பாஞ்சாலி... பாஞ்சாலி...
[image: PAANCHALI TEMPLE, AIVARMALAI, DINDUKKAL DISTRICT - Saranathan]
நீர் ஸ்தலம் திருவானைக் காவல், நெருப்பு ஸ்தலம் திருவண்ணாமலை, காற்று ஸ்தலம்
காளஹஸ்தி, நிலத்தலம் காஞ்சிபுரம், ஆகாயத்தலம் சிதம்பரம்.... இப்படி பஞ்சபூத
தலங்களையும் தனித்தனியாக தரிசித்து வந்திருப்பீர்கள். ஆனால், பஞ்சபூத தலமும்
ஒருங்கே இணையப்பெற்றதாக கருதப்படுவது தான் ஐவர் மலை. திண்டுக்கல் மாவட்
டத்தில் இத்தலம் உள்ளது. இங்கு பாஞ்சாலிக்கு கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

தல வரலாறு: பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தின் போது இப்பகுதியில் தங்கியதாகவும்,
இதனால் ஐவர்மலை என பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. பஞ்சபூதங்களும் இங்கு
அரசாள்கின்றன. இது மலைக்கோயில். இதை நிலமாகக் கொள்ள வேண் டும். சூரிய, சந்திர
புஷ்கரணிகள் இங்குள் ளன. இவை நீர் ஸ்தலம் என்பதை நிரூபிக்கின்றன. ஆடி அமாவாசை
தினத்தில் இம்மலையில் தீபம் ஏற்றப்படுகிறது. என வே இது நெருப்பு ஸ்தலம். அந்த
நெருப்பு காற்றில் ஆடாது (காளஹஸ்தியைப் போல). எனவே இது வாயுதலம். மலைக்கு
மேல், மலையைத் தொட்டாற்போல் பரந்து விரிந்த ஆகாயம். எனவே இது ஆகாயத்தலம். ஆக,
இது ஐந்து பூதங்களால் சூழப் பட்டதால், ஐவர்மலை என பெயர் பெற்றிருக்கலாம்.

தலச்சிறப்பு:பழநியில் முருகனின் நவபாஷாண சிலை அமைய காரணமான போகர் இந்த மலையில்
தான் வாழ்ந் தார். அவருக்கு ஒருமுறை பிரம்மஹத்தி தோஷம் பற்றியது. இதை போக்க,
அவர் யாகம் நடத்தினார். அப்போது தோன்றிய புவனேஸ்வரி அம்மன், ''நவபாஷாணத்தால்
முருகன் சிலை செய்து, அதை பழநியில் வைத்து வழிபடச் சொன்னாள். போகர்
அப்பொறுப்பை தன் சீடரான புலிப்பாணியிடம் ஒப்படைத்தார்.இம்மலையிலுள்ள குழந்தை
வேலப்பர் சன்னதிக்கும் தனி வரலாறு உண்டு. இம்மலையில் வசித்த முருகானந்தம்
என்பவரை குஷ்டநோய் பற்றியது. இதைப் போக்க குழந்தை வேலப் பர் சிலை செய்து அவர்
நிவாரணம் பெற்றார். மலையிலுள்ள பிள்ளையாரை உச்சிப் பிள்ளையார் என்கின்றனர்.

150 ஆண்டுகளுக்கு முன் நாராயணசாமி பரதேசி என்பவர், கவுரவர்கள் இங்கு
பாஞ்சாலியுடன் தங்கியதை உணர்த்தும் வகையில், பாஞ்சாலிக்கு சன்னதி
எழுப்பியுள்ளார். இவருக்கு அடுத்து பெரியசாமி என்பவரே இந்தக் கோயில் வெளி
உலகுக்கு தெரிய காரணமாக இருந்தவர். திரவுபதி என அழைக்கப்படும் இவளையே
ஐவர்மலையின் மூலவராக கொள்ள வேண்டியுள்ளது. பழநியைப் போல இங்கு இடும்பனுக்கும்
சன்னதி உள்ளது.யோகா, தியானம், தவம் செய்வோர் இங்கு வந்து பயிற்சி எடுத்து
மனஅமைதி பெறலாம்.

திருவிழா:மகாசிவராத்திரியன்று சுற்றுப்புற பதினெட்டு பட்டி மக்கள் சப்பரம்
எடுத்து விழா கொண்டாடுகின்றனர். ஆடி, தை அமாவாசை, மகாளய அமாவாசை ஆகியவை
முக்கியமானவை.

இருப்பிடம்:பழநியிலிருந்து மேற்கே 16 கி.மீ., தொலைவில் உள்ளது. பழநியிலிருந்து
கொழுமம் வழியாக உடுமலைப்பேட்டை செல்லும் பஸ்சில், வழியில் உள்ள
பாப்பம்பட்டியில் இற ங்கி கோயிலுக்கு செல்லலாம்.

