'நுட்பமான சிராத்த விளக்கங்களை
அநாயாசமாக விளக்கிய மகாஸ்வாமிகள்.'

சொன்னவர்; பிரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்
......................ஸ்ரீமடம் வித்வான்,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

வைதிக கர்மாக்களைச் செய்து வைக்கும் விற்பன்னர்களின்
கூட்டம்.

சிராத்தம் பற்றி விளக்கினார் ஓர் உபாத்யாயர்.

பெரியவா கேட்டார்கள்;
"சிராத்தே ஸப்தபவித்ரா; என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்?"

ஒரு வைதிகர் கூறினார்;

"உச்சிஷ்டம் (பசும்பால்)

சிவநிர்மால்யம் (கங்கை)

வமநம் (தேன்)

சவபர்படம் (வெண்பட்டு)

தௌஹித்யம் (பெண் வயிற்றுப் பேரன்)

குதப (காலம்)

திலா (எள்):"

பின்னர் பெரியவா விளக்கினார்கள்.

"சவபடம் என்றால் பட்டுப்பூச்சியைக் கொன்று,
அந்தப் பட்டிழையால் செய்த துணி என்று அர்த்தம்
கொள்ளக் கூடாது. சவம் என்றால் தானாக இறந்து
போன பட்டுப்பூச்சி. அதிலிருந்து தயாரிக்கப்பட்ட
பட்டு வேஷ்டி. அதனால்தான் இன்னமும் கேரளத்தில்,
திதி நிமந்த்ரண வைதிகர்களுக்கு வெண்பட்டு
கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது.

அடுத்தது தௌஹித்யம்.இந்த வார்த்தை 'தௌஹித்ர;'
என்று நினைத்து, பெண் வயிற்றுப் பேரன் சிராத்தத்தில்
சாப்பிடுவது ரொம்பவும் விசேஷம் என்று பழக்கத்தில்
வந்துவிட்டது.

தௌஹித்யம் என்றால், காண்டாமிருகத்தின் கொம்பினால்
செய்யப்பட்ட பாத்திரம் (அகப்பை), எல்லா மிருகங்களுக்கும்
இரண்டு கொம்புகள் இருக்கும். காண்டாமிருகத்துக்கு மட்டும்
ஒரு கொம்பு. அதனால்தான் அதற்கு 'ஏகச்ருங்கி' (ஒரே கொம்பு)
என்றும் பெயர்.

தௌஹித்யம் - ஏகச்ருங்கி பாத்ர விசேஷ; என்று
வியாக்யானம் செய்திருக்கிறார்கள்.

இம்மாதிரியான நுட்பமான விளக்கங்களை
அநாயாசமாக விளக்கக் கூடியவர்கள், மகாஸ்வாமிகள்
-- 

    <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


[image: Maruthuvar Kal's photo.]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*

 [image: gautam's Avatar]  * Vanakkam    Subbu*  [image: gautam's Avatar]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to