---------- Forwarded message ----------
Courtesy:- Astrologer Vighnesh சென்னை <lakshmivighn...@gmail.com>
D
தில்லைவனம் காசி திருவாரூர் மாயூரம்
முல்லைவனம் கூடல் முதுகுன்றம்
நெல்லை களர்காஞ்சி கழுகுன்றம் மறைக்காடு
அருணைகாளத்தி வாஞ்சியம் என் முக்தி வரும்'

என்ற புராணப்பாடல் ஒன்று உள்ளது. இதன் மூலம் இத்தலத்தின் பெயரை சொன்னாலே முக்தி
கிடைக்கும் என்பது நம்பிக்கை. பொதுவாக கோயில் அருகில் யாராவது இறந்து விட்டால்,
பிணத்தை எடுக்கும் வரை கோயிலில் நடைபெறும் பூஜைகள் நிறுத்தி வைக்கப் படும்.
ஆனால் இவ்வூரில் பூஜையை நிறுத்துவதில்லை. எமதர்மனே இங்கு �க்ஷத்திர பாலகராக
இருப்பதால் இவ்வாறு நடக்கிறது. மேலும் கோயில் எதிரிலேயே சுடுகாடு இருக்கிறது.
பிணத்தை எரியூட்டியவுடன் அங்கிருந்தபடியே சுவாமியை வணங்கி இறந்தவர் சிவனடி சேர
வேண்டிக்கொள்கிறார்கள்.ஒருவர் இறந்த பின், அவரது பிள்ளைகளால் செய்யப்பட வேண்டிய
பிதுர் காரியங்களை இக்கோயிலில் முன்கூட்டி நாமே செய்து, முக்தி கிடைக்க வழி
தேடிக்கொள்ளலாம். இதற்கு "ஆத்ம தர்ப்பணம்' எனப்பெயர். மேலும் இத்தலத்து
தீர்த்தத்தை பருகினால் மரண அவஸ்தைப்படுகிறவர் களுக்கு சிரமம் நீங்கும்
என்கிறார்கள். இத்தலத்தில் இறந்தாலும், வேறு இடத்தில் இறந்தவர் களுக்கு இங்கு
பிதுர் காரியம் செய்தாலும் சிவனே அவர்களது காதில் பஞ்சாட்சர மந்திரம் (சிவாயநம)
கூறி தன்னுள் சேர்த்து கொள்வதாக ஐதீகம்.

*சண்ட ராகு*

மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அமிர்தம் வழங்கிய போது, அதை ஸ்வர்பானு என்ற
அசுரன் ஒருவன் தேவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு விட்டான். இதனால் கோபமடைந்த
மகாவிஷ்ணு தன் கையில் இருந்த அகப்பையால் (சட்டுவம்) அவனை வெட்டினார்.
இருந்தாலும் அமுதம் பருகிய அவர்களது உயிர் பிரியவில்லை. விஷ்ணுவிடம் மன்னிப்பு
கேட்ட அவர்கள் நவக்கிரக மண்டலத்தில் ராகு, கேது என்னும் பெயரில் இடம் பெற்றனர்.
இந்த கிரகங் களுக்கு தனித்தனி வடிவம் தரப்பட்டது. இத்தலத்தில் இருவரையும் ஒரே
வடிவமாகத் தரிசிக்கலாம். இந்த அமைப்பை "சண்ட ராகு' என்பர். இவருக்கு தனி சன்னதி
உள்ளது.

