I politely disagree that Tamil grammar is so simple. TE MA PU LI MA VENBA
THEOREM IS ENOUGH; PEOPLE WILL RUN AWAY; TAMIL IS SO SIMPLE MAJORITY WILL
NOT SPEAK MADRAS LANGUAGE. As said by Bharathi it is a sweet language; athi
kay koy koy  Kannadasan style from kamban style are seen But grammar is
tough only in Tamil; second one is Hindi Gender; so Tamil has a force only
to one who had learnt it thoroughly. Always spoken and learnt language
would diffre. But British made politics out of it as prakrthm and
samskrithm. KR IRS 14 11 23

---------- Forwarded message ---------
From: Chittanandam V R <chittananda...@gmail.com>
Date: Tue, 14 Nov 2023 at 09:16
Subject: Fwd: Tamilnaayagam = Kamba Ramaayanam - Soorppanaga (41)
To:




கம்ப இராமாயணம் - சூர்ப்பணகைப் படலம் (41)

*தமிழ்நாயகம் *

தழல் எடுத்தான் மலை எடுத்தான்


இலக்குவனால் மூக்கும், காதும், முலையும் அறுபட்ட சூர்ப்பணகை வலியில்,
அவமானத்தில் துடிக்கிறாள்.

துன்பம் என்று வரும்போது நமக்கு யார் துணை செய்வார்கள் என்று நினைப்பது இயல்பு.
 சூர்ப்பணகையின் தமையர்கள் யார் ? இராவணன், கும்பகர்ணன், வீடணன். பெரிய
பலசாலிகள். இராவணா, என் நிலையைப் பார் என்று கதறி அழுகிறாள்.

ஒரு புறம் சூர்ப்பணகையின் அவலம். இன்னோரு புறம் கம்பனின் அற்புதமான பாடல்கள்.
பாடலை இரசித்து மகிழவா அல்லது சூர்ப்பணகையின் துன்பம் கண்டு வருந்தவா என்று
தெரியாமல் நம்மைக் குழப்பும் பாடல்கள். பாடல்கள் அத்தனையும் தேன். துன்பத்தைக்கூட
இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா என்று வியக்க வைக்கும் பாடல்கள்.

அழுது, இராவணனை கூப்பிட்டாள் என்ற ஒரு வரியைத் தவிர அந்த பாடல்களில் ஒன்றும்
இல்லை. ஆனால், அவள் கூப்பிட்ட விதம்..அருமையிலும் அருமை.  வாசகர்களுக்குப் பொறுமை
இருக்குமா என்று தெரியவில்லை, அவற்றை இரசிக்க.  இல்லை என்றால், விட்டுவிட்டு
மேலே போய் விடலாம். உங்கள் எண்ணத்தை  தெரிவியுங்கள்.

சரி, பாடலுக்கு வருவோம்....


"இராவணா , இந்த நிலத்தில் நீ நிலைத்து இருக்கும் போது, இந்த தவ வேடம் பூண்ட
மானிடர்கள் கையில் வில்லை எடுத்துக் கொண்டு அலைவது சரியா? உன் எதிரில்
தேவர்கள்கூட நிமிர்ந்து பார்க்கப் பயப்படுவார்களே!  நீ யார், அனலைக் கையில்
கொண்ட சிவனின் மலையை கையில் எடுக்க முயன்ற பலசாலி ஆயிற்றே ... உன் தங்கையின்
நிலையைப்  பார்க்க வரமாட்டாயா...வா "
என்று அழைக்கிறாள்.

"எடுத்து" என்ற சொல்லை கம்பன் எப்படி எடுத்தாள்கிறான் என்று பாருங்கள்.

