Respected sir,
I am very happy to read details of Abhijith star and Abhijith period and 
related matters. I have conducted my daughter's marriage on abhijith 
muhurtha.Gopalakrishnan

    On Sunday, 28 January, 2024 at 11:59:16 am IST, 'venkat giri' via iyer123 
<iyer...@googlegroups.com> wrote:  
 
 
TODAY WHAT I LEARNT ANEW...

இன்று நான் புதிதாகக் கற்றுக்கொண்டது

 

Nakshatra Suktam (Nakshatreshti)

நக்ஷத்ரசூக்தம் नक्षत्रसूक्तम

taittirīya brahmaṇam | aṣṭakam – 3 praśnaḥ – 1
NAKSHATRASUKTAM: Nakshatras are asterisms or. lunar mansions and Suktam is a 
hymn inpraise of an. intended deity.यस्मि॒न्ब्रह्मा॒भ्यज॑य॒त्सर्व॑मॆ॒तत् । 
अ॒मुञ्च॑ लॊ॒कमि॒दमू॑च॒ सर्वम्॓ । तन्नॊ॒नक्ष॑त्रमभि॒जिद्वि॒जित्य॑ । श्रियं॑ 
दधा॒त्वहृ॑णीयमानम् । उ॒भौ लॊ॒कौ ब्रह्म॑णा॒सञ्जि॑तॆ॒मौ । तन्नॊ॒ 
नक्ष॑त्रमभि॒जिद्विच॑ष्टाम् । तस्मि॑न्व॒यं पृत॑ना॒स्सञ्ज॑यॆम। तन्नॊ॑ दॆ॒वासॊ॒ 
अनु॑जानन्तु॒ कामम्॓ ॥ 21 ॥
  yasmin brahmābhyaja’yatsarva’metat | amuñca’lokamidamū’ca sarvam” | tanno 
nakṣa’tramabhijidvijitya’ | śriya’ṃ dadhātvahṛ’ṇīyamānam | ubhau lokau 
brahma’ṇā sañji’temau | tanno nakṣa’tramabhijidvica’ṣṭām | tasmi’nvayaṃ 
pṛta’nāssañja’yema | tanno’ devāso anu’jānantu kāmam” || 21 ||

 

நக்ஷத்ரம் - அபி⁴ஜித், தே³வதா - ப்³ரஹ்மா

 

யஸ்மி॒ன் ப்³ரஹ்மா॒ப்⁴யஜ॑ய॒த்² ஸர்வ॑மே॒தத் । அ॒முஞ்ச॑ லோ॒க மி॒த³மூ॑ச॒ ஸர்வம்᳚ ।

தன்னோ॒நக்ஷ॑த்ர-மபி॒⁴ஜி-த்³வி॒ஜித்ய॑ । ஶ்ரியம்॑ த³தா॒⁴த்வ-ஹ்ரு॑ணீயமானம்।

உ॒பௌ⁴ லோ॒கௌ ப்³ரஹ்ம॑ணா॒ஸஞ்ஜி॑தே॒மௌ । தன்னோ॒ நக்ஷ॑த்ர-மபி॒⁴ஜி-த்³விச॑ஷ்டாம் ।

தஸ்மி॑ன்வ॒யம் ப்ருத॑னா॒ ஸ்ஸஞ்ஜ॑யேம । தன்னோ॑ தே॒³வாஸோ॒ அனு॑ஜானந்து॒ காமம்᳚ ॥ 21

NAKSHATRASUKTAM: Nakshatras are asterisms or lunar mansions and Suktam is a 
hymn inpraise of an intended deity.Per Yajurveda there are 28 nakshatras 
includingAbhijit(from Krittika to Bharani)

-----

 

அபிஜித் நட்சத்திர வேளையில் தொடங்கும் காரியங்கள் நிச்சயம்நன்மையில் முடியும். 
இந்த நேரத்தில் எந்த தோஷமும் இல்லை. ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி, கரிநாள், 
பிரதமை, செவ்வாய், சனிக்கிழமை என்று எந்த தடங்கலும் இல்லை.

   நமக்கு எல்லாம்தெரிந்த 27 நட்சத்திரங்களுக்கு மத்தியில் இருபத்தி எட்டாவதாக ஒரு 
நட்சத்திரம் உள்ளது என்கிறது ஜோதிடசாஸ்திரம். அதுதான் அபிஜித் நட்சத்திரம். 
உத்திராடத்திற்கும்திருவோணத்திற்கும் நடுவில் இடம் பெற்றிருக்கக்கூடிய சூட்சும 
நட்சத்திரம்தான் இந்தஅபிஜித் நட்சத்திரம்.

           இது மகர ராசியில் அமைந்திருக்கிறது.உத்திராடம் நான்காம் பாதம் மற்றும் 
திருவோணம் முதல் பாதம் மற்றும் 2 -ம் பாதத்தில் வரக்கூடிய நட்சத்திரம் இது. பிரம்ம 
சுவரூபமானஇந்நட்சத்திரத்தின் ஸ்தானம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவினுடைய தலையில் 
இருக்கக்கூடியமயிலிறகு என்கிறது மகாபாரதம். 

இந்த நட்சத்திரத்தின் மகிமையும் மகாபாரதத்தில் உள்ளது.

மகாபாரதத்தில் குருசேத்திரப் போர் தொடங்கும் முன்பு சகுனி சகாதேவனிடம் சென்று'எந்த 
நேரத்தில் போரைத் தொடங்கினால் வெற்றி பெற முடியும்' என்று நேரம்குறித்துக்கொண்டு 
வரும்படி துட்சாதனனை அனுப்பினார்.

              சோதிடத்தில் வல்லுநனரான      சகாதேவன், எதிரிகள் என்பதால் உண்மையை 
மறைக்காமல், அவர்கள் வெற்றி பெறும் வகையில் அபிஜித் நட்சத்திரம் தோன்றும்நேரத்தைக் 
குறித்துக் கொடுத்து அனுப்பினான். இதனைக் கண்ட ஸ்ரீ கிருஷ்ணன் அந்த 
நட்சத்திரத்தில் கௌரவர்கள் போரைத்தொடங்கினால் அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் 
என்பதால் வானில் இருந்த அபிஜித்நட்சத்திரத்தை எடுத்து தன் மயிலிறகில் மறைத்து 
வைத்துக் கொண்டார். மறுநாள் போர்தொடங்கும் வேளையில் இந்த நட்சத்திரத்தின் பலன் 
இல்லாமல் போகவே கௌரவர்கள் போரில்தோற்றுப் போயினர் என்கிறது பாரதம்.

        இதுவே இந்த நட்சத்திரத்தின் பெருமையையும்யோகத்தையும் கூறும் தகவல் 
என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். அபிஜித் நட்சத்திரம்மிகவும் சக்தி வாய்ந்த 
நட்சத்திரம்.

 இந்த நட்சத்திரத்தில் எந்த வேலையைத்தொடங்கினாலும் அவ்வேலை நிச்சயம் வெற்றி பெறும்.

 இதனாலேயே பாரதப்போர் முடிந்ததும் தேவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அந்த நட்சத்திரத்தை 
மீண்டும்அதனிடத்தில் வைக்குமாறு வேண்டுதல் செய்தனர்.

    கலியுகத்தில் மனிதர்கள் பெரும் தவறுகள் செய்வர்என்றும், அபிஜித் 
நட்சத்திரத்தில் எந்தகாரியத்தைத் தொடங்கினாலும் அதன் பயன் அலாதியாக இருக்கும். 
ஆகவே அது இன்னும் பெரியதீங்குகளுக்கு வழி வகுக்கும் என்று கூறி அந்த நட்சத்திரத்தை 
அவர் மறைத்தேவைத்துவிட்டார்.

