வணக்கம் கணிமொழியின் அடுத்த மாதத்திற்கான படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் படைப்புகள் அடுத்த மாதப் பிறப்பிற்கு ஒரு வாரம் முன்னதாக (08/06/2008) எம்மை வந்தடையும் படி பார்த்துக் கொள்ளவும். சுருக்கமாக சொல்லிடின், * விருப்பமுள்ள எவரும் பங்களிக்கலாம். * கட்டற்ற கணிநுட்பத் துறை சார்ந்த விடயமாக இருத்தல் வேண்டும். * பகிர்வதை கட்டுப்படுத்தாத வண்ணம் படைப்புகள் இருத்தல் அவசியம். உதாரணத்திற்கு காபிலெப்ட். * தாங்கள் பங்களிக்க விரும்பும் ஒரு பகுதியில் வேறொருவர் ஏற்கனவே பங்களித்து வருகிறார் எனின் அவருடன் இணைந்து பணியாற்ற முனையவும். * கட்டுரைகள் மொழிபெயர்ப்புகளாகவும், விடயமறிந்த ஒருவர் சொல்லக் கேட்டு கற்று இயற்றப்பட்டவை யாகவும் இருக்கலாம். * படைப்புகள் தொடர்களாகவும் இருக்கலாம். * தொழில் நுட்பம், கொள்கை விளக்கம், பிரச்சாரம், கதை, கேலிச்சித்திரம், நையாண்டி எனப் பலசு வைகளிலும் இத்துறைக்கு பொருந்தும்படியான ஆக்கங்களாக இருக்கலாம். * தங்களுக்கு இயல்பான எந்தவொரு நடையிலும் எழுதலாம். * தங்களது படைப்புகளை எளியதொரு உரை ஆவணமாக திட்டப் பொறுப்பாளருக்கு அனுப்பிவைக்கவும். * தள பராமரிப்பு, ஆதரவளித்தல் உள்ளிட்ட ஏனைய விதங்களிலும் தாங்கள் பங்களிக்கலாம். * ஐயங்களிருப்பின் திட்டப் பொறுப்பாளருக்கு ([EMAIL PROTECTED]) மடலியற்றவும். விரிவான விவரங்களுக்கு கணிமொழியின் அறிமுகப் பக்கத்தை அணுகவும்: http://kanimozhi.org.in/01/01/kanimozhi-arimugam.html உங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். -- ஆமாச்சு -- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam