகவல் தொழில் நுட்ப பயிற்சி மையம்
தீர்த்தமலையில் திறக்கப்பட்டது. பயிற்சி மையத்தை தருமபுரி மாவட்ட ஆட்சித்
தலைவர் திருமதி பெ. அமுதா திறந்து வைத்தார்.  நிகழ்ச்சிக்கு அரூர்
சட்டமன்ற உறுப்பினர் திரு. டில்லி பாபு, மாவட்ட காவல் துறை
கண்காணிப்பாளர் திரு. நஜ்மல்ஹோடா ஆகியோர் முன்னிரை வகித்தனர்.

இந்திய தொழிற் சங்க மைய தலைவர் திரு ஏ சவுந்தரராஜன் மாணவர் சேர்க்கையை
தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். விழாப் பேருரை ஆற்றிய மாவட்ட
ஆட்சியர் அவர்கள் கணினி பயிற்சி மையத்தின் செலவினை மாவட்ட நிர்வாகமே
ஏற்றுக் கொள்ளும் எனத் தெரிவித்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கட்டற்ற
மென்பொருள் புத்தகத்தினை மாவட்ட ஆட்சியர் வெளியிட காவல் துறை
கண்காணிப்பாளர் பெற்றுக் கொண்டார். இரண்டாயிரத்திற்கும் மேலான ஊர்ப்பொது
மக்களும் பெரியோர்களும் பள்ளி மாணாக்கரும் நிகழ்ச்சியில் கலந்து
கொண்டனர்.

வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி சனி ஞாயிறுகளில் உபுண்டுவினை அடிப்படையாகக்
கொண்ட பயிற்சியை வழங்கலாம் என உபுண்டு தமிழ் குழுமம் கருதுகிறது. அதற்கு
தன்னார்வலர்களின் ஒத்துழைப்பையும் அனைத்து வகையான ஏனைய உதவிகளையும்
நாடுகிறது. மாதத்தில் ஒரு வாரத்தில் உங்களால் தீர்த்தமலைக்கு சென்று
பாடங்கள் சொல்லிக் கொடுக்க முடியுமா? வேறு எவ்வகையில் தங்களால் உதவ
முடியும்?

தாங்கள் பின்தங்கியோர் என்ற எண்ணம் புரையோடிக்கிடக்கும் இம் மக்களின்
மறுமலர்ச்சிக்கு முன்வர விரும்பினால் எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்?
இந்நிகழ்ச்சியின் விரிவான ஏற்பாட்டினைக் கவனித்துக் கொண்ட பாலாஜி, குமார்
உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

--

ஆமாச்சு
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க