மவுனம்
--------------------------------------------------------------------------------------------------------------
மொழியின் ஓட்டத்துக்கு
இடையிலான இறுக்கம்
மவுனம் என்பதாகத்தான்
இதுவரை வரையறுத்திருந்தேன்.
உன் மவுனத்திற்கும்
என் மவுனத்திற்குமான
வேறுபாட்டினை நுகரநுகர
வார்த்தை செலவின்றி
இலக்கணத் திருத்தமொன்றை நீ
அரங்கேற்றியிருப்பது புரிகிறது.
வேதனையில் நிகழ்கிறது
என் மவுனம்.
வெட்கத்தில் நிகழ்கிறது
உன் மவுனம்.
பேச்சுத்தொடரின்
அரைப்புள்ளி
என் மவுனம்.
அதன் தொடக்கக்குறி
உன் மவுனம்.
அறுந்து போகும்
ஒரு மொழித்தடங்கல்
என் மவுனம்.
இளைப்பாறும்
சிறு மொழித்தங்கல்
உன் மவுனம்.
வெளியிடவியலாத எண்ணங்களால்
தேங்கிய பிரசவம்
என் மவுனம்.
இடைவெளி இல்லாத எண்ணங்களாய்
தங்காத கரு
உன் மவுனம்.
என் மவுனம்
உமிழ்ந்தவற்றின் மிச்சம்.
உன் மவுனம்
விழுங்கப்படாதவற்றின் மீதி.
மேலும் பசியைத் தூண்டிக்கொண்டு....
சில சமயங்களில்
நீ வேலையாயிருப்பதன்
அடையாளம் உன் மவுனம்.
எதற்காகவோ
கோழையாயிருப்பதன்
தடயம் என் மவுனம்.
நீ மவுனம் அணிகிறாய்.
ஆபரணமாய் உன் மவுனம்.
ஆயுதமாயும் உன் மவுனம்.
ஆடைத்துணி போல
உடுத்தாமலும் அழகு
உன் மவுனம்.
உன் சேவகனாய் உன் மவுனம்
நீ அதை எழுதுகிறாய்,
பேசுகிறாய்,
கண்களில் வழியவிடுகிறாய்
--
--
I like you because of
who you are to me....
A true friend.
And if I don't get this
back I'll take the hint.
janu
--~--~---------~--~----~------------~-------~--~----~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
OWNER : [EMAIL PROTECTED]; [!! Sriram Savarkar ¡¡]
MODERATOR : [EMAIL PROTECTED] { !! Âjay Nayak !! }
MODERATOR : [EMAIL PROTECTED]>, "•–([NiCkkkDoN])–•"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
You received this message because you are subscribed to the Google Groups
"Sriram Savarkar" group.
To modify your list subscription, please send a blank email to:
For posting Messages: [email protected]
Subscribe : [EMAIL PROTECTED]
Unsubscribe : [EMAIL PROTECTED]
Visit Group : http://groups.google.com/group/sriram-savarkar?hl=en
-~----------~----~----~----~------~----~------~--~---