                        தேவர்கள் மிகவும் மன்றாடிக்கேட்கவே தினமும் பகல் 11.45 - 
லிருந்து 12.15 மணி வரை (12 முதல் 12.30 என்றும் சில ஜோதிட வல்லுநர்கள் 
கூறுகிறார்கள்) மட்டும் அபிஜித்நட்சத்திரத்தை வானில் தோன்றுமாறு அருள் செய்தார். 
இதனால்தான்இந்த நட்சத்திரம் ஜோதிட சாஸ்திரத்தில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுடன் 
சேராமல்உள்ளது என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். மேலும் உத்திராடம் 4-ம் பாதம் 
திருவோணம் 1-ம் பாதங்களில் பிறந்தவர்கள் அபிஜித் நட்சத்திரகாரர்கள்.அதனால் இவர்கள் 
வெற்றியாளர்களாக, தோல்வியைக் கண்டு துவளாதவர்களாக இருப்பார்கள்.

          அபிஜித்நட்சத்திர வேளையில் தொடங்கும் காரியங்கள் நிச்சயம் நன்மையில் 
முடியும். இந்தநேரத்தில் எந்த தோஷமும் இல்லை. ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி, 
கரிநாள், பிரதமை, செவ்வாய், சனிக்கிழமைஎன்று எந்த தடங்கலும் இல்லை. 
உத்திராடத்துக்கு கணபதி, திருவோணத்துக்கு திருமால், இவர்களை வணங்கி இந்த வேளையில் 
நல்ல செயல்களைத் தொடங்குங்கள்!புது முயற்சி தொடங்குதல், சொத்துக்கள்வாங்க 
கையெழுத்து போடுதல், வீடுகுடிபோகுதல், பதவி ஏற்பு போன்றவைகளுக்கு அபிஜித்நட்சத்திர 
காலம் உகந்தது என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

 

   'ஜித்’ என்றால் வெற்றி பெறுதல், ‘அபிஜித்’ என்றால் சிறப்பான வெற்றி பெறுதல் 
என்பது பொருள். அபிஜித் நட்சத்திரத்தை ஸ்ரீகிருஷ்ணர் சூடிக் கொண்டு முதன்முதலாக 
காட்சி அளித்தத திருத்தலம் திருக்கண்ணபுரம். அங்கு சென்றுவழிபடுவது நலம் அளிக்கும் 
என்கிறார்கள். இங்கு அமாவாசை தின அபிஜித் நட்சத்திரகாலத்தில், அபிஜித் 
நட்சத்திரத்தைச் சேர்ந்தஸ்ரீ விபீஷண ஆழ்வாருக்கு பெருமாள் நடையழகுக் காட்டி சேவை 
சாதிக்கும் வைபவம்நிகழ்ந்து வருகிறது. முடிந்தவர்கள் சென்று தரிசிக்கலாம். இதனால் 
நிச்சயம் உங்கள்வாழ்வில் வெற்றிகளும் மங்கல நிகழ்வுகளும் கைகூடும் என்பது ஐதீகம்.

  

Things started during Abhijith Nakshatra are sure to endwell. There is no dosha 
at this time. Raghukalam, Emakandam, Ashtami, Navami,Karinal, Pratama, Tuesday 
and Saturday have no interruption.

    Astrology says that among the 27 knownstars, there is a twenty-eighth star. 
That is Abhijith Nakshatra. This AbhijithNakshatra is Sutsuma Nakshatra which 
can be placed between Uttaradam andThiruvanna.

            It is placed in Capricorn. It is aNakshatra which can come in 
Uttiradam 4th pada and Thiruvonam in 1st pada and2nd pada. The Mahabharata says 
that the position of this star, which is theform of Brahma, is a peacock on the 
head of Lord Krishna.

Theglory of this star is also in Mahabharata.

Inthe Mahabharata, before the start of the Kurusetra war, Sakuni sent 
Dutsathanato Sahadeva to mark the time when the war would be started.

               Sahadeva, an adept in astrology,did not hide the truth because 
they were enemies, but sent them the time ofappearance of Abhijit Nakshatra so 
that they would win. Seeing this, SriKrishna took the star of Abhijit in the 
sky and hid it in his peacock becauseif the Kauravas started a war in that 
star, they would surely win. Bharat saysthat when the battle started the next 
day, the Kauravas lost the battle withoutthe benefit of this star.

          Astrologers say that this is theinformation that tells the glory and 
yoga of this star. Abhijith star is verypowerful star.

  Whatever work is started in this star, thework is sure to be successful.

  Because of this, after the Bharata war, thegods requested Sri Krishna to put 
the star back in its place.

     It is said that in Kaliyuga, people commitgreat mistakes and any work 
started in Abhijit Nakshatra will be useless. So hehid the star saying that it 
would lead to greater harm.

                         The Gods begged him toappear in the sky only from 
11.45 to 12.15 (some astrologers say 12 to 12.30)every day. Astrologers say 
that this is the reason why this Nakshatra is notincluded among the twenty 
seven Nakshatras in astrology. Also those born inUttaradam 4th Padam Thiruvonam 
1st Padam are Abhijith Nakshatrakaras. So theyare winners and don't care about 
failure.

           Things started during AbhijithNakshatra are sure to end well. There 
is no dosha at this time. Raghukalam,Emakandam, Ashtami, Navami, Karinal, 
Pratama, Tuesday and Saturday have nointerruption. Ganapati for Uttarada, 
Tirumal for Thiruvonam, worship them andstart doing good deeds at this time! 
Astrology says that Abhijit Nakshatraperiod is suitable for starting a new 
venture, signing to buy property, movinghouse, accepting a position etc.

 

    'Jit' means to win and 'Abhijit' means towin well. 

  THIRUKANNAPURAM is the temple where Shrikrishnalit the Abhijith Nakshatra for 
the first time. It is said that going there andworshiping will bring health. 
Here, during the Abhijit Nakshatra period of thenew moon day, Sri Vibhishana 
Alvar of the Abhijit Nakshatra is performing theABHINAYA of  Perumal walking. 
Those whocan can go and visit and It is believed that this will definitely 
bring successand bad events in one’s  life.

-------

     The Neelamegha Perumal Temple or Sowriraja Perumal Temple isa Hindu temple 
in Thirukannapuram, a village in the outskirts of Nagapattinamin the South 
Indian state of Tamil Nadu, is dedicated to the Hindu god Vishnu.

 

It is one of the 108 Divya Desamdedicated to Vishnu, who is worshipped as 
Neelamegha Perumal (also called asNeela Meghar) and his consort Lakshmi as 
Thirukannapura Nayagi. As per Hindu legend, the presiding deity is believed 
tohave appeared with a wig (called sowri locally) to save a devotee, leading 
tothe name Sowriraja Perumal (also called as Sowrirajan or Sowrirajar).

 

As per Hindu legend,Rangabhatta an ardent devotee and priest ofthe temple 
offered a garland to the presiding deity daily offered by acourtesan. The 
courtesan used to wear the garland before offering to thepriest. One day, the 
ruling king found ahair in the garland asked the priest about it. The priest 
said that the hairwas that of the deity himself. The king thought that priest 
was lying andwanted to punish him. While he checked the deity, Vishnu himself 
appeared witha sowri (wig). Since Vishnu appeared with Sowri, he is called 
Sowriraja Perumalin the temple

     THIRUKANNAPURAM is one among the eight temples including Tirupathi, 
Srirangam,Srimushnam, Naguneri, Saligram, Pushkar and Padarikashram that 
areconsidered the eight holy centres of salvation in Vaishanavism. They 
arebelieved to stand for the Ashtakshara mantra of "Om Namo Narayanaya",with 
each centre representing a letter each. The temple is the place whereVishnu is 
believed to have represented himself in all the eight forms, thecombination of 
all the eight temples. The temple is also called BhulokaVaikuntham.

Regards

V.Sridharan
Trichy



-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"iyer123" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to iyer123+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/iyer123/228764517.1046985.1706423338434%40mail.yahoo.com.
  

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/1976284844.1044827.1706423616127%40mail.yahoo.com.

Reply via email to