கோடை காலத்திற்கு ஏற்ற நீர்சத்துள்ள காய்கறிகள்
[image: Inline image 1]


காலத்திற்கேற்ப, சத்து நிறைந்த உணவுகளை பின்பற்றுவதே உடல் ஆரோக்கியத்திற்கு
உகந்தது. தற்போது, கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், நீர் சத்துள்ள காய்களின்
விளைச்சல் மட்டுமின்றி, விற்பனையும் அதிகமாக இருக்கும். பெரும்பாலும், நீர்
சத்துள்ள காய்கறிகளில், சுவை அதிகமாக இருக்காது.


அவ்வாறு சுவையில்லாத காய்கறிகளின் மீது குழந்தைகள் மட்டுமின்றி,
பெரியவர்களுக்கும், விருப்பம் குறைவாகவே இருக்கும். ஆனால், பிற காய்கறிகளில்
உள்ள சத்துக்களை விட, நீர்சத்துள்ள காய்கறிகளே உடலுக்கு பலம் தரும்.
சத்துகளையும் முழுமையாகவும் வழங்குகிறது.

*காரட்:*

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட காய்கறிகளில் காரட் முக்கியமானது. கண்
நோய்க்கு காரணமான வைட்டமின் ஏ இதில் அடங்கியுள்ளதால், காரட் சாப்பிடுவது
கண்களுக்கு எப்போதும் நல்லது. குழந்தைகளுக்கு பற்கள் உறுதியாகவும், எலும்புகள்
பலம் பெறவும் காரட்டை பச்சையாக சாப்பிடக் கொடுக்க வேண்டும். சமைத்து
சாப்பிடுவதை விட, இது போன்ற மஞ்சள் கலரிலான காய்கள், உடலுக்கு நன்மை தருபவை.


*வெள்ளரிக்காய்:* கோடை காலம் துவங்கவுள்ள நிலையில், எங்கும் காணப்படும்,
சத்துள்ள உணவு வகையில் இதுவும் ஒன்று. இருப்பினும், சுவையில்லாததால், இதன்
மீது உப்பு, மிளகு தூவி சாப்பிடவே மக்கள் ஆர்வம் கொள்கின்றனர். அவ்வாறு
சாப்பிடுவதனால், இதன் சத்து குறைவு மட்டுமின்றி, மிளகு சேர்வதால், உடல்
சூட்டினை அதிகரித்து, குடல் புண் மற்றும் வயிற்று பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.


வெள்ளரிக்காய் உடலின் சூட்டை குறைக்கிறது. கண் பார்வை குறைபாட்டை தவிர்க்க,
நாள்தோறும் ஒரு வெள்ளரிக்காய் தொடர்ந்து சாப்பிட வேண்டும். கண் எரிச்சல்
ஏற்படும் போது, வெள்ளரித்துண்டுகளை கண்களின் மீது வைத்தால், எரிச்சல்
குறைகிறது. வெள்ளிக்காய் சாற்றை, தயிருடன் கலந்து முகத்தில் பூசி வந்தால்,
முகம் பொலிவு பெறும்.

*தர்பூசணி:* வெள்ளரியைப்போன்று இதற்கும், கோடை காலமே விளைச்சல் காலமாக உள்ளது.
வெள்ளரிக்காயை விட மக்கள் இதனை விரும்பி உண்ணுவர். தர்பூசணியில் உள்ள நீர்
சத்து, உடல் சூட்டை குறைத்தாலும், அளவாக உட்கொள்வதே நலம் காக்கிறது. மிகுதியாக
உட்கொள்வதினால், உடல் சூடு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.


*பூசணிக்காய்*: நீர் சத்து முழுமையாக இருப்பது இதில்தான். முற்றிலுமாக
சுவையற்ற இக்காயில், செய்யப்படும் உணவு வகைகளை பெரும்பாலும், விரும்புவதில்லை.
வாரம் இருமுறை குழந்தைகள் பூசணிக்காய் உணவு வகைகளை உண்டு வந்தால், உடல்
குளிர்ச்சியடைவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது. உடல் சூட்டினால்
ஏற்படும், வயிற்றுவலி, வாய்ப்புண் போன்றவைகளை முற்றிலுமாக நீக்குகிறது.


காய்களின் சுவையை மட்டும் கருத்தில் கொள்ளாது, அதன் சத்துகளையும் கவனத்தில்
கொண்டு உணவு பழக்கத்தை பின்பற்றினால், உடல் ஆரோக்கியம் என்றுமே நலம்தான்.

     <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



 *v **a n a k k a m**  S u b b u*
[image: ᶰᵒ ᵇᵘʸ ᵈᵘᵐᵖ 🎉 Paris Javier NO BUY]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to