காட்டிலுள்ள மரம் ஒன்றில் ஏராளமான பச்சைக் கிளிகள் உல்லாசமாக இருந்தன.
அவற்றைத் தனது உணவுககுப் பிடிப்பதற்காக வேடன் ஒருவன் மரத்தின்கீழ் வலைவீசி
தானியங்களை தூவிக் கொண்டிருந்தான். அவ்வழியே வந்த முனிவர் ஒருவர் கிளிகளை
வதைக்க வேண்டாம் தன்னிடமுள்ள உணவைத் தருகிறேன் என்றுகூறி அவனுக்கு உணவும்
கொடுத்தார். அவனும் விட்டுவிட்டான்.

முனிவரும் “கிளிகளே இவனை நம்பாதீர்கள், இவன் தானியம் தூவி உங்களை இரையாக்கி
விடுவான்” என்றுகூறிச் சென்றுவிட்டார்.

ஒருவாரம் கழித்து..,அங்கே வந்த வேடனைக் கண்டதும் கிளிகள் “கிளிகளே இவனை
நம்பாதீர்கள், இவன் தானியம் தூவி உங்களை இரையாக்கி விடுவான்” என்று முனிவர்
தமக்குக் கூறிய வாசகத்தைய கூறின. ஆச்சரியப்பட்ட வேடனும் புறப்பட்டுப்
போய்விட்டான்.

ஒரு மாதம் கழித்து கிளிகளைப் பிடிக்க திரும்பி வந்தான். கிளிகளும் திரும்பவும்
அதே வாசகத்தைக் சொல்லிக் கொண்டன. அடடா கிளிகளுக்கு ஞாபகம் மிகுதி என்று
புறப்பட்டுப்போன வேடனும் சுமார் ஆறு மாதம் கழித்து அவ்விடம் வந்தான். அதே
கிளிகள், அதே வாசகம்.

மற்றெல்லா இடமும் திரிந்து களைத்த வேடனும் சரி, இனி இன்று வீட்டுக்குப் போக
முடியாது. இந்தக் கிளிகள் வராவிட்டாலும் வேறு பறவைகளாவது வரலாம் என்று
நினைத்து மரத்தின்கீழ் வலையை விரித்துத் தானியங்களைத் தூவினான்.

“கிளிகளே இவனை நம்பாதீர்கள், இவன் தானியம் தூவி உங்களை இரையாக்கி விடுவான்”
என்று கூறிக்கொண்டே அத்தனை கிளிகளும் பறந்து வந்து வலையில் மாட்டிக் கொண்டன.

நம்மில் பெரும்பாலானவர்களும் இவ்வாறுதான்!!!!!

ஏத்தனையோ நல்ல விடயங்களைக் கேட்கவும் படிக்கவும் செய்கிறார்கள்.

ஆனால் அவற்றை மனதில் உள்வாங்கிக் கொள்வதேயில்லை



     <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



 *v **a n a k k a m**  S u b b u*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to