​
   ஓம்  தயூ மற்றும் யுதாங் என்ற இரு குருமார்களைத் தேடி தலைமைத் தளபதி
ஒருவர் வந்தார். தன்னைச் சீடனாக ஏற்கும்படி கோரினார்.    இயல்பிலேயே நீ
புத்திசாலியாகத் தெரிகிறாய். நல்ல சீடனாக இருப்பாய்” என்றார் யுதாங்.  ””இவனா?
இந்த அடிமுட்டாளுக்கு மண்டையில் அடித்துச் சொன்னால் கூட ஜென்னைப் புரிய
வைக்கமுடியாது” எனறார் தயு..  தன்னை ஏளனமாகப் பேசிய தயுவையே செல்வாக்கு
மிகுந்த தளபதி தன் குருவாக ஏற்றார்.  குருவின் விளக்கம்  பொதுவாக உங்கள்
அகங்காரத்தைக் கேள்வி கேட்காதவரே உங்களுக்கு உற்றவராக இருக்கமுடியும். உங்கள்
குறைபாடுகளை ஆதரிப்பவரே நண்பராக ஏற்றுக்கொள்ளப்படுவார். ஆனால், குரு என்பவர்
உங்கள் முட்டாள்த் தனங்களை ஆதரிக்கவரவில்லை. அவர் உங்கள் வரையறைகளைத் தகர்க்க
வந்தவர்.  சௌகரியமாகத்தான் உணர வேண்டுமானால், அதற்குத் தோழர்களை தேடிப்
போகலாம். திருமணம் செய்துகொள்ளலாம். எதற்காகக் குருவை நாடி வந்தீர்கள்?
யாருடன் இருக்கையில் முகமூடிகள் கிழிக்கப்பட்டது போல் மிகவும் அசௌகரியமாக
உணர்கிறீர்களோ, அந்த நிலையிலும் யாரைவிட்டுத் தப்பித்து விலகப் பிரியம்
இல்லாமல்  மறுபடி மறுபடி நாடிப் போகிறீர்களோ, அவரதான் உங்கள் குரு.  நீங்கள்
அற்புதமானவர், புத்திசாலி என்றெல்லாம் புகழ்ந்து பேசி, உங்கள்
அகங்காரத்துக்குத் தீனிபோடுபவர் , உங்களிடம் ஆதாயத்தை  எதிர்பார்த்து நிற்பவர்.
  முகத்துக்கு நேராக உங்கள் வரையறைகளைச் சுட்டிக்காட்டி, உங்கள் அகங்காரத்தை
தகர்த்துக்கொண்டிருப்பவர்தான் குரு. உங்கள் குற்றம் குறைகளைச்
சுட்டிக்காட்டினால் உங்கள் கோபத்துக்கும் வெறுப்புக்கும் ஆளாகலாம். வெகு
சீக்கிரத்தில் எதிரியாகவே கருதப்படலாம். ஆனால், அதைப் பொருட்படுத்தாது,
அளவற்ற  கருணையுடன் உங்களுடைய குறைபாடுகளை எடுத்துச் சொல்லி,  அவற்றைக்
கடந்து  நீங்கள் பயணம் செய்ய உதவி செய்வதே குருவின் உண்மையான நோக்கம். அவர்
உங்களுக்கு உபசாரம் செய்ய வரவில்லை. உங்களை மேன்மை நிலைக்கு எடுத்துச் செல்ல
வந்திருக்கிறார்.
தன்னைப் பாராட்டிப் பேசிய யதாங்கைவிட தன் பதவி பற்றிக் கவலைப்படாது துணிவுடன்
பேசிய தயுவையே தன் குருவாகத் தலைமைத் தளபதி ஏற்றதில் அவருடைய புத்திசாலித்
தனம் பிரதிபலிக்கிறது.
நன்றி: ஸ்ரீ ஜக்கிவாசுதேவ் அவர்களின் கட்டுரையிலிருந்து.
ஓம் வெ.சுப்பிரமணியன்.

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Reply via email to