வணக்கம்,

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் (
http://www.msuniversitytvl.net/), செப்டம்பர் 3 மற்றும் 4 ம்  தேதிகளில்
கட்டற்ற மென்பொருள் குறித்த விழிப்புணர்வு வகுப்புகள், சென்னை என்.ஆர்.சி.பாஃஸ்
(NRCFOSS) சார்பில் ஒருங்கிணைத்து நடத்தப் பட்டன.

அப் பல்கலைக்  கழகத்தின்  ஐம்பதுக்குக்கும் மேற்பட்ட எம்.சி.ஏ  மாணவர்கள்
கலந்து கொண்டனர்.  மூன்றாம்  தேதி காலை  அப்பல்கலைக் கழகத்தின் பதிவாளர்,
முனைவர் செல்லப்பன் அவர்களால் இவ்வகுப்புகள் துவக்கி வைக்கப் பட்டன.
கணினித் துறைத் தலைவர் முனைவர் சதாசிவம் முன்னிலை  வகித்தார்.  இவ்விரண்டு நாள்
கலந்தாய்வு வகுப்புகளை  பொன்னுசாமி, சஞ்சய் மற்றும் இராமதாஸ் ஆகியோர்
ஒருங்கிணைத்து நடத்தினர்.   அக்கல்லூரியின் விரிவுரையாளர் திரு.  முருகன்
இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.

குனு/  லினக்ஸ் நிறுவும் முறை,   கட்டற்ற மென்பொருள் நியதிகள்,  முனைய
கட்டளைகள்,  பணிச்சூழல்கள், இணைய வழங்கிகள் முதலிய பொருட்களை  உள்ளடக்கி
கலந்தாய்வு வகுப்புகள் நடத்தப் பட்டன. உபுண்டு, டெபியன், பெடோரா முதலிய குனு/
லினக்ஸ் வெளியீடுகள் பயன்படுத்தப் பட்டன.

தொடர்ந்து இத்தகைய நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க ரமேஷ், பிரியங்கா, ஸ்டெல்லா,
சௌமியா  ஆகிய மாணவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
-- 
Ubuntu-tam mailing list
Ubuntu-tam@lists.ubuntu.com
Modify settings or unsubscribe at: 
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-tam

அவர்களுக்கு பதிலளிக்க