பாடல்




*'நிலை எடுத்து, நெடு நிலத்து நீ இருக்க, தாபதர்கள் சிலை எடுத்துத்
திரியும்இது சிறிது அன்றோ? தேவர் எதிர்தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே! தழல்
எடுத்தான் மலை எடுத்த தனி மலையே! இவை காண வாராயோ?*

பொருள்

கையில் தீயைக் கொண்ட (சிவனின்) கைலாய மலையை கையில் எடுத்த
ஒப்பற்ற மலை போல் வலிமை உடையவனே!
பெரிய நிலத்தில் நீ  நிலைத்து இருக்க தவக் கோலம் கொண்டவர்கள்
கையில் வில்லை எடுத்து திரிகின்ற இந்த நிலை சிறுமை அல்லவா?
தேவர்கள் உன் எதிரில் தலை தூக்கி விழித்துப் பார்க்காமை இருப்பதே
இயல்பன்றோ! இந்த கொடுமையை காண வர மாட்டாயா ?
( தாபதர்கள் = தவம் செய்வோர்; சிலை = வில்; சமைப்பதே = இருப்பதே; தழல் = தீ;
தனி = ஒப்பற்ற)


நிலை எடுத்து
சிலை எடுத்துத்
தலையெடுத்து
தழல் எடுத்து
மலை எடுத்து

தமிழ்  சொற்கள் கம்பனிடம் கை கட்டி சேவகம் செய்தன. என்னை எடுத்துக் கொள் ,
என்னை எடுத்துக் கொள் என்று அவன் முன் வரிசையில் நின்றன.

சூர்ப்பணகையின் புலம்பலில் இத்தனை தமிழ் சுவை.

கொஞ்சம் இலக்கணம் படிப்போமா ?

"மலை எடுத்த தனி மலையே " என்று இராவணனை குறிப்பிடுகிறாள்.

மலை போன்ற உறுதியானவன், வலிமையானவன் இராவணன் என்று சொல்லவந்தாள். அவனையே மலை
என்று சொல்லி விட்டாள்.

இதற்கு "உவமை ஆகு பெயர்" என்று இலக்கணத்தில் பெயர். அது என்ன ஆகு பெயர்.
ஒன்றிற்கு ஆகி வரும் பெயர். ஒன்றின் பெயர் இன்னொன்றுக்கு ஆகி வருவது ஆகு பெயர்
எனப்படும்.

சில உதாரணங்கள் பார்ப்போம்.

"அறம் பற்றி அறிய வேண்டும் என்றால் வள்ளுவனைப் படி" என்று சொன்னால், வள்ளுவரை
எப்படிப் படிக்க முடியும். அவர்தான் இல்லையே. இருந்தாலும்,  ஆளை எப்படி படிக்க
முடியும்? வள்ளுவனை படி என்றால் அவர் எழுதிய திருக்குறளைப் படி என்று
அர்த்தம். இதற்கு கர்த்தாவாகு பெயர் என்று அர்த்தம். திருக்குறளின் கர்த்தாவான
வள்ளுவர், அந்த திருக்குறளுக்கு ஆகி வந்தமையால் அது கர்த்தாவாகு பெயர் .

"அடுப்புக்கு பக்கத்தில நெய்யை வச்சிருக்க பாரு. அந்த நெய்யை கொஞ்சம் மாத்தி
அந்தப் பக்கம் வை." என்று சொன்னால், நெய்யைத் தள்ளி வை என்று அர்த்தம்
அல்ல.  நெய் உள்ள பாத்திரத்தைத் தள்ளி வை என்று அர்த்தம். அதை  தானியாகு பெயர்
என்று சொல்லுவார்கள். தானி என்றால் ஸ்தானம் அல்லது இடம். நெய் இருக்கும் இடமான
அந்தப் பாத்திரத்துக்கு நெய் என்று சொல் ஆகி வந்ததால் அதற்கு தானியாகு என்று
பெயர்.

தமிழ் இலக்கணம் மிக எளிமையானது. வாழ்வோடு ஒட்டி வருவது. அன்றாடம் நடை முறையில்
நாம் கையாள்வது. படிக்க படிக்க மிக சுவையானது. 'அட, இதற்கு இப்படி ஒரு பெயர்
இருக்கா ' என்று ஆச்சரியப் பட வைக்கும்.

இப்படி இன்னும் கொஞ்சம் இருக்கு. தேடுங்கள், கண்டடைவீர்கள்.

மேலும் இரசிப்போம்.

*தமிழ்நாயகம் *

********************************

*சித்தானந்தம் *

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
To view this discussion on the web visit 
https://groups.google.com/d/msgid/thatha_patty/CAL5XZopSWDwBNAnHzb%3D0B7G0brAVxp0O%2B7aBdJ4UtAts2eJCOQ%40mail.gmail.com.

Reply via email to