தோசைக்கு ஒரு வெண்பா! 136 ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலியில்   பிறந்த
தண்டபாணி சுவாமிகள் தவ வலிமை பெற்ற அடியவர் ஆவர். அன்னார் ஒரு முறை
தேவகோட்டைக்குச் சென்றபோது சுவாமிகளின் அன்பர் தோசை வார்த்துக் கொடுத்தார்.
உடனே அத்தோசையைப் பார்த்து வியந்து, ஒரு வெண்பாவை பாடி முடித்துவிட்டார்
தண்டபாணி சுவாமிகள்.
“தென்னர்புகழ் சீர்குலவு தேவகோட் டைப்பதியிற்
சொன்னமையர் வீட்டுள்ள தோசையே!- உன்னைஅயன்
கண்(டு)ஆ லிலைவகுத்த காரணமோ? நீஅதைக்கண்(டு)
உண்டாயி நாயோ? உரை”
தகவல் நெல்லை ந.சொக்கலிங்கம்.
-=-=-=-=-=-=-=-=----=---=-=-=-=-=-=-=-=-==-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=--=-
Notablepersons
NOTABLEPERSONSஎன சிலர் விளம்பரப் படுத்தப்படுகிறார்கள். அவர்களில்
பெரும்பாலானோர் உருப்படியானவர்களாக இருக்க மாட்டார்கள்! இந்த வாசகத்தைச் சிறிது
மாற்றி அமைத்தாலே போதும்; எப்படி மாற்ற வேண்டும்?
இப்படித்தான்
NOT ABLE PERSONS!
‘உலக சரித்திர நூலில்’ஜவகர்லால் நேரு.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-==-=-=-=-=-=-=-=-
   சிறு ககுழந்தைகளைச் சிரித்த முகத்தோடு பார்க்கிற காட்சியே ஒரு ஆனந்தம்.
அவர்களை அடித்துச் சித்திரவதை செய்து கற்பிப்பது மிக மிகத் தவறு. அறிவிற்
சிறந்த பெரியவர்கள் யாரும் அதை ஆதரித்ததே கிடையாது.
    இராமலிங்க அடிகளார், அவ்வாறு அடித்துப் பாடம் சொல்லித் தந்த சுந்தரர் என்ற
ஆசிரியரைக் கண்டித்து ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.

துடிப்பதிலாத் தூய மனச் சுந்தரப்பேர்
உடையாய் என் தோழ கேள் நீ
அடிப்பதும் அச்சிறுவர்களை நீ அடிப்பது நன்
றல என்மேல் ஆணை... ஆணை!.

நன்றி முத்தையன், சென்னை
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=--=-=-
கலைவாணர் அரங்கத்தில் தொழிலாளர் சங்க விழாவில் ஒரு கவியரங்கம். அதற்குத் தலைமை
, கி.வா.ஜா. தலைப்பு: ’பாட்டாளி’ தொழிலாளர்கள் திரண்டு வந்திருந்தனர்.
“நானும் உங்களைப் போல ஒரு பாட்டாளிதான். காரணம், பாட்டால் (கவிதையால்) உங்கள்
மனத்தை ஆள வந்திருக்கிறேன்  என்று தலைமை உரையைத் துவக்கினார்.”.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=----=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=-=-=-------=-=-=-=-=-=-=-=-=-=-=-=-==
கேயாஸ் தியரி (Chaos Theory) க்கும், பட்டாம் பூச்சி விளைவுக்கும் ( Butterfly
effect) க்கும் என்ன வித்தியாசம்?
இரண்டும் ஒன்றுதான்! எதிர்பாராத விளைவுகள்! விஞ்ஞானத்தில் லாஜிக் உண்டு.

 'Chaos'  கிடையாது. அது விஞ்ஞானத்தை மீறியது. திடீர் என்று, இயற்கையில்
கிறுக்குத் தனமாக, எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். ஆனால், அந்த கிறுக்குத்
தனத்திலும் ஒரு கட்டுக்கோப்பு (order) உண்டு என்பதை விஞ்ஞானிகள்
கண்டுபிடித்துள்ளனர். அது தான்  chaos theory, 'There is a Method in
madness..' என்று ஷேக்ஸ்பியர் சொன்னதைப் போல!