*தல வரலாறு*

எத்தனையோ நல்ல பதவிகள் இருக்கும் போது, தனக்கு மட்டும் ஏன் உயிர்களை எடுக்கும்
பதவியை சிவபெருமான் கொடுத்துள்ளார்' என எமதர்மராஜா மிகவும் வருந்தினார்.
திருவாரூர் சென்று தியாகராஜரிடம் தனது குறைபாட்டை தெரிவித்தார். ஸ்ரீவாஞ்சியம்
சென்று வழிபடும்படி அசரீரி கூறியது. அதன்படி எமன் இத்தலம் வந்து சிவனை நோக்கி
கடும் தவம் இருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன் மாசிமாதம் பரணி
நட்சத்திரத்தில் காட்சி தந்து, ""வேண்டும் வரம் கேள்,''என்றார். அதற்கு எமனும்,
""இறைவா! அனைத்து உயிர்களையும் எடுக்கும் பதவி எனக்கு தந்துள்ளதால், எல்லாரும்
என்னை கண்டு பயப்படுகின்றனர். திட்டித் தீர்க்கின்றனர். பல கொலைகளால் தீராத
பிரம்மஹத்தி தோஷம் பிடித்து என்னை வாட்டுகிறது. பாவம் தொடர்கிறது. மன நிம்மதியே
இல்லை,''என்றார். எமனின் கோரிக்கையை ஏற்ற இறைவன், ""எமதர்மனே! இனிமேல் எமன்
உயிரை பறித்து விட்டான் என கூறமாட்டார்கள். நோய் வந்ததாலும், வயதாகி
விட்டதாலும், விபத்து ஏற்பட்டும் இறந்தான் என கூறுவார்கள். இதனால் பழியும்,
பாவமும் இனி உனக்கு கிடையாது. மேலும், நீ தவம் செய்த இந்த தலத்திற்கு ஏதோ ஒரு
விதத்தில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே வர அனுமதிக்க வேண்டும். இத்தலத்தில்
தரிசனம் செய்தவர்களுக்கு மறுபிறப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
அமைதியான இறுதிக்காலத்தை தர வேண்டும். மேலும் நீ இத்தலத்தின் �க்ஷத்திர பாலகனாக
விளங்குவாய். இத்தலத்திற்கு வருபவர்கள் உன்னை முதலில் தரிசனம் செய்த பின்பே
என்னைத் தரிசிப்பார்கள்,''என அருளினார். அதன்படி, இங்கு எமதர்ம ராஜனுக்கே முதல்
வழிபாடு நடக்கிறது.

*குப்த கங்கை*

ஒருமுறை கங்காதேவி சிவனிடம்,""மக்கள் அனைவரும் கங்கையில் நீராடி தங்களது
பாவத்தை தீர்ப்பதால் என்னிடம் பாவம் சேர்ந்து விட்டது. இதைப்போக்க தாங்கள் தான்
வழி கூறவேண்டும்,''என வேண்டினாள். அதற்கு சிவன்,""உயிர்களை பறிக்கும் எமனுக்கே
பாவ விமோசனம் தந்த தலத்தில் சென்று பிரார்த்தனை செய்தால் உன்னிடம் சேர்ந்த
பாவங்கள் விலகும்,''என்றார். அதன்படி கங்கை தனது 1000 கலைகளில் ஒரு கலையினை
மட்டும் காசியில் விட்டு விட்டு மீதி 999 அம்சங்களுடன் இங்குள்ள தீர்த்தத்தில்
ரகசியமாக உறைந்திருப்பதாக ஐதீகம். எனவே குப்த கங்கை என்று இங்குள்ள
தீர்த்தத்துக்கு பெயர் வந்தது. எனவே இது காசியை விட பல மடங்கு புண்ணிய
தீர்த்தமாக கருதப் படுகிறது. தற்போது முனி தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
மாசிமகத்தன்று இந்த தீர்த்தத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது.

*கார்த்திகை ஞாயிறு*

தட்சன் நடத்திய யாகத்திற்கு சிவனை அழைக்கவில்லை. இதனால் கோபமடைந்த சிவன், தன்னை
அவமதித்து நடத்திய யாகத்தில் கலந்து கொண்டவர்களை தண்டிக்க தன் அம்சமான
வீரபத்திரரை அனுப்பினார். வீரபத்திரனால் தண்டிக்கப்பட்டவர்களில் சூரியனும்
ஒருவர். இதனால் சூரியன் தன் ஒளி குறைந்து வருந்தி, ஸ்ரீவாஞ்சியம் குப்த
கங்கையில் கார்த்திகை மாதம் முழுவதும் நீராடி சிவனை நோக்கி கடும் தவம்
புரிந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த இறைவன், சூரியனுக்கு இழந்த ஒளியை மீண்டும்
தந்தார். பதவி இழந்தவர்கள், பணிமாற்றம் விரும்புவர்கள், பிரிந்த தம்பதியினர்
ஒன்று சேர கார்த்திகை ஞாயிற்றுக் கிழமைகளில் குப்த கங்கையில் நீராடி குறை
நீங்கப் பெறலாம்.

