Published: May 11, 2015 உன்னால் முடியும்: நம்மை மட்டுமே நம்பி தொழில்
இருக்கக் கூடாது நீரை. மகேந்திரன்

தனித்து ஜெயித்த சாதனையாளர்கள் வரிசையில் இந்த வாரம் இடம் பெறுகிறார்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையைச் சேர்ந்த த.கிருஷ்ண மூர்த்தி. படித்தது
12-ஆம் வகுப்புதான். தனது சொந்த முயற்சிகளின் மூலம் காகித அட்டை தயாரிக்கும்
தொழிலில் வெற்றிகரமான தொழில் முனைவோராக வளர்ந்து நிற்கிறார். தனது
நிறுவனத்தில் பதினைந்து நபர்களுக்கு நேரடியாகவும், பலருக்கு மறைமுக
வேலைவாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளார்.

12-ஆம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. அதனால் அப்போதே சின்னச் சின்ன வேலைகள்
பார்க்கத் தொடங்கினேன். ஆனால் எதுவும் நிரந்தர வேலையில்லை. உள்ளூரில் கேபிள்
டிவி கனெக்ஷன் கொடுக்கும் வேலையும் செய்தேன். அதற்குத் தினசரி ஒரு மணி நேரம்
ஒதுக்கினால் போதும். ஆனால் அதுவும் நிரந்தரமான வேலையில்லை. செட்அப் பாக்ஸ்
தொழில்நுட்பம் வளர்ந்து வந்ததும் கேபிள் டிவி தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள
முடியாது என்று புரிந்து விட்டது.

அதற்குப் பிறகு வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றேன். கூரியர் பாய் வேலை
மற்றும் சேல்ஸ் ரெப் வேலைகளை செய்துள்ளேன். ஆனால் அங்கும் என்னால் இருக்க
முடியவில்லை. சொந்த ஊருக்குத் திரும்பியதும் தீவிரமாக தொழில் முயற்சிகளில்
இறங்கினேன்.

தொழில் முனைவோராக வளரவேண்டும் என்பதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிடவில்லை.
ஆனால் உள்ளூரிலேயே நிரந்தர வருமானத்துக்கும், வேலை வாய்ப்புக்கும் வழி தேட
வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது.

பெரிய தொழில்நுட்ப அறிவு தேவைப்படாத உடனடியாகத் தொடங்கக்கூடிய தொழிலாக இருக்க
வேண்டும் என்பதை மனதில் கொண்டுதான் தொழிலை தேடினேன். பேப்பர் கப் மற்றும்
பேப்பர் பிளேட்டுகள் தயாரிக்கும் தொழில் குறித்துப் பலரும் ஆலோசனை
கொடுத்தார்கள்.

ஆனால் அதற்குப் போட்டி அதிகம். மார்க்கெட்டிங்கும் நாம்தான் கவனிக்க வேண்டும்.
எனவே அந்தத் தொழில் எனக்குச் சரியாகப் படவில்லை. நான் மட்டுமே செய்யும்
தொழிலாக இருக்கக்கூடாது. அதுபோல நாம் வெளியில் வேலையாகச் செல்ல வேண்டும்
என்றால் மிஷினை ஆப் செய்துவிட்டுதான் போக வேண்டும் என்கிற தொழிலாகவும்
இருக்கக்கூடாது.

உற்பத்தி செய்த பொருளை விற்பனையாளர்கள் கேட்டு வாங்கிச் செல்லும் தயாரிப்பாக
இருக்க வேண்டும் இப்படி பல யோசனைகளுக்கு பிறகு இந்தத் தொழிலைத்
தேர்ந்தெடுத்தேன். இதற்கான ஆலோசனைகளைத் திருச்சியைச் சேர்ந்த தொழில் ஆலோசனை
மையத்தின் ஆலோசகர் ராமசாமி தேசாய் கொடுத்து உதவினார்.

இந்தத் தொழில் தொடர்பான எந்த தொழில் நுட்பமும் எனக்குத் தெரியாது. வேலூர்
மாவட்டத்தில் சிலர் இந்தத் தொழில் செய்கின்றனர் எனக் கேள்விப்பட்டு அங்கு
சென்று விவரங்களைக் கேட்டுக் கொண்டேன். இயந்திரம் சப்ளை செய்தவர்கள் கொடுத்த
உதவியும் இந்த தொழிலை கற்றுக் கொள்ள வைத்தது. இப்போது எந்த சிக்கலும் இல்லாமல்
நல்ல முறையில் போய்க் கொண்டிருக்கிறது.

நான் உற்பத்தி செய்யும் காகித அட்டை பைல், நோட்டு, புத்தகம் மற்றும் காலண்டர்
போன்றவற்றின் உற்பத்திக்குத் தேவைப்படும். ஆறு மாதம் பிசினஸ் இல்லாமல்
உற்பத்தியைத் தேக்கி வைத்திருந்தாலும் அடுத்த ஒரே சீசனில் விற்பனையாகிவிடும்.
எனவே தொழிலை பொறுத்தவரை நஷ்டம் என்ப தற்கோ அல்லது உற்பத்தி தேங்கி வீணாகப்
போய்விட்டது என்பதற்கோ வாய்ப்பில்லை.

மொத்த விற்பனையாளர்கள் உற்பத்தி இடத்திற்கே வந்து வாங்கிச் செல்கின்றனர்.
மூலப்பொருட்களை திரட்டுவதிலும் சிரமமில்லை. பழைய அட்டைப்பெட்டிகள் மற்றும் மறு
சுழற்சி செய்யக்கூடிய காகிதங் கள்தான் மூலப்பொருள். மழைக் காலத்தில் மட்டும்
தொழில் கொஞ்சம் தேக்கமாக இருக்கும். இதர காலங்களில் எந்த சிக்கலும் கிடையாது
என்றார்.

தற்போது பதினைந்து நபர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பைக் கொடுக்கிறேன். மறைமுகமாக
பலருக்கும் வேலை வாய்ப்பு உருவாகிறது. தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்தத் தொழில் எனக்கு நிரந்தரமான அடையாளத்தையும்,
வருமானத்தையும் உருவாக்கிக் கொடுத்துள்ளது.

பல தொழில்களையும் செய்து பட்ட அனுபவங்கள் எல்லாம் இந்தத் தொழிலை பக்குவமாகச்
செய்ய வழிகாட்டிக் கொண்டிருக்கிறது என்று முடித்தார்.

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

                    *V A N A K K A M     S U B B U    *
[image: No Buy--- Ɲɛℓĭ ---]
<http://www.tagged.com/apps/pets.html?dataSource=Pets&ll=nav#/pet/7285675120>

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to