"மென்விடுதலை நாள் - 2008" கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கட்டற்ற மென்பொருள் பற்றிய ரிச்சர்டு எம். ஸ்டால்மேனின் கட்டுரைகள் புத்தகமாக வெளியிடப்படுகின்றது.
புத்தக விவரம்: *பெயர்:* கட்டற்ற மென்பொருள் *ஆசிரியர்:* ரிச்சர்டு எம். ஸ்டால்மேன் *தமிழாக்கம்:* ம ஸ்ரீ ராமதாஸ் *பதிப்பாளர்:* ஆழி பப்ளிகேஷன்ஸ், கோடம்பாக்கம், சென்னை - 24. தொ.பே: +91 44 43587585 கீழ்காணும் நிகழ்வுகளில் இப்புத்தகம் வெளியிடப்படுகிறது. 1) மென்விடுதலை நாள் கொண்டாட்டங்கள் - 2008 ஜெயா பொறியில் கல்லூரி, திருநின்றவூர், சென்னை. தேதி: 20 செப் 08 நேரம்: காலை 9.30 மணி தொடர்பாளர்: சிவாஜி - 99415 71690 இணைய முகவரி: http://jayafossclub.org/ 2) விடுதலையும் மென்பொருளும் சந்திப்பு ரஷ்ய பண்பாட்டு மையம் 27 கஸ்தூரி ரங்கா சாலை, (கத்தீட்ரல் ரோடு அருகில்) சென்னை-600018 தேதி: 21 செப் 2008 நேரம்: 4.00 மணி தொடர்பாளர்: பாலாஜி - +91 98407 87427 இணைய முகவரி: http://www.freedomandsoftware.info/ இவ் வெளியீட்டு விழா(க்களில்)வில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கிறோம். இச் செய்தியை பரப்பிட உதவுமாறும் கேட்டுக் கொள்கிறோம். என்றும் மலரும் நினைவுகளாக இவை திகழட்டும். பி.கு: தாங்கள் வசிக்கும் இடத்தை சுற்றியுள்ள குனு/ லினக்ஸ் ஆர்வலர்களைக் கொண்டு வெளியீட்டு நிகழ்ச்சியினை தாங்களே ஏற்பாடு செய்து புத்தகத்தை வெளியிட்டும் உதவலாம். விவரங்களுக்கு தனித்து மடல் அனுப்பவும். தொடர்புடைய இணைப்பு: http://kanimozhi.org.in/kanimozhi/?p=74 -- ஆமாச்சு
-- Ubuntu-tam mailing list Ubuntu-tam@lists.ubuntu.com Modify settings or unsubscribe at: https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam