Tapas (तपस्):—Penance, the undergoing of religious austerities, the
practice of self denial and of meditation and mental concentration helpful
to self-denial.Tapas (तपस्, “penance”) represents one of the seven types of
*prāyaścitta* (‘expiation’). Prāyaścitta means ‘purification’ of from the
flaws or transmigressions.  पुण्यो गन्धः पृथिव्यां च तेजश् चास्मि विभावसौ ।

जीवनं सर्व-भूतेषु तपश् चास्मि तपस्विषु ॥ ९ ॥


*puṇyo gandhaḥ pṛthivyāṃ ca tejaś cāsmi vibhāvasau |jīvanaṃ sarva-bhūteṣu
tapaś cāsmi tapasviṣu* || 9 ||

*puṇyaḥ*–the pure; *gandhaḥ*–fragrances; *pṛthivyām*–within the earth; *ca*
–and; *tejaḥ*–the heat; *ca*–and; *asmi*–I am; *vibhāvasau*–within fire;
* jīvanam*–life; *sarva-bhūteṣu*–in all beings; *tapaḥ*–austerity; *ca*
–and; *asmi*–I am; *tapasviṣu*–in ascetics.

I am the pure fragrance of the earth, the heat in fire, the life in all
beings and the austerity of the ascetics.

श्रद्धया परया तप्तं तपस् तत् त्रि-विधं नरैः ।
अफलाकाङ्क्षिभिर् युक्तैः सात्त्विकं परिचक्षते ॥ १७ ॥


*śraddhayā parayā taptaṃ tapas tat tri-vidhaṃ naraiḥ |aphalākāṅkṣibhir
yuktaiḥ sāttvikaṃ paricakṣate* || 17 ||

*śraddhayā*–faith; *parayā*–with great; *taptam*–executed; *tapaḥ*
–austerity; *tat*–this; *tri-vidham*–threefold, in goodness, passion and
ignorance; *naraiḥ*–by men; *aphala-ākāṅkṣibhiḥ*–without desire for
results; *yuktaiḥ*–of concentrated and undivided mind; *sāttvikam*–in the
quality of goodness; *paricakṣate*–is said to be.

This threefold austerity performed with great faith and one-pointed
attention by those who are free from desire for remuneration is said by
learned persons to be governed by the quality of goodness.

तपःश्रद्धे ये ह्युपवसन्त्यरण्ये शान्ता विद्वांसो भैक्ष्यचर्यां चरन्तः ।
सूर्यद्वारेण ते विरजाः प्रयान्ति यत्रामृतः स पुरुषो ह्यव्ययात्मा ॥ ११ ॥
MUNDAKA UPANISHAD

tapaḥśraddhe ye hyupavasantyaraṇye śāntā vidvāṃso bhaikṣyacaryāṃ carantaḥ |
sūryadvāreṇa te virajāḥ prayānti yatrāmṛtaḥ sa puruṣo hyavyayātmā || 11 ||

11. But they who perform *tapas* and *sraddha* in the forest, having a
control over their senses, learned and living the life of a mendicant, go
through the orb of the sun, their good and bad deeds consumed, to where the
immortal and undecaying *purusha* is.

    Therefore Tirukkural said that only TAVAMU TAVAMUDARKKU AAGUM; tAPAS IS
A DEEP RANGE MEDITATION WHICH IS ONLY FOR THE RENUNCIATE; EKADASI UPAVAASAM
IS ONLY TO KEEP FIT WHERE GOD WORSHIP IS TAGGED; GOD EXPECTS ONLY
PUSHPAMPALAM THOYAM HARI SABDAM; BHAKTHI. Indian concept of bhakthi has
many roopams. H etried and failed . But he is not a renunciate. Tirukkural
says there renunciate aalone  can do the tapas and not meant for others.So
interpretations like ozhukkam and Kattuppadu is not for that oneday
ekadasi. Vratham is not tapas. A simple meditation ; and ekadasi vratham
gives a lot of facility to train the system  Thank you K R IRS 28724 29724

