Reload Original
Page<http://www.tamilkurinji.com/TN_news_detail.php?id=10362#>Print
Page <http://www.tamilkurinji.com/TN_news_detail.php?id=10362#>Email
Page<http://www.tamilkurinji.com/TN_news_detail.php?id=10362#>
Tamilnadu news | Tamilkurinji -

*ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தில் விரிசல்
Thursday , 6th May 2010 09:11:06 AM*

[image: image]

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. 21
மொட்டை கோபுரங்கள், 7 பிரகாரங்கள், 9 தீர்த்த குளங்களுடன் உள்ளது இதன்
சிறப்பம்சம். முதல் பிரதான நுழைவாயில், தெற்கு திசையில் 13 நிலைகளுடன், 236 அடி
உயரத்தில், 13 கலசங்களுடன் அமைந்துள்ளது. இதுதான் கோயிலின் ராஜகோபுரம். மொட்டை
கோபுரமாக இருந்த இந்த கோபுரம், 1979ம் ஆண்டு கட்டப்பட்டது.

ராஜகோபுர கட்டுமான பணியின்போது, கோபுரத்தின் கீழ்ப்பகுதியில் பல்வேறு இடங்களில்
விரிசல் ஏற்பட்டது. அதை 'செட்டில்மென்ட் கிராக்' என்று கூறி, எதிர்காலத்தில்
அவ்விரிசல் விரிவடைகிறதா என்பதை அறிய சிறிய அளவிலான கண்ணாடி துண்டுகள் விரிசல்
மீது ஒட்டப்பட்டது. விரிசல் அதிகரித்தால் கண்ணாடி உடையும். தற்போது விரிசல்
மீதிருந்த பல கண்ணாடி துண்டுகள் உடைந்து விட்டன.

மேலும், கோயில் சன்னதி கோபுரங்களில் மழை பெய்யும் காலங்களில் கலசங்களில்
பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என அர்ச்சகர்கள் கண்காணிப்பது வழக்கம். அதேபோல், நேற்று
பார்த்தபோது கருடாழ்வார் சன்னதி கோபுர கலசம் சேதமடைந்து விழுந்திருப்பது
தெரிந்தது. இது விரைவில் செப்பனிடப்படும் என்று தெரிகிறது.

இதுதொடர்பாக அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை அறங்காவலர் வக்கீல் சித்ரா
விஜயகுமார் கூறுகையில், ‘’ராஜகோபுரத்தில் விரிசல்கள் அதிகரித்துள்ளன. அதை
கண்டறிய ஒட்டப்பட்டிருந்த கண்ணாடி துண்டுகளும் உடைந்துள்ளன. எனவே, கோபுர
விரிசல் அளவை கணக்கிடும் கண்ணாடி துண்டுகளை பதித்து, ராஜகோபுரத்தின்
ஸ்திரத்தன்மையை கண்காணிக்க வேண்டும். இது ராஜகோபுரம் மற்றும் பக்தர்களின்
பாதுகாப்புக்கு உறுதுணையாக இருக்கும். இதுதொடர்பாக முதல்வர் தனிப்பிரிவுக்கும்,
இந்து சமய அறநிலையத்துறைக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம்’’ என்றார்.

கோயில் இணை ஆணையர் ஜெயராமன் கூறுகையில், ‘‘ராஜகோபுரம் விரிசலடைவதை கண்காணிக்க 9
நிலைகளில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரின் அறிவுரைப்படி, கண்ணாடி துண்டுகள்
பொருத்தப்பட்டுள்ளன’’ என்றார்.
Readability — <http://lab.arc90.com/experiments/readability>An Arc90
Laboratory Experiment <http://www.arc90.com/> —
http://lab.arc90.com/experiments/readabilityFollow us on Twitter
»<http://www.twitter.com/arc90>
Follow us on Twitter » <http://www.twitter.com/arc90>Readability version
1.5.0

Reply via email to