முற்காலத்தில் கிரேதாயுகத்தில் சுவர்கலோகத்தில் இந்திரன்  இனிய ஆடலை கண்டும்
பாடலை கேட்டும் பெண் சுகத்தில் மூழ்கி கிடந்தான் அங்கு வந்த குருவை வழிபடமால்
அவமதித்த குற்றத்தால்  இந்திரனின் செல்வம் குன்றியது : நாட்டில் பஞ்சம்
 பரவியது : குருவும் திரும்பிச் சென்றுவிட்டார்.

இந்திரன் தன் குருவை தேடிக் காணாது  பிரம்மதேவரிடம் முறையிட்டான். பிரம்மா
 அசுர குருவாகிய துவட்டாவின் மகன் விசுவரூபனை குருவாக எற்றுக் கொள்ளுமாறு
கட்டளையிட்டார். இந்திரன் தன் பொருட்டு ஒரு யாகம் செய்யுமாறு அக்குருவை
வேண்டினான். விசுவரூபன் அதற்கு உடன்பட்டு வாக்கால்," தேவர்களுக்கு ஆக்கம்
பெருகுக "என்று கூறி, மனத்தால்," அசுரர்களுக்கு ஆக்கம்  உண்டாகுக : தேவர்கள்
துன்பம் அடைக " என யாகம் செய்தான். திருஷ்டியினால் இதனை அறிந்த இந்திரன் தன்
வச்சிரப் படையால் அவனுடைய மூன்று  தலையை வெட்டினன். அவை மூன்றும் காடையும்,
ஊர்க்குருவியும்,சிச்சிலியுமாய்ப் பறந்தன.  இந்திரனை பிரமக்கொலை பாவம்
பற்றிக்கொண்டது . தேவர்கள்  அதனைத் தீர்க்க விரும்பி
மரம்,மண்,தண்ணீர்,பெண்கள், முதலியவர்ளுக்கு அப்பாவத்தை பகுந்தளித்ததால்,
இந்திரன் சுத்தம் அடைந்து விளங்கினானன்.

தன் மகனகிய விசுவரூபனை கொன்ற செய்தி  கேட்டு துவட்டா சீற்றம் கொண்டான் அவன்
ஒரு வேள்வி செய்து விருந்திராசுரன் என்னும் இரக்கமில்லா அரக்கனை
படைத்தான்.துவட்டா அவனை இந்திரனை கொன்று வருக என எவினான் இந்திரன் அவனுடன்
சண்டை செய்து தோல்வியடைந்தான்.பின்னர், ததீசி முனிவர் தந்த முதுகெலும்பால்
அவன் புதிய வச்சிராயுதம்செய்து போரிடப்புறப்பட்டான். அசுரன் பயந்து
நடுக்கடலில் ஒளிந்து இருந்தான். இந்திரன் அகத்திய முனிவரை வேண்டிக் கடல்
நீரைக் குடித்து வற்றுமாறு செய்தான் : பின்னர் அசுரனின் தலையை வெட்டி
விழ்த்தினான். அதனால் சிந்திய இரத்தம்  வற்றிய கடலையும் நிரப்பியது மிண்டும்
பிரம்மகத்திதோஷம் மிண்டும் பிடித்துக்கொண்டது தேவகுருவின் ஆலோசனைப்படி
பூலோகத்தில் தலயத்திரை செய்தான் அவன் திருக்கோதரம்,காசி, காஞ்சி, முதலிய சிவ
தலங்கலைக் கடந்து கடம்பவனத்தை அடைந்தான்: அங்கு ஒரு விமானத்தை அமைத்தான்.
அங்கு சோமசுந்தரப் பெருமானை ஆனந்தக் கண்ணிர் பெருகப் பலமுறை கைகூப்பி,

யாவையும் படைப்பாய் போற்றி.!
யாவையும்  துடைப்பாய்போறறி!
யாவையும் ஆனாய் போற்றி.!
யாவையும் அல்லாய் போற்றி.! யாவையும் அறிந்தாய் போற்றி.!
யாவையும் மறந்தாய் போற்றி.!
யாவையும்புணர்ந்தாய் போற்றி.!
யாவையும் பிரிந்தாய்    போற்றி !

என்றவாறு  பலவிதமாக இவ்வாறு இந்திரன் துதித்து பிரம்மகத்தி தோஷம் நீங்கப்
பெற்றான். மீண்டும் இந்திராணியுடன் அவன் சொர்க்கத்தில் ஆட்சி புரிந்தான்.

<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



*v **a n a k k a m**  S u b b u*    [image: Divorce Advice - Legal Advice]


[image: h16k4xlCNmQFfVwI9uA3CZUv0sTjrXqOh2qpTve4]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to