*இரண்டாம் நாளே தீர்த்தவாரி*

எல்லாக் கோயில்களிலும் பிரம்மோற்ஸவம் முடிந்த பிறகே தீர்த்தவாரி நடத்தப் படும்.
அன்று சுவாமியை கோயில் சார்ந்த தீர்த்தத்தில் நீராட்டுவர். இத்தலத்தில்,
தீர்த்தத்துக்கு மிகவும் மகிமை வாய்ந்தது என்பதால், மாசிமகம் பிரம்மோற்ஸவத்தின்
இரண்டாம் நாளே தீர்த்தவாரியை நடத்தி விடுவர். இரண்டாம் நாளே இங்கு தீர்த்தவாரி.
அன்றைய தினம் வாஞ்சி நாதர் எமன் வாகனத்தில் உலாவருவார். கடைசி நாள் முருகனுக்கு
உற்சவம் நடைபெறும். கார்த்திகை ஞாயிற்று கிழமைகளில் அதிகாலை வேளையிலும்
தீர்த்தவாரி நடப்பதுண்டு. ஆடிப்பூரத்தை ஒட்டியும் 10 நாள் திருவிழா உண்டு.
ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனை உண்டு.

*இன்று சந்திர கிரகணம்*

கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால்,
திருவாரூர் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில்
திறக்கப்பட்டிருக்கும். கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை
நடத்தப்படும். கிரகணத்தை ஒட்டி இந்தக் கோயிலை சிறப்பு தரிசனம் செய்வோம்.

*புண்ணியத் துளிகள்...*

* 110 அடி உயரம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரத்தை கி.பி.850ல் ராஜேந்திர சோழன்
கட்டியுள்ளான்.
* ஸ்ரீயை வாஞ்சித்து(ஸ்ரீ என்ற மகாலட்சுமியை அடைய விரும்பி) திருமால் தவம்
இருந்ததால் இத்தலம் "ஸ்ரீவாஞ்சியம்' ஆனது.
* இங்கு சிவனே அனைத்துமாக அருள்பாலிப்பதால், நவக்கிரகங்களுக்கு சன்னதி இல்லை.
* கோயிலின் அக்னி மூலையில் தெற்கு நோக்கி எமனும், சித்ரகுப்தனும் ஒரே
சன்னதியில் அருளுகின்றனர். எமனுக்கு வடை மாலை சாத்தி வழிபடுகின்றனர்.
* எமதர்மனை சாந்திசெய்யும் விதத்தில், இங்கு ஆயுள் ஹோமம், சஷ்டியப்த பூர்த்தி
செய்து நீண்ட ஆயுள் பெறலாம்.
* அஷ்டபுஜ மகிஷாசுரமர்த்தினி மிகவும் சக்தி வாய்ந்தவள்.
* தல விநாயகரை அபயங்கர விநாயகர் என்பர். தல விருட்சம் சந்தன மரம்.
* மகம், பூரம், சதயம், பரணி நட்சத்திரத்தினர், மேஷம், சிம்மம், கும்ப ராசி
அல்லது லக்னம் கொண்டவர்கள் தங்கள் தோஷங்கள் நீங்க வழிபாடு செய்யலாம்.
திறக்கும் நேரம் : காலை 6 - 12 மணி, மாலை 3 - 8 மணி.
இருப்பிடம்: கும்பகோணத்திலிருந்து (35 கி.மீ.) நாச்சியார் கோவில் வழியாக
நன்னிலம் செல்லும் பஸ்சில் அச்சுதமங்கலம் ஸ்டாப்பில் இறங்கி, அங்கிருந்து ஒரு
கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
போன்: 94424 03926, 93606 02973

    ஸ்ரீ வாஞ்சியம் கோயில் புராணம் தல மஹிமை
*When*
Sat, April 24, 11am – 12pm GMT+05:30
*Who*
(Guest list has been hidden at organizer's request)
 Thanks Dinamalar Aanmikam.
--


-- 
Subscription settings: 
http://groups.google.com/group/thatha_patty/subscribe?hl=en

Reply via email to