*ஜென்' போதனையற்ற 'புத்தம்'. ஜென் குருக்கள் எதையும் யாருக்கும்போதிப்பதில்லை.
ஜென் என்பது ஒரு தத்துவ விசார முறைமையோ அல்லது வாழ்வியல் நடைமுறைகளைச்
சொல்லும் சித்தாந்தமோ அன்று. தன்னை அறிய முற்படும் பிரத்தியேகமான தரிசன முறையே
ஜென். அது தனித்துவமான மனோதளத்தை நம்முள்உருவாக்கும். ஆனால் அது பிறர் சொல்லக்
கேட்டு உருவாகாது. பூ மலர்வது போன்று அனிச்சையாக உள்ளுக்குள் நிகழும் அக
விழிப்பு அது. எப்படி ஜென்னில் போதனைகள் இல்லையோ அதே போல் வழிபாட்டுச்
சம்பிரதாயங்களும், சடங்குகளும் கிடையாது.*


*தொன்மை போற்றலும், ஆன்மீக தேட்டலும், தார்மீகமும், ஞானோபதேசமும்,
சமயநெறிகளும் தோன்றி பல்லாயிர வருடங்களுக்கு பிறகு தான் சொல்லும், பொருளும்,
எழுத்தும் ஜனித்தன. இதற்கெல்லாம் ஊடே ‘சந்தடி சாக்கில் புகுந்த‘ சடங்கும்,
சம்பிரதாயமும், செருக்கும், சங்கடங்களை விளைவித்தன. மனிதனும் ‘படிப்பது
ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்‘ என்று நல்வழியிலிருந்து விலகி
நடக்கத்தொடங்கினான். தொன்மை போற்றலும், ஆன்மீக தேட்டலும், தார்மீகமும்,
ஞானோபதேசமும், சமயநெறிகளும் மீள்பார்வைக்கு உள்ளாயின. சனாதன ஹிந்து
மதபோதனைகளின் உள்ளேயும் இவற்றை பார்க்கலாம். ~பிரச்னோபனிஷத். சமணமும்,
பெளத்தமும் இவ்வாறு சீர்திருத்த வந்த போதனைகள். அவைகளும் சமைந்தன. *

*போதி தர்மர் நம்மை, சொல்லும், பொருளும், எழுத்தும் ஜனிப்பதற்கு முன் ஒளி
வீசிய அந்த பண்டைகாலத்திற்கே அழைத்து செல்கிறார் எனலாம். Pre-Buddha Days?*

*சமயங்களிலிருந்து பிரிந்து வந்த ஜென் நெறி, ஸுஃபி, கபீர் பந்ததி, சீக்கிய
மதம், யூனிடேரியன் கிருத்துவப்பிரிவு போன்றவை கிளைகளா,விழுதுகளா,
வாழைக்கன்றுகளா, தென்னம்பிள்ளைகளா என்று இனம் காணுவது கடினம். ஆன்மீக
தேட்டலின் சிந்தனைக்களங்கள், அவை. அவற்றை புரிந்து கொள்ள, தன்னடக்கமும், ஆத்ம
தாகமும், தனித்தும், கூடியும் வாழும் கலையும், நசிகேதஸ் மாதிரி வினவும்
திறனும் வேண்டும். பந்தங்களை களையவேண்டும். ‘போதி தர்மர் தமிழர்; எனவே
எங்களவர்’ போன்ற பற்றுக்களை தளர்த்தவேண்டும்.*

*இனி, கேள்விக்கு பதில். ‘தியானம்’ என்ற சொல்லின் திரிபு ‘ஜென்’ என்று
கருதப்படுகிறது. மன சந்துஷ்டி நாடுவது எனலாம். ‘நகரேஷு காஞ்சி’ என்று
புகழப்படும் நகரிலிருந்து கி.பி. ஆறாவது நூற்றாண்டில் போதி தர்மர் சீனா
சென்று, அங்கு அவர் போதித்த நுண்கலை,உபதேசம், வாழ்நெறி, உன்னத ஆன்மீகம் தான்
இந்த மனசந்துஷ்டிக் கலையும், அதனுடைய அதிசய பரிமாணங்களும். கி.பி. 12ம்
நூற்றாண்டில், இந்த நெறி ஜப்பானில் செழிக்கத் தொடங்கியது ~‘சொல்லுக்கும்,
எழுத்துக்கும் அப்பாற்பட்டதும், வேதமும் சுவிசேஷமும் அற்றதும், மனதின் உள்ளே
புகுந்து ஞானோதயம் அளிப்பதும், இந்த ‘ஜென்’ என்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.*

*ஜப்பானில் தலைமுறை தலைமுறையாக ‘ஜென்’ குருநாதர்கள் வாழ்நெறி ஆச்சாரியர்களாக
இயங்கி வந்தனர். இந்தியாவில் ‘ஜென்’ என்றால் வீசை என்ன விலை என்று கேட்கும்
அளவுக்கு அறியாமை. வழக்கம் போல், இத்தகைய நன்னெறிகள் எல்லாம் மேற்கத்திய
நாடுகள் சென்று, அங்கிருந்து, நமக்கு வரலாம். அவற்றை தான் நாம் மூலமாக வைத்து
படிக்க வேண்டியிருக்கிறது. அதில் தவறு ஒன்றுமில்லை. டி.டி. ஸுசுகி என்ற
ஜப்பானிய ஜென் ஞானி தான் இந்த அரிய நெறியை மேற்கத்திய உலகுக்கு, கிருஸ்துமஸ்
ஹம்ஃபிரிஸ், தாமஸ் மெர்டன் போன்ற சான்றோர்களின் துணையுடன்,
அறிமுகப்படுத்தினார்....'*
*Source: இன்னம்பூரான்*
-- 

    <http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>



*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



  *v **a n a k k a m**  S u b b u*
*  .*

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to thatha_patty+unsubscr...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to