‘பட்டாம் பூச்சி ’ விஷயத்தில், ஏதோ ஆரம்பித்துக் கடைசியில் எங்கோ முடிகிறது.
‘தலை சுற்ற வைக்கும் செயின் ரியாக்‌ஷன்’! சுருக்கமாக...
இது பற்றிய ஒரு கதையே உண்டு. (Folk lore)! - ஆணி கழன்றதால், லாடம் விழுந்தது.
லாடம் இழந்ததால்,குதிரை வீழ்ந்தது. குதிரை போனதால், வீரன் தொலைந்தான். வீரன்
இல்லாததால், யுத்தத்தில் தோல்வி. தோல்வியால், ராஜ்ஜியம் வீழ்ந்தது. அதாவது,
ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்கு காரணம் ஒரு குட்டி ஆணி! - பட்டர்ஃப்ளை எஃபெக்ட்!
-=-=-==-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
ஒம் வெ.சுப்பிரமணியன்

 காபி வெண்பா
தோசையை உள்ளே தள்ளியபிறகு  காபி வேண்டுமல்லவா? திராவிடக் கவிமணி வே.முத்துசாமி
ஐயர் அவர்கள், காபியைத் திரிவேணியுடன் ஒப்பிட்டு இயற்றிய வெண்பா இது.

பாலங்குக் கங்கையாய்ப் பண்பார் கஷாயந்தான்
ஏலுங் கரிய யமுனையாச்-- சாலக்
கரந்துறை சீனி சரஸ்வதியாக் காபி
தரந்தெரிமுக் கூடற் றலம்..

நன்றி
ஆர் தீன தயாளன்.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-==-=--=-=-=-==-=-=-
‘செக்ஸ்’. என்ற ஆங்கில வார்த்தையை அப்படியே தமிழில் எழுதிவிடுகிறோம்.

சிலர்’பால் உணர்வு’ என்று மொழி பெயர்க்கின்றனர்
சங்க காலத்திலேயே செக்ஸுக்கு நேரான தமிழ்ச் சொலாக ‘நலம்’. என்ற சொல்லைப் பயன்
படுத்தியிருக்கின்றனர். இச்சொல்லே கல்வெட்டுகளிலும் காணப்படுகின்றது
-=-=-=-=-=-=-==-=-=-=-=-=-=-==-=-=-=-=-=-=-=--=-=-=-=-=-=-=-=
நூறு தாமரை இதழ்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி அவற்றினூடே ஊசியைச்
செலுத்தினால் அவ்வூசி முனை ஒரு இதழுக்கும் மற்றோரிதழுக்கும் இடையே கடந்து
செல்லும் கால அளவுதான் ஒரு கண நேரம் என்பதாகும்.
-=-=-=-=-=-=-=-=-=-


நினைவுகளின் சுவட்டில்
-----------------------------------------------------
வெளியீடு: அகல், 342, டி.டி.கே.சாலை, ராயப்பேட்டை, சென்னை-14
பக்கங்கள்: 336 விலை ரூபாய் 170/-

தமிழின் மூத்த இலக்கிய விமர்ச்சகரான திரு வெங்கட் சாமிநாதன் தன் 74- வயது
வரையிலான வாழ்க்கை நினைவுகளப்பகிர்ந்து கொள்ளும் நூல். ‘எழுத்துலகிலும்
வெளியிலும் நான் சந்தித்த சில மனிதர்கள், ஆர்களது சில குறைகளையும்
பலவீனங்களையும் மீறி உன்னதமானவர்கள் தான்!’ என்று சொல்லும் வெங்கட் சாமிநாதன்,
தனது வாழ்க்கையில் சந்திக்க நேர்ந்த சாதாரண மனிதர்கள் தொடங்கி, கரிச்சான்
குஞ்சு முதலான எழுத்தாளர்கள் வரை தனது நினைவுத் தடங்களைப் பதிந்துள்ளார். தனது
எழுத்துக்களில் எப்போதும் திராவிட இயக்கம் குறித்து எதிர்மறையான பதிவுகளையே
செய்யும் வெ.சா.  ‘எனக்குப்  பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை
அறிமுகப்படுத்தியதே திராவிடர் கழகம் ஊர்கள் தோறும் நடத்திவந்த படிப்பகங்கள்
தான்’ என்று சொல்வது  சுவாரஸ்யம்!
விகடன் வரவேற்பறை.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
வெ.சுப்பிரமணியன் ஓம்

Reply via email to