Re: [உபுண்டு_தமிழ ்]கரு: உபுந ்து இயங்குதளத்த ைப் பயன்படுத்து ம் தமிழ்க்கணினி க் கூடங்கள்

2009-10-16 திரி ramadasan
On Thu, 2009-10-15 at 20:55 +0800, Elanjelian Venugopal wrote:
 வணக்கம்.
 
 இங்கு மலேசியாவிலுள்ள 2 தமிழ்ப்பள்ளிகளில் உபுந்து இயங்குதளத்தைப்
 பயன்படுத்தும் இரண்டு கணினிக்கூடங்களை அமைத்துக்கொண்டிருப்பதாக சில
 மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தேன். இரண்டு கூடங்களும் இப்போது
 பயன்பாட்டிலுள்ளன. மூதல் கூடம் மே மாதத்திலும், இரண்டாவது ஜூலை
 மாதத்திலும் செய்து முடிக்கப்பட்டன. ஏறத்தாழ 500 மாணவர்கள் இதன்வழி
 பயன்பெற்று வருகின்றனர். (உடனிணைக்கப்பட்டுள்ள படங்களைக் காண்க.) வாரம்
 ஒரு மணி நேரத்திற்கு கணினியைப் பயன்படுத்த அவர்களுக்கு வாய்ப்பு
 வழங்கப்படுகின்றது.

மகிழ்ச்சியான செய்தி.

 
 இக்கூடங்கள் தமிழைத் தொடர்பு மொழியாகக் கொண்டுள்ளன. மென்பொருள்களும்
 ஓரளவிற்கு தமிழிலேயே உள்ளதால், பாடங்களைத் தமிழில் நடத்துவது சிக்கலாக
 இல்லை. தற்போது, நான்கு படிநிலைகளிலான தகவல் நுட்பியல் பாட திட்டமொன்றை
 ஆசிரியர் குழு ஒன்று மேம்படுத்திக் கொண்டிருக்கின்றது. இவ்வாண்டு
 இறுதிக்குள் முதல் இரண்டு படிநிலைகளை முடித்து விடுவார்கள் என்று
 எதிர்பார்க்கின்றேன்.
 

மிக்க மகிழ்ச்சி. கேரள அரசின் i...@school திட்டத்தில் இருக்கும்
நல்லம்சங்களையும் கருதவும். http://itschool.gov.in/ 

தாங்கள் பின்பற்றும் வழிமுறைகளையும் ஆவணப்படுத்திகால் இங்கேயும் மற்ற
தமிழ்ப் பிரதேசங்களிலும் தொடங்க முன்னுதாரணமாகத் திகழும்.

 இவ்விரண்டு கூடங்களும் சிறப்பாக நடப்பதால், இன்னும் 8 கணினிக்கூடங்களை
 அமைக்கத் திட்டமிட்டுள்ளோம். உள்ளூர் வானொலி நிலையமொன்று 3
 கணினிக்கூடங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே போல் சிலாங்கூர் மாநில
 அரசும் இவ்வாண்டு இறுதிக்குள் 3 கணினிக்கூடங்களை அமைத்துத் தருவதாக
 உறுதிமொழி அளித்துள்ளனர். எனது அமைப்பின்வழி மீதம் 2 கூடங்கள் அடுத்த
 ஆண்டு மேம்படுத்தப்படும்.
 இக்கணினிக்கூடங்களினால் ஆண்டுக்கு 4,000க்கும் மேற்பட்ட ஆரம்பக்கள்ளி
 மாணவர்கள் பயன்பெறுவர்.
 

மிக்க மகிழ்ச்சி.

 இத்திட்டம் இந்த அளவிற்கு வந்ததற்கு நீங்கள் அனைவரும் இதுவரை மறைமுகமாக
 அளித்து வந்த உதவியும் காரணம். நீங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த
 முயற்சியால்தான் இன்று தமிழை அடிப்படை மொழியாகப் பயன்படுத்தும்
 கணினிக்கூடங்களை எங்களால் அமைக்க முடிகின்றது. உங்கள் அனைவரது அரும்பணி
 என்றும் தொடர வேண்டுகிறோம்.
 

அவசியம் தொடரும். பயன்படுத்துவோர் பெருக வேண்டும் என்பதே அனைவரது ஆவலும்.

 இவ்வேளையில், உபுந்து தமிழாக்கப் பணியை துரிதப்படுத்துவதற்காக
 எங்களிடத்திலிருந்து ஏதாவது உதவி வேண்டுமெனில் தயைகூர்ந்து கேளுங்கள்.
 ஒருவேளை நீங்கள் மலேசியா வர விரும்பினால்கூட தயங்கமின்றி கேற்கவும்;
 வரவேற்க காத்திருக்கின்றோம்!
 

ஆகா! 

கண்டிப்பாக பங்களிப்புகள் தேவைப்படுகின்றன. தர மேம்பாட்டில். குநோம்
சூழல்தானே பயன்படுத்தறீங்க?

நாடோடியை பார்த்து இப்படி வரவேற்பு ஆசை காட்டலாமா? ;-)

--

ஆமாச்சு


signature.asc
Description: This is a digitally signed message part
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam


Re: [உபுண்டு_தமிழ ்]கரு: உபுந ்து இயங்குதளத்த ைப் பயன்படுத்து ம் தமிழ்க்கணினி க் கூடங்கள்

2009-10-16 திரி ramadasan
On Sat, 2009-10-17 at 08:02 +0530, ramadasan wrote:
 மிக்க மகிழ்ச்சி. கேரள அரசின் i...@school திட்டத்தில் இருக்கும்
 நல்லம்சங்களையும் கருதவும். http://itschool.gov.in/ 

http://itschool.gov.in/downloads.php

பக்கத்தில் தமிழிலும் ஆவணங்கள் சில இருப்பதை பார்க்கவும்.

--

ஆமாச்சு


signature.asc
Description: This is a digitally signed message part
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam