Reload Original
Page<http://www.kalvimalar.com/tamil/NewsDetails.asp?id=6799#>Print
Page <http://www.kalvimalar.com/tamil/NewsDetails.asp?id=6799#>Email
Page<http://www.kalvimalar.com/tamil/NewsDetails.asp?id=6799#>
:: Kalvimalar - News

அவர் கூறியதாவது: விழுப்புரம் அடுத்த நேமூர் கிராமத்தில் வசிக்கிறேன். தந்தை
காளிரத்தினம் விவசாயி. தாய் ஞானசுந்தரி. சகோதரர் இளையராஜா, சகோதரி செல்வகுமாரி.
பள்ளிப்படிப்பு பத்தாம் வகுப்பு தான். பின் அரசு ஐ.டி.ஐ., பிட்டர் முதல்
வகுப்பில் தேர்ச்சி பெற்று, சென்னையில் அப்ரன்டிஸ் முடித்தேன். அப்போது நடந்த
(1999ம் ஆண்டு) சிவில் சர்வீஸ் தேர்வில், எனது பெரியம்மா மகன் ரமேஷ்
தேர்வானார். அது குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
அதனால் ஏற்பட்ட உத்வேகத்தால், நான் தேர்வு எழுத வேண்டும் என முடிவெடுத்தேன்.
அதற்காக, தனியாக பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். 2004ம் ஆண்டு,
அண்ணாமலை பல்கலையில் தொலைதூர கல்வியில் பி.ஏ., வரலாறு பட்டம் பெற்றேன். மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலக பயிற்சி முகாமில்  இரண்டு ஆண்டுகள் படித்தேன். பின் சென்னை
அண்ணா நகரில் உள்ள, அகில இந்திய குடிமைப் பணித் தேர்வாணய பயிற்சி முகாமில்
தேர்வாகி படித்தேன். 2006ம் ஆண்டு புவியியல், தமிழ் இலக்கியம் விருப்ப பாடமாக
தேர்வு செய்து தேர்வில் பங்கேற்றேன்.

முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் முதன்மைத் தேர்வில்
தோல்வியடைந்தேன். இதே போல், இரண்டு ஆண்டுகள் தோல்வியை சந்தித்த நான் இம்முறை
அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்று, 311வது இடத்தில்
தேர்வாகியுள்ளேன். ரேங்க் அடிப்படையில் ஐ.பி.எஸ்., வாய்ப்பு உறுதியாகியுள்ளது.
இதற்கிடையே 2006ல் ரயில்வே தேர்வில் (ஆர்.ஆர்.பி.) வெற்றி பெற்று திருச்சி பொன்
மலையில் பணியாற்றினேன். பின் குரூப் 1 தேர்வில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று
முதன்மைத் தேர்வில் தோல்வியடைந்தேன். பின், குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று,
கடந்த ஜனவரி மாதத்திலிருந்து விருத்தாச் சலத்தில், வருவாய்த் துறை உதவியாளராக
தற்போது பணியாற்றி வருகிறேன்.
தந்தையை சிறிய வயதிலேயே பிரிந்த நிலையில், எனது தாயார் தான் எங்களை படிக்க
வைத்து முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்தார்.
விவசாயப் பணிகளை பார்த்துக் கொண்டே, பயிற்சி மையங்களில் படித்து வெற்றி
பெற்றுள்ளது மகிழ்ச்சி. இவ்வாறு சிவசுப்ரமணியன் கூறினார். புதுச்சேரி மாணவி
வெற்றி: புதுச்சேரி பல்கலைக்கழக சமூக வியல் துறை மாணவி உமா மகேஸ்வரி சிவில்
சர்வீஸ் தேர் வில், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். ஐ.ஏ.எஸ்.,  ஐ.பி.எஸ்.,
உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன.
இதில் 875 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 527வது இடத்தை புதுச்சேரி பல்கலைக்கழக
சமூகவியல் துறை எம்.பில்., ஆய்வு மாணவி உமா மகேஸ்வரி பெற்றுள்ளார்.
சமூகவியல், பொதுநிர்வாக பாடங்களை விருப்பப் பாடங்களாக எடுத்து படித்த இவர்,
சிவில் சர்வீஸ் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார். சிவில்
சர்வீஸ் பணிக்குத் தேர்வாகியுள்ள மாணவி உமாமகேஸ்வரி கூறியதாவது: எனது சொந்த ஊர்
மதுரை.  சிவில் சர்வீஸ் தேர்வில் 527வது இடத்தை பிடித்து வெற்றி பெற் றுள்ளது
மகிழ்ச்சி அளிக்கிறது.  ஐ.ஏ.எஸ்.,தேர்வுக்காக எங்கும் கோச்சிங் செல்லாது, சுய
முயற்சியால் வெற்றி பெற்றேன். நாளிதழ்களை தினந்தோறும் படித்து வந்தது, சிவில்
சர்வீஸ் தேர்விற்கு  உதவியாக இருந்தது. அவ்வவ்போது, சமூகவியல் துறைத் தலைவர்
மொகந்தி வழங்கிய ஆலோசனைகள், வெற்றி பெற தூண்டுகோலாக அமைந்தது.

ஐ.ஏ.எஸ்., தேர் விற்கு தயாராகும் மாணவர்கள், திட்டமிட்டு அர்ப்பணிப்புடன்
படிக்க வேண்டும். விருப்பப் பாடங்களை உள்ளார்ந்து  படித்தால், சிவில் சர்வீஸ்
தேர்வில் வெற்றிப் பெற்று சாதிக்கலாம். இவ்வாறு உமா மகேஸ்வரி கூறினார். உமா
மகேஸ்வரிக்கு துணைவேந்தர்  தரீன், பல்கலைக்கழக இயக்குனர் பாலசுப்பிரமணியன்,
துறைத் தலைவர் மொகந்தி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Readability — <http://lab.arc90.com/experiments/readability>An Arc90
Laboratory Experiment <http://www.arc90.com/> —
http://lab.arc90.com/experiments/readabilityFollow us on Twitter
»<http://www.twitter.com/arc90>
Follow us on Twitter » <http://www.twitter.com/arc90>Readability version
1.5.0

Reply via email to