-------- Original Message --------
Subject: [உபுண்டு_தமிழ்]இந்தச் சிக்கல் உங்களுக்கும் இருக்கா?
From: ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M <[EMAIL PROTECTED]>
To: ubuntu-l10n-tam@lists.ubuntu.com,   தமிழக உபுண்டு பயனர் குழு   
<ubunt?=  [EMAIL PROTECTED]>
Date: Thu Aug 21 2008 20:10:48 GMT+0530 (IST)
> http://ubuntuforums.org/showthread.php?t=889079
>
> -- 
> ஆமாச்சு

அங்கு  "ilanv" அவர்கள் வழு அறிக்கையுடன் இணைத்த திரைக்காட்சி பார்க்க புகுப்பதிகை 
வினவுகிறது ubuntuforums. ஏற்கனவே அதற்கு எனக்கு ஒரு பயனர் கணக்கு 
ஏற்படுத்தியிருந்துள்ளேனோ என்பது நினைவிலில்லை. எனவே இதுவரை அவரது இணைப்பைப் 
பார்கவில்லை. ஆயினும் நான் கண்டறிந்த பின் வருபவனவை அவர் கூறும் வழுவாகத்தான் 
இருக்கும்.

1. உபுண்டு 8.04 அமர்வில் மொழியிடச்சூழல் (locale) தமிழ் ஆக (அதாவது சூழல் வேறி 
LANG=ta_IN ) அமைத்திருக்கையில் பயர்பாக்ஸ்  - 3.0  உலாவியில் ஜி-மெயில் வலைத்தள 
அஞ்சல் இடைமுகப்பில் பல இடங்களில் ஆங்கில எழுத்துக்கள இருக்க வேண்டியவிடங்களில் 
தமிழ் 
எழுத்துக்களாக வாசிக்கவியலத்தவாறு தென்படுகின்றன.

பின்வரும் இரு வலையிடங்களில் காட்டாக இரு திரைக்காட்ச்சிப் பிடிபுக்களைப் 
பார்க்கலாம் . 
(அப்படங்களில் சிவப்பு நிறத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள இடங்களில் பார்க்கவும்)

http://i36.tinypic.com/260q1pc.jpg
http://i35.tinypic.com/abh26c.jpg

2.  மேற்கூறிய அதே இயங்குத்தள மற்றும் அதே தமிழ் மொழியிடச்சூழல் ஆகியவற்றுடன் அதே 
உலாவியில் ஏனைய google சேவைகளிலும் அவ்வாறான சிக்கல்கள்  தென்படுகின்றன.

3. மேற்கூறிய அதே இயங்குத்தள மற்றும் மொழியிடச்சூழல் ஆகியவற்றுடன் பழைய  
பயர்பாக்ஸ்  - 
2.0 வரிசை  உலாவியில் அச்சிக்கல்கள் எதுவும் இல்லை !

4. அதே உபுண்டு 8.04 இல் மொழியிடச்சூழல் ஆங்கிலமாயின் (LANG=en_US.UTF-8) 
அச்சிக்கல்கள் எதுவும் இல்லை

5. தற்போது சோதனை வெளியீடாக இருக்கும் அடுத்த உபுண்டு இன்ரெபிட்  (Intrepid Ibex)  
அல்ஃபாவில்  தமிழ் மொழியிடச்சூழலில் பயர்பாக்ஸ்  - 3.0 இல் google சேவைகளில் 
மேற்கூறிய 
வழுக்கள் இல்லை. ஆனால் இன்னொரு வழு  உள்ளது. 

அதற்கான திரைக்காட்சிப் பிடிப்புடன் மேலும் சிக்கல் தீர்க்கும் மாற்று வழிகள் 
பற்றி இன்று 
மாலையின் பின் அடுத்த மடலில் தொடர்வேன்

~சேது



-- 
Ubuntu-l10n-tam mailing list
Ubuntu-l10n-tam@lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-l10n-tam

அவர்களுக்கு பதிலளிக்க