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <chittananda...@gmail.com>
Date: Sun, 28 Jul 2024 at 20:17
Subject: Fwd: Ekadasi Fasting
To:

*fasting*

*It was only eight. By then Kumar was getting hungry. Don't wake up early
in the morning and take a shower in a hurry! Stomach asks for food because
of habit after bathing.*

*"Would you like some coffee?" Lata said loudly from the kitchen.*

*"Wouldn't I have drunk coffee as soon as I woke up in the morning? I have
struggled to control myself for fasting. Why do you remind me like this?"
Kumar said with irritation.*

*"Who told you to fast Ekadasi?" Lata's murmur fell into his ear.*

*It all came from that WhatsApp message. Explaining the glories of Ekadasi
fast, the news mentioned that an American research institute after an
extensive study found that people who observe Ekadasi fast do not suffer
from health problems and live longer.*

*After reading it, the thought arose in Kumar's mind that he should observe
Ekadasi fast. The news came on Friday. Ekadasi is on the next day,
Saturday. He had an office holiday that day. So he decided that Ekadasi
fast could be done on that day.*

A person who *usually* *wakes up at 8 am on a holiday day wakes up at 6 am
and takes a bath. Even when Lata smelled the coffee, he suppressed his
desire for coffee.*

*Lata said, "There is nothing wrong with drinking coffee," but he refused.*

*Now at 8 o'clock she asks him if he wants coffee again!*

*At 9 o'clock, Kumar said, "I will go to the temple."*

*Walking down the street, the smells from the hotels, tea shops, and the
busy street food made him hungry.*

*On entering the temple, a thought struck me. He thought that if there was
any offering in the temple, he could eat it, so the fast would not be of
any use. But on Ekadasi, we do not create food for Perumal! So no offering
was available in the temple.*

*It was very tiring while returning from the temple. Suddenly he entered a
hotel.*

*“A copy,” he said to the server. "Itli, Pongal is hot sir!" said the
server. "Just bring the coffee, that's enough," said Kumar, indignantly.*

*'A cup of coffee will do you no good. If you drink coffee at home, Lata
will feel a little sarcastic. So he thought it was right to eat at the
hotel.*

*At about eleven o'clock a friend came to see him. Lata brought coffee only
for him.*

*When the friend asked, "Do you want to eat?", "Shall I give you coffee
too?" Lata said.*

*"Okay," interjected Kumar. Kumar thought that we had said yes without
knowing him, 'We have already had a coffee at the hotel. There is nothing
wrong with having another coffee' he reassured.*

*At 1, Lata left the cooked food on the dining table and sat down to eat.
Looking at Kumar "Are you also eating?" she said.*

*"Cooking just for you?" Kumar said.*

*"Can you cook like that correcta? The food I cook is enough for two
people. Shall I get a plate for you too?"*

*"I told you to fast for today!" Kumar said with irritation.*

*"I know many people who are fasting on Ekadasi may eat alone. Even you may
eat now and not eat at night."*

"Ok," said Kumar hurriedly as *hunger gnawed at his stomach* *. He said,
"At first, I will fast by eating only one meal. If I get used to this, it
will be easy to fast for the whole day."*

*Lata said, "Are you going to have a meal? Eat generously. I have eaten a
lot. Don't worry about going without me."*

*Kumar ate to his stomach as he thought how much she cares for him.*

*When making coffee in the afternoon, he asked, "Should I make coffee for
you too? Are you going to fast only for the night? Can we have coffee now?"
Lata said.*

*Kumar said nothing.*

*After a while, Lata brought the coffee. "Do you want any biscuits?" she
said.*

*Kumar stared at her as if she was teasing him and said, "No."*

*In the evening to the Latha shop **She is gone. In the middle of the day,
the stomach started feeling hungry as if it had been digested after eating
a lot. 'Do you want a biscuit?' He remembered his wife asking him.*

*He searched the kitchen shelf. There were two or three types of biscuits.
He took two of each. Next to the biscuit packets were a store-bought mixer
packet and a peanut packet. He took them too.*

*He tasted everything from biscuits, mixers and peanuts while watching TV.*

*When Lata came back from the shop at six o'clock, she said, "I bought
bananas for you at night. Don't go to bed empty-handed. There is nothing
wrong with eating fruit and milk."*

*She went inside and put the things she bought in the shop and came back
with a package in her hand. She handed the packet to him saying, "They have
put hot patties in the fake stall. They are hot. Try eating them."*

*Fasting only at night. It is only six o'clock. Night comes at 7 o'clock.
Kumar finished his patty as he thought he should not eat anything after 7
o'clock. The fritters were hot and delicious.*

*He said, "Get the banana and give it to me. I will eat it now. Don't eat
it at night."*

*Stomach was completely full after eating* *four bananas given by wife* .

*At 9 pm "Shall we give milk?" Lata said. 'Okay,' said Kumar weakly. His
stomach, which had been full in the evening, was now beginning to feel
hungry again.*

*"No, do you eat some salt and drink milk?"*

*"Is the salt red?"*

*Lata said, "I am going to make rava salt. If you want, I will also make it
for you."*

*The thought of salt water made my tongue water. "Okay" he said.*

*He ate hot salt dough and drank milk.*

*By the time he went to bed at night, he seemed to have eaten more than he
had ever eaten today while trying to keep his fast.*

*Monasticism*
*Chapter 27*
*Penance 262*

*Penance is also an insult to the penitent*
*Athilar's performance* *.*

*Meaning:*
*Only those who are disciplined and self-disciplined can do penance. A
person who does not have these qualities of penance is in vain trying to
perform penance.*

*Thanks to: Mr. Parthasarathy*


*கதை கேளு கதை கேளு*


*பகிர்வு நன்றி பதிவர்க்கு..*


*விரதம்*

*எட்டுதான் ஆகியிருந்தது. அதற்குள் குமாருக்குப் பசி எடுக்க
ஆரம்பித்துவிட்டது. காலையில் சீக்கிரம் எழுந்து அவசரமாகக் குளித்திருக்க
வேண்டாம்! குளித்தவுடன் பழக்கத்தினால் வயிறு உணவு கேட்கிறது.*

*"என்னங்க கொஞ்சம் காப்பி குடிக்கிறீங்களா?" என்றாள் லதா சமையலறையிலிருந்து,
உரத்த குரலில்.  *

*"காப்பி குடிக்கறதா இருந்தா காலையில எழுந்தவுடனேயே குடிச்சிருக்க மாட்டேனா?
நானே விரதம் இருக்கறதுக்காகக் கஷ்டப்பட்டு என்னைக்
கட்டுப்படுத்திக்கிட்டிருக்கேன். நீ எதுக்கு இப்படி ஞாபகப்படுத்தறே?" என்றான்
குமார் எரிச்சலுடன்.*

*"உங்களை யாரு ஏகாதசி விரதம் இருக்கச் சொன்னது?" என்று லதா முணுமுணுத்தது அவன்
காதில் விழுந்தது. *

*எல்லாம் அந்த வாட்ஸ்ஆப் செய்தியால் வந்தது. ஏகாதசி விரதத்தின் மகிமைகளைப்
பற்றி விளக்கிய அந்தச் செய்தி, ஒரு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் ஒரு விரிவான
ஆராய்ச்சிக்குப் பின் ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு உடல் நலப் பிரச்னைகள்
வருவதில்லை என்றும் அவர்கள் நீண்ட நாள் வாழ்கிறார்கள் என்றும் கண்டு
பிடிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.*

