ஓம்
இயக்கம்.

ஊன் உடம்பு ஒரு கோயில், அதன் உள்ளுறை தெய்வம் ஆன்மா. ஆன்மா உடம்பை
இயக்குகின்றது. பானையினுள் வேகும் கொண்டைக் கடலை அடுப்பினின்றும் வரும்
வெம்மையினால் வேகவைக்கப்படுவது போல உடம்பின் வெளியிருந்து வரும் விஷயாததிகளால்
ஆன்மா அவதியுறுகின்றது. உள்ளம்/மனம்/ மூளை என்று வர்ணிக்கப்படும் இதன்
செயற்களம் எண்ணங்கள்.

எண்ணங்களின் வலிமையையும் ஈர்ப்பினையும் பொருத்து உடல் இயங்கி நல்லனவற்றையும்
அல்லனவற்றையும் செயற்படுத்துகிறது.அனைத்து எண்ணங்களுக்கும்  உடல் இயைந்து
கொடுக்கிறதா? எல்லாம் ஏற்புடையனவா? சில பொருந்துகின்றன. சில பொருந்துவதில்லை.

விழித்திருக்கும் நிலையில் இயங்குவது போன்று உறங்கும் நிலையிலும் அங்கங்கள்
இயங்குவதுண்டு. கனவின் போது கனவின் காட்சிக்கு ஏற்ப நம்முடைய கை கால்கள்
அடிப்பதற்கும் மிதிப்பதற்கும் ஆட்பட்டு அருகிருந்த பொருள்களில் மோதி வீக்கம்
அடைந்தவர் காயம்பட்டவர்களுண்டு.

மனோ வேகம், வாயு வேகம் ஒப்பிடுங்கால் மனோ வேகம் விரைவானது. ஒன்றிலிருந்து
பிறிதொன்றுக்குத் தாவித் தாவிப் பறந்து விரைகிறது.  கற்பனை உலகில் சஞ்சரிப்பவன்
கண நேரத்தில் ஆயிரம் சிந்தனைகளைக் கொள்கிறான். சில சிந்தனைகள் தொடர்கின்றன.
பலதோன்றியவுடனே அழிந்துவிடுகின்றன.

கண்கள் இரண்டும் ஒன்றையொன்று காணமுடிவதிலை. ஆயினும் பிரபஞ்சம் முழுமையையும்
வானமே எல்லையாகக் காண முடிகிறது.

 கண்கள் விலை மதிக்கவியலா மகாசக்தி வாய்ந்த கேமரா. இமை விலக்கிய
நேரத்திலிருந்து மூடும் வரை தொடர்ந்து அண்மையிலும் சேய்மையிலுமாக ஆறு
பக்கங்களிலும் ஒளிப்படங்களைச் சுட்டுத்தள்ளிக்கொண்டே இருக்கின்றன. சில
காட்சிகள் மட்டும் நகர்படமாக நினைவில் வருகின்றன. பல மறைந்து மறக்கப்படுகின்றன.

சற்றே கண் இமைகள் நெகிழ்ச்சியுடன் இறைவனின் அலங்காரத் திருமேனியைக் காண
நேரிட்டால் சற்றே மூடியவுடன் அந்தக் காட்சி  நிலைபெறுகிறது. மேலும் பரவசமும்
ஈர்ப்பும் உண்டானால் நிரந்தரமாகச் சேமிக்கப்படுகிறது.

அரன் அபிஷேகப் பிரியன்,அரி அலங்காரப் பிரியன்.

 சில வேடிக்கையான இயக்கநெறிமுறை நம் உடலிலும் உண்டு.

கணினி முன் அமர்ந்துகொண்டு நம்முடைய வலது பாதத்தைத் தரையிலிருந்து சற்றே
உயர்த்தி இடமிருந்து வலச்சுழியாகச் சுழற்றவும்.(கடிகார முறையில்)..

அவ்வாறு வலது பாதம் வலம் சுழித்துக்கொண்டிருக்கும் போது வலது கையினால் சுட்டு
விரலை நீட்டிக் காற்றில் ‘6’ என்ற எண்ணை எழுதிப்பாருங்கள்.

அவ்வாறு ஒருசேர கையும் காலும் உட்படுமானால் அவர் நல்ல பயிற்சியாளர்; உடலைத் தன்
ஆளுமையில் வைத்துள்ளார் என்று கொள்ளலாம்.
அவ்வாறு செய்ய இயலாது.

அதாவது இரு உறுப்புகளையும் மாற்றுத் திசைகளில் இயக்கமுடியாது. இத் தகவல் ஒரு
எலும்பு மருத்துவரிடம் விளக்கம் கேட்டபோது அவர் விளக்கியது.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்.

To unsubscribe from this group, send email to 
thatha_patty+unsubscribegooglegroups.com or reply to this email with the words 
"REMOVE ME" as the subject.

Reply via email to