கிருஷ்ணனின் அன்பைப் பெற்றவளும், அவர் நீராடிய போது துணி கொடுத்து உதவியவளுமான
பாஞ்சாலியை வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டும். முற்பிறவியில்
ஒருவருக்கு உதவி செய்தால் கூட, மறுபிறவியில் நமக்கு பல மடங்கு நன்மை கிடைக்க
வழியுண்டு என் பதை நிரூபித்த பெண் அவள்.

ஐவருடன் குடும்பம் நடத்தினாலும், யாரையும் புண்படுத்தாத பொறுமைசாலி அவள்.
அந்தப் பொறுமையும், பெருமையும் பெற பெண்களும் இத்தலத்திற்கு அவசியம் சென்று
வாருங்கள்.

இந்த குன்று, பழநி மலை போல் தோற்றமளிப்பது சிறப்பு. இதன் உண்மையான பெயர் அயிர
மலை.

இங்குள்ள மலை உச்சியில் மேற்கு, வடக்கு மூலையில் கோடையிலும் வற்றாத இயற்கையான
நீரூற்றுகள் இரண்டு உள்ளன. இக்குளங்களில் எப்போதும் அயிரை மீன்கள்
காணப்படுவதால், மக்களால் இம்மலை "அயிரை மலை' என்று அழைக்கப்பட்டது. இப்போதும்
குளங்களில் அயிரை மீன்கள் துள்ளி நீந்துவதன் அழகை கண்டு ரசிக்கலாம். பாண்டிய
மன்னரான வரகுண பாண்டியன் கால சமணர் மலை என்பதற்கு சான்றாக இங்கு 13 பிராமி
கல்வெட்டுகள் உள்ளன. தவிர, அழகிய 16 தீர்த்தங்கரர் சிற்பங்களும் உள்ளன.
அச்சிலைகளுக்கு கீழே சிலையை செய்வித்தோரின் பெயர்கள் கல்வெட்டில் உள்ளன. சமணர்
படுக்கைகள் வரிசைக்கு நான்கு, ஐந்து என்றிருக்கும். அதை வைத்துதான் இங்கு
பஞ்சபாண்டவர்கள் ஐவரும் வந்து தங்கினர் என மக்கள் கருதி, ஐவர் மலை என்ற பெயரை
உருவாக்கினர்.

முதல் குகையின் முகப்பில் காணப்படும் 16 தீர்த்தங்கரர் சிற்பங்களை தாண்டி,
வடக்கு மூலையில் அழகிய படிகளை உருவாக்கி உள்ளனர். சமணர் வாழ்ந்த மலையை தாண்டி
மேலே சென்றால் "வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி' என்ற பெயரில் உள்ள தியான
மண்டபத்தில் அணையா விளக்கு ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.இம்மண்டபத்தையொட்டி,
வடக்கே மலையில் ஏறினால் பழநி கோயில் போன்ற முருகன் கோயில் உள்ளது. இதன்
வளாகத்தின் பின்புறத்தில் உள்ள நவக்கிரகங்களை வேறு எங்கும் காணமுடியாது.
வட்டமான தூண் வடிவில், ஒவ்வொரு கிரகத்திற்கும் உண்டான கடவுள் சிலையையும்,
அதன்கீழே ஒன்பது ராசிக்குரிய அடையாளங்களையும் வடிவமைத்துள்ளனர்.

இங்குள்ள வற்றாத நீரூற்றை, திருமஞ்சன நீராக கோயிலுக்கு பயன்படுத்துகின்றனர்.
மலையின் நடுவே உச்சியில் பிள்ளையார் கோயில் உள்ளது.இம்மலை அடிவாரத்தில்
ஆலமரங்கள் வரிசையாக உள்ளன. அருகே பாண்டியர் காலத்தில் செய்விக்கப்பட்ட பெயர்
தெரியாத குறுநில மன்னர் ஒருவரின் சிலையும் உள்ளது. பிரபலமாகாத இம்மலை மிகச்
சிறந்ததொரு சுற்றுலாதலம்தான்



<http://groups.yahoo.com/subscribe/worldmalayaliclub/>


[image: Inline image 1]

*வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!*

*வாழிய பாரதமணித் திருநாடு!*



[image: No Buy Spongie (TY kind owner :-)] *v **a n a k k a m**  S u b b u*
 [image: No Buy Spongie (TY kind owner :-)]

-- 
You received this message because you are subscribed to the Google Groups 
"Thatha_Patty" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email 
to [email protected].
For more options, visit https://groups.google.com/d/optout.

Reply via email to