*அதைப் படித்ததுமே ஏகாதசி விரதம் இருந்து பார்க்க வேண்டும் என்ற எண்ணம்
குமாரின் மனதில் எழுந்தது. இந்தச் செய்தி வந்தது வெள்ளிக்கிழமை. அடுத்த நாளான
சனியன்றே ஏகாதசி. அன்று அவனுக்கு அலுவலக விடுமுறை. அதனால் அன்றே ஏகாதசி விரதம்
இருக்கலாம் என்று தீர்மானித்து விட்டான். *

*வழக்கமாக விடுமுறை நாளன்று காலை **8 மணிக்கு மேல் எழுந்திருப்பவன் அன்று காலை
6 மணிக்கே எழுந்து குளித்து விட்டான். லதா காப்பி போடும் மணம் வந்த போதும் தன்
காப்பி ஆசையை அடக்கிக் கொண்டான்.*

*"காப்பி சாப்பிட்டா தப்பு இல்லேங்க" என்று லதா சொன்ன போதும்
மறுத்துவிட்டான். *

*இப்போது 8 மணிக்கு மறுபடி காப்பி வேண்டுமா என்று கேட்டு அவனுக்கு சபலம்
ஏற்படுத்துகிறாள்!*

*9 மணிக்கு "கோவிலுக்குப் போயிட்டு வரேன்" என்று கிளம்பினான் குமார். *

*தெருவில் நடந்து செல்லும் போது ஹோட்டல்கள், டீக்கடைகள், நடமாடும்
சிற்றுண்டிச் சாலைகள் இவற்றிலிருந்து வந்த மணம் அவன் பசியை அதிகமாக்கியது.*

*கோவிலுக்குள் நுழைந்ததும் ஒரு எண்ணம் தோன்றியது. கோவிலில் ஏதாவது பிரசாதம்
கிடைத்தால் அதை உண்ணலாம், அதனால் விரதத்துக்கு பங்கம் வராது என்று நினைத்தான்.
ஆனால் ஏகாதசியன்று பெருமாளுக்கே உணவு படைப்பதில்லையாம்! அதனால் கோவிலில்
பிரசாதம் எதுவும் கிடைக்கவில்லை. *

*கோவிலிலிருந்து திரும்பும்போது மிகவும் அலுப்பாக இருந்தது. சட்டென்று ஒரு
ஹோட்டலுக்குள் நுழைந்து விட்டான்.*

*சர்வரிடம் "ஒரு காப்பி" என்றான். "இட்லி, பொங்கல் எல்லாம் சூடா இருக்கு
சார்!" என்றான் சர்வர். "காப்பி மட்டும் கொண்டு வா, போதும்" என்றான் குமார்
எரிந்து விழாத குறையாக. *

*'ஒரு காப்பி சாப்பிட்டால் ஒன்றும் ஆகாது. வீட்டில் காப்பி சாப்பிட்டால் லதா
கொஞ்சம் ஏளனமாக நினைப்பாள். அதனால் ஹோட்டலில் சாப்பிட்டது சரிதான்' என்று
நினைத்துக் கொண்டான்.*

*சுமார் பதினோரு மணிக்கு அவனைப் பார்க்க ஒரு நண்பர் வந்தார். லதா அவருக்கு
மட்டும் காப்பி கொண்டு வந்து வைத்தாள்.*

*"நீங்க சாப்பிடலியா" என்று நண்பர் கேட்டதும் "உங்களுக்கும் காப்பி
கொடுக்கட்டுமா?" என்றாள் லதா. *

*"சரி" என்று தலையாட்டினான் குமார். தன்னை அறியாமலேயே சரி என்று சொல்லி
விட்டோமா என்று நினைத்த குமார், 'ஏற்கெனவே ஹோட்டலில் ஒரு காப்பி சாப்பிட்டாகி
விட்டது. இன்னொரு காப்பி சாப்பிட்டால் தவறில்லை' என்று சமாதானப்படுத்திக்
கொண்டான். *

*1 மணிக்கு, சமைத்த உணவுகளைச் சாப்பாட்டு மேஜையில் வைத்து விட்டு லதா சாப்பிட
உட்கார்ந்தாள். குமாரைப் பார்த்து "நீங்களும் சாப்பிடறீங்களா?" என்றாள்.*

*"உனக்கு மட்டும்தானே சமைச்சிருப்பே?" என்றான் குமார்.*

*"அப்படி கரெக்டா சமைக்க முடியுமா? நான் சமைச்ச சாப்பாடு ரெண்டு பேருக்குக
காணும். உங்களுக்கும் தட்டு எடுத்து வைக்கட்டுமா?"*

*"நான்தான் இன்னிக்கு விரதம்னு சொன்னேனே!" என்றான் குமார் எரிச்சலுடன்.*

*"எனக்குத் தெரிஞ்சு ஏகாதசி விரதம் இருக்கறவங்க நிறைய பேரு ஒருவேளை மட்டும்
சாப்பிடுவாங்க. நீங்க கூட இப்ப சாப்பிட்டுட்டு ராத்திரி சாப்பிடாம
இருக்கலாம்."*

*பசி வயிற்றைக் கிள்ளிக்**கொண்டிருந்த நிலையில், "சரி" என்றான் குமார்
அவசரமாக. "முதல்ல ஒரு வேளை மட்டும் சாப்பிட்டுட்டு விரதம் இருக்கேன். இது
பழகிடுச்சுன்னா, நாள் முழுக்க  விரதம் இருக்கறது சுலபமா இருக்கும்" என்றான்.*

*"ஒரு வேளைதானே சாப்பிடப் போறீங்க? கொஞ்சம் தாராளமாவே சாப்பிடுங்க. எல்லாம்
நிறையவே செஞ்சிருக்கேன். எனக்கு இல்லாம போயிடுமோன்னு கவலைப்படாதீங்க" என்றாள்
லதா.*

*தன் மீது எவ்வளவு அக்கறை இவளுக்கு என்று நினைத்தபடியே வயிறு முட்டச்
சாப்பிட்டான் குமார்.*

*பிற்பகலில் காப்பி போடும்போது, "என்னங்க உங்களுக்கும் காப்பி கலக்கட்டுமா?
ராத்திரி மட்டும்தானே விரதம் இருக்கப் போறீங்க? இப்ப காப்பி சாப்பிடலாம்
இல்ல?" என்றாள் லதா.*

*குமார் எதுவும் சொல்லவில்லை.*

*சற்று நேரத்தில் லதா காப்பி கொண்டு வைத்தாள். "பிஸ்கட் ஏதாவது வேணுமா?"
என்றாள்.*

*இவள் தன்னைக் கிண்டல் செய்கிறாளோ என்று நினைத்தபடி அவளை முறைத்த குமார்,
"வேண்டாம்" என்றான். *

*மாலை லதா கடைக்குப் **போய்விட்டாள். மத்தியானம் வயிறு நிறையச் சாப்பிட்டும்
சீக்கிரமே ஜீரணம் ஆகி விட்டது போல் வயிறு பசிக்க ஆரம்பித்தது. 'பிஸ்கட்
வேணுமா?' என்று மனைவி கேட்டது நினைவு வந்தது.*

*சமையலறை ஷெல்ஃபில் தேடினான். இரண்டு மூன்று வகை பிஸ்கட்கள் இருந்தன.
ஒவ்வொன்றிலும் இரண்டு எடுத்துக் கொண்டான். பிஸ்கட் பாக்கெட்டுகளுக்கு
அருகிலேயே கடையில் வாங்கிய ஒரு மிக்சர் பாக்கெட் மற்றும் ஒரு வேர்க்கடலை
பாக்கெட் ஆகியவை இருந்தன. அவற்றையும் எடுத்துக் கொண்டான்.*

*டிவி பார்த்தபடியே பிஸ்கட், மிக்ஸர், வேர்க்கடலை எல்லாவற்றையும் சுவைத்தான்.*

*கடைக்குப் போன லதா ஆறு மணிக்குத் திரும்பி வந்தவுடன், "ராத்திரி உங்களுக்காக
வாழைப்பழம் வாங்கிக்கிட்டு வந்தேன். வெறும் வயத்தோட படுக்க வேண்டாம். பழமும்
பாலும் சாப்பிட்டா தப்பு இல்லை" என்றாள்.*

*உள்ளே சென்று கடையில் வாங்கியவற்றை வைத்துவிட்டு வந்தவள் கையில் ஒரு
பொட்டலத்துடன் வந்தாள். "போளி ஸ்டால்ல சூடா பஜ்ஜி போட்டுக்கிட்டிருந்தாங்க.
சூடா இருக்கு. சாப்பிட்டுப் பாருங்க" என்று பாக்கெட்டை அவனிடம் கொடுத்தாள்.*

*இரவில்தான் விரதம். மணி ஆறுதான் ஆகிறது. 7 மணிக்குத்தான் இரவு வரும். 7
மணிக்கு மேல் எதுவும் சாப்பிட வேண்டாம் என்று நினைத்தபடி பஜ்ஜியை உண்டு
முடித்தான் குமார். பஜ்ஜி சூடாகவும் சுவையாகவும் இருந்தது. *

*"வாழைப்பழம் வாங்கிக்கிட்டு வந்தியே அதைக் கொடு. இப்பவே சாப்பிட்டுடறேன்.
ராத்திரி சாப்பிட வேண்டாம்" என்றான்.*

*மனைவி கொடுத்த நான்கு வாழைப்**பழங்களைத் தின்ற பின் வயிறு முழுமையாக
நிறைந்திருந்தது.*

*இரவு 9 மணிக்கு "என்னங்க பால் கொடுக்கட்டுமா?" என்றாள் லதா. 'சரி" என்றான்
குமார் பலவீனமாக. சாயந்திரம் நிறைந்திருந்த வயிற்றில் இப்போது மீண்டும் பசி
எடுக்க ஆரம்பித்துவிட்டது.*

*"இல்லை, கொஞ்சம் உப்புமா சாப்பிட்டுட்டு பால் குடிக்கிறீங்களா?"*

*"உப்புமா செஞ்சிருக்கியா என்ன?'*

*"எனக்கு ரவா உப்புமா பண்ணப் போறேன். வேணும்னா உங்களுக்கும் சேர்த்து
செய்யறேன்" என்றாள் லதா.*

*உப்புமாவை நினைத்ததும் நாவில் நீர் ஊறியது. 'சரி " என்றான்.*

*சூடான உப்புமாவை உண்டு விட்டுப் பால் குடித்தான்.*

*இரவு படுக்கப் போகும் போது, விரதம் இருக்க முயன்ற இன்று எப்போதும்
சாப்பிடுவதை விட அதிகமாகச் சாப்பிட்டு விட்டதாகத் தோன்றியது. *

*துறவறவியல் *
*அதிகாரம் 27      *
*தவம்   குறள் 262*

*தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவமதனை*
*அஃதிலார் மேற்**கொள்வது.*

*பொருள்:  *
*ஒழுக்கமும், கட்டுப்பாடும் உள்ளவர்க்கே தவம் கூடும். தவத்துக்கே உரித்தான
இந்த குணங்கள் இல்லாதவர் தவம் மேற்கொள்ள முயல்வது வீண்.*

*நன்றி: திரு.பார்த்தசாரதி*


*சித்தானந்தம்*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZor%2BHRcFwryESxaWxjJyVq86qcKQ6rkScjEEtmMrtJ9PRg%40mail.gmail.com.

Reply via email to