2008/10/17 ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>
>
> இணைய வசதி இருந்தால் தான் மொழிக்குத் தேவையான பொதிகள் நிறுவப்படுகின்றன.
> இது பழைய சேதிதான். :-)

ஆம்.

முன்னைய உபுண்டு 8.04 - பீட்டா இறுவட்டில் scim-tables கான தமிழ்
விசைமாற்றிகள் இருந்தன. ஆனால் உபுண்டு 8.04 இறுதி இறுவட்டில் அதை எடுத்து
விட்டார்கள். உபுண்டு 8.10  பீட்டா இறுவட்டிலும் இல்லை. குபுண்டு
இறுவட்டுகளில் எபபோதும் இல்லை.

>
> மேலும் காதம்பரி கல்யாணி போன்ற மின்னெழுத்துக்கள் முறையான தமிழ் யுனிகோடு
> மின்னெழுத்துக்கள் அல்ல. இதுதான் பயர்பாக்சில் ஆங்கில எழுத்துக்கள் மீது
> தமிழ் படர காரணமா என்று சோதித்து உறுதி செய்ய வேண்டும்.

தாங்கள் சொல்லும் "ஆங்கில எழுத்துக்கள் மீது தமிழ் படரல்"  ஆனது
http://ubuntuforums.org/showthread.php?t=889079 வழுவா ?

TAMu ( காதம்பரி, கல்யாணி, மதுரம்) எழுத்துருக்களை அகற்றுவதால் அவ்வழு
தீர்வதில்லை. அதாவது ஒருங்குறி தமிழ் + தாம் தமிழ் கலவையான
அவ்வெழுத்துருக்கள் கட்டகத்தில் நிறுவப்பட்டிருப்பது இவ்வழுவிற்கு ஒரு
காரணி அல்ல.

மாறாக lohit_ta.ttf எழுத்துருவை அகற்றினால் அவ்வழு அகலுகிறது.

எல்லா விதமான லினக்ஸ் இயங்குத்தளங்களிலும்  lohit_ta.ttf  தமிழிற்கு
அடிப்படையாக செயல்படுகையில்  உபுண்டு மற்றும் சில டெபியன் சார்
இயங்குத்தளங்களில் மட்டும் தமிழ் மொழியிடச்சூழலில், பயர்பக்ஸ்  3 வரிசை
உலாவியில்  ஜி-மெயில் உட்பட்ட சில கூகிள் இடைமுகப்புக்கள், அதே போல யாஹூ
சார் இடைமுகப்புக்கள் போன்றவைகளில் மட்டும் இந்த "படரல்" பிரச்சினை ஏற்பட
காரணம் என்ன எனபதைக் கண்டறிந்து தீர்வுக்கு வருவதே தேவைப்படும் முழுமையான
வழு தீர்வாகும்.

இவ் வழுவைப்பற்றி இன்னொரு மடலில் பின்னர் தொடர்வேன்.

~சேது
-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க