Dear Shri M.S. Srinivasan, Excellent.I got an answer for my long cherished query Thanks. T.Ramanujam 2008/10/27 Srinivasan MS <[EMAIL PROTECTED]>
> > *பெருமாளின் அம்மாள் > * > *தமிழடியார் சீர்பரவுவார்* > *டாக்டர் எஸ்.ஜெயபாரதி > * > > > > * வைணவர்களுக்கு நடாதூர் அம்மாள் என்ற பெயர் மிகவும் பரிச்சயமானது. > 'அம்மாள்' என்றதும் யாரோ பொம்பளையாக்கும் என்று நினைத்துவிடவேண்டாம். > > அவருடைய இயற்பெயர் வரதகுரு. ஊர் காஞ்சி. அவர் வாழ்ந்த காலம் துருக்கர்கள் > டில்லியிலிருந்து தென்னாடு வருவதற்குச் சற்று முன்னர். > > காஞ்சியில் எங்களாழ்வான் என்றொரு வைணவப்பேரறிஞர் இருந்தார். > வரதகுருவின் தந்தை அவரை எங்களாழ்வானிடம் ஸ்ரீபாஷ்யம் கேட்டறிவதற்காக > அனுப்பினார். > வாசல் கதவைத திறந்திருக்கிறார். அரவம் கேட்டு எங்களாழ்வான் "யார்ராது?" > என்று கேட்டிருக்கிறார். > ஏற்கனவே நன்கு பரிச்சயமான ஆளல்லவா. ஆகவே "நான் தான் வந்திருக்கிறேன்" > என்றார். குரலை அடையாளம் கண்டுபிடித்துவிடுவார் என்ற எண்ணம். > "ஓஹோ. அப்படியா? நான் செத்த பிறகு வந்து பார்", என்று சொல்லிவிட்டார். > > அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய வரதகுரு தம் தந்தையாரிடம் விஷயத்தைச > சொன்னார். > அவர் சிரித்துக்கொண்டே, "நான் என்னும் தன்மையில்லாமல் வந்து பார்க்கச் > சொல்கிறார். அது உண்மையிலேயே குருவிடம் ஸ்ரீபாஷ்யம் போன்ற ஒன்றைக் கேட்டுப் > புரிந்து உணர்வதற்குத் தடையாக இருக்கும்"., என்றார். > > வரதர் மீண்டும் சென்றார். > ஆழ்வான் மீண்டும் "யார்ராவன்?" > > இம்முறை வரதர் மிகவும் பவ்வியமாக, "அடியேன் தாஸானுதாஸன் ஸ்ரீமத் > ராமானுஜதாஸன்", என்று சொல்லி நெடுஞ்சாங்கிடையாக விழுந்து வணங்கினார். > > பாடம் ஒழுங்காக நடந்தது. தெளிவாகக் கற்றுக்கொண்டார். > சரி. > > ஆண்பிள்ளையாகிய இவரை ஏன் 'நடாதூர் அம்மாள'் என்கிறார்கள்? என்று இன்னும் > நீங்கள் கேட்கவில்லை. > வரதர் பெருமாளுக்குப் பால் நைவேத்தியம் வைப்பார். நன்றாகக் காய்ச்சி வற்ற > வைத்து எடுத்த பாலைத்தான் வைப்பார். சூடு தணிந்திருக்கிறதா என்று பாலுக்குள் > விரலை விட்டுப ்பார்ப்பார். > > இதைப் பெருமாள் கவனித்து வந்தார். > > ஒருநாள், "ஏனப்பு! பெத்த பிள்ளைக்குத் தாயார் பால் காய்ச்சி ஊட்டி > விடும்போது சூடு தணிஞ்சாச்சா என்று பார்ப்பதுண்டு. நீயும் பாக்கிறியேப்பா? நீ > என்ன எங்க அம்மாளோ?" > > பெருமாளே அவரை 'அம்மாள்' என்று குறிப்பிட்டதால் அவரை 'அம்மாள்' என்றே > அனைவரும் அழைத்தனர். > > ** அவர் கதாகலட்சேபம் செய்து வந்தார். மிக ஆழமான கருத்துக்களைக் கொண்டு > மிக விரிவாக அமைந்திருந்தது. அந்தக் காலட்சேபத்துக்கு ஸ்ரீபராச பட்டர் > என்றொருவர் வருவார். அவர் மிகச் சாதாரணர். எளிமையானவர். > > ஒருநாள் அவர் காலட்சேபத்துக்கு வரவில்லை. > > வரதர் பேசாமலிருந்தார். > மற்றவர்கள் காலட்சேபத்தைத் தொடருமாறு வற்புறுத்தினர். > ஆனாலும் பட்டருக்காகக் காத்திருந்தார். > > பட்டர் வந்ததும் அவரிடம் "நீ இதுவரை என்னிடம் கேட்டதையெல்லாம் இவர்களிடம் > சொல்", என்று ஆணையிட்டார். > > அவ்வளவுதான். > அதுவரை நடந்திருந்த காலட்சேபம் அவ்வளவையும் அவர் திருப்பிச ்சொன்னார். > > மகிழ்வுற்ற வரதர் ஸ்ரீபட்டர் சொன்னதையெல்லாம் அப்படியே எழுதிவித்து அதற்கு > அருமையானதொரு பெயரையும் இட்டார். > > * * 'சுருதப பிரகாசிகை'. > * > > * 'சுருத' என்னும் சொல் அதெல்லாம் 'கேட்கப்பட்ட சமாச்சாரம'் என்பதைக் > காட்டி விடுகிறது அல்லவா? > > வரதர் திருநாடு அடைந்தபின்னர்(காலமாகியபின்னர்) சிலகாலம் கழித்து > துருக்கர் படையெடுப்பு நடந்தது. > > ** அப்போது ஸ்ரீபட்டர் தம்முடைய இரண்டு பிள்ளைகளையும் சுருதப > ்பிரகாசிகையையும் பத்திரமாக இன்னொருவரிடம் ஒப்படைத்து தப்பிச்செல்லச > ்செய்தார். > > அந்த நூல் துருக்க வெள்ளத்திலும் தப்பி காலவெள்ளத்திலும் நீந்தி > வந்துவிட்டது. > * > > > *http://www.visvacomplex.com/The_AmmAL_of_PerumAL.html > cnu.pne > > * > > > --~--~---------~--~----~------------~-------~--~----~ You received this message because you are subscribed to the Google Groups "Thatha_Patty" group. To post to this group, send email to [email protected] To unsubscribe from this group, send email to [EMAIL PROTECTED] For more options, visit this group at http://groups.google.com/group/thatha_patty?hl=en -~----------~----~----~----~------~----